1 Samuel 20:30 in Tamil
அப்பொழுது சவுல் யோனத்தான் மேல் கோபமூண்டவனாகி, அவனைப் பார்த்து: இரண்டகமும் மாறுபாடுமுள்ளவளின் மகனே, நீ உனக்கு வெட்கமாகவும், உன் தாயின் மானத்திற்கு வெட்கமாகவும், ஈசாயின் மகனைத் தோழனாகத் தெரிந்துகொண்டிருக்கிறதை நான் அறியேனோ?
Appozhuthu savul yonaththaan mael kobamoondavanaagi, avanaip paarththu: irandagamum maarubaadumullavalin maganae, nee unakku vedkamaagavum, un thaayin maanaththirku vedkamaagavum, eesaayin maganaith thozhanaagath therinthugondirukkirathai naan ariyaeno?
1 Samuel 20:30 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது சவுல் யோனத்தான்மேல் கோபப்பட்டு, அவனைப் பார்த்து: கலகமும் முரட்டாட்டமும் உள்ளவளின் மகனே, நீ உனக்கு வெட்கமாகவும், உன் தாயின் மானத்திற்கு வெட்கமாகவும், ஈசாயின் மகனைத் தோழனாகத் தெரிந்து கொண்டிருக்கிறதை நான் அறியேனோ?
- Open Tamil Contemporary Version
- அதைக்கேட்ட சவுலுக்கு யோனத்தான்மேல் கோபம் மூண்டது. அவனிடம், “கேடுகெட்ட உண்மையற்றவளின் மகனே! நீ உன் வெட்கத்திற்கும் உன்னைப் பெற்ற தாயின் வெட்கத்திற்கும் ஏற்றபடியே, ஈசாயின் மகனோடு கூட்டுச்சேர்ந்திருக்கிறாய்.
- Tamil Easy Reading Version
- சவுல் யோனத்தான் மீது கோபமுற்று, “அடிபணிய மறுத்த கலகக்காரப் பெண்ணின் மகன் நீ, நீயும் அவளைப்போல் இருக்கிறாய், நீ தாவீதின் பக்கத்தில் உள்ளாய். நீ உனக்கும் உன் தாய்க்கும் அவமானத்தைத் தந்தாய்!
1 Samuel 20:30 in English
- King James Version (KJV)
- Then Saul’s anger was kindled against Jonathan, and he said unto him, Thou son of the perverse rebellious [woman], do not I know that thou hast chosen the son of Jesse to thine own confusion, and unto the confusion of thy mother’s nakedness?
- World English Bible (WEB)
- Then Saul’s anger burned against Jonathan, and he said to him, “You son of a perverse rebellious woman, don’t I know that you have chosen the son of Jesse to your own shame, and to the shame of your mother’s nakedness?
- American Standard Version (ASV)
- Then Saul’s anger was kindled against Jonathan, and he said unto him, Thou son of a perverse rebellious woman, do not I know that thou hast chosen the son of Jesse to thine own shame, and unto the shame of thy mother’s nakedness?
- Bible in Basic English (BBE)
- Then Saul was moved to wrath against Jonathan, and he said to him, You son of an evil and uncontrolled woman, have I not seen how you have given your love to the son of Jesse, to your shame and the shame of your mother?
- Darby Translation (DBY)
- And Saul's anger was kindled against Jonathan, and he said to him, Son of the perverse rebellious woman, do not I know that thou hast chosen the son of Jesse to thine own shame and to the shame of thy mother's nakedness?
- Webster's Bible (WBS)
- Then Saul's anger was kindled against Jonathan, and he said to him, Thou son of the perverse rebellious [woman] , do not I know that thou hast chosen the son of Jesse to thy own confusion, and to the confusion of thy mother's nakedness?
- Young's Literal Translation (YLT)
- And the anger of Saul burneth against Jonathan, and he saith to him, 'Son of a perverse rebellious woman! have I not known that thou art fixing on the son of Jesse to thy shame, and to the shame of the nakedness of thy mother?
Read in context
- 28யோனத்தான் சவுலுக்குப் பிரதியுத்தரமாக: பெத்லெகேம்மட்டும் போக, தாவீது என்னிடத்தில் வருந்திக்கேட்டு,
- 29அங்கே நான் போகவேண்டும்; எங்கள் குடும்பத்தார் ஊரிலே பலியிடப் போகிறார்கள்; என் தமையன் என்னை வரும்படி கட்டளையிட்டார்; உம்முடைய கண்களில் எனக்குத் தயைகிடைத்ததானால், நான் என் சகோதரரைப் பார்க்கிறதற்குப் போக எனக்கு உத்தரவு கொடும் என்றான்; இதனாலேதான் அவன் ராஜாவின் பந்திக்கு வரவில்லை என்றான்.
- 30அப்பொழுது சவுல் யோனத்தான் மேல் கோபமூண்டவனாகி, அவனைப் பார்த்து: இரண்டகமும் மாறுபாடுமுள்ளவளின் மகனே, நீ உனக்கு வெட்கமாகவும், உன் தாயின் மானத்திற்கு வெட்கமாகவும், ஈசாயின் மகனைத் தோழனாகத் தெரிந்துகொண்டிருக்கிறதை நான் அறியேனோ?
- 31ஈசாயின் மகன் பூமியின்மேல் உயிரோடிருக்கும் நாள்வரையும் நீயானாலும் உன் ராஜ்யபாரமானாலும் நிலைப்படுவதில்லை; இப்போதே அவனை அழைப்பித்து, என்னிடத்தில் கொண்டுவா. அவன் சாகவேண்டும் என்றான்.
- 32யோனத்தான் தன் தகப்பனாகிய சவுலுக்குப் பிரதியுத்தரமாக: அவன் ஏன் கொல்லப்படவேண்டும்? அவன் என்ன செய்தான் என்றான்.
Cross references
- Proverbs 21:24 நீதிமொழிகள் 21:24அகங்காரமும் இடும்புமுள்ளவனுக்குப் பரியாசக்காரனென்று பெயர், அவன் அகந்தையான சினத்தோடே நடக்கிறான்.
- James 1:19–20 யாக்கோபு 1:19–20ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்; மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே.
- Job 5:2 யோபு 5:2கோபம் நிர்மூடனைக் கொல்லும்; பொறாமை புத்தியில்லாதவனை அதம்பண்ணும்.
- Matthew 5:22 மத்தேயு 5:22நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்துக்கு ஏதுவாயிருப்பான்.
- Proverbs 19:12 நீதிமொழிகள் 19:12ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; அவனுடைய தயை புல்லின்மேல் பெய்யும் பனிபோலிருக்கும்.
- Proverbs 19:19 நீதிமொழிகள் 19:19கடுங்கோபி ஆக்கினைக்குள்ளாவான்; நீ அவனைத் தப்புவித்தால் திரும்பவும் தப்புவிக்கவேண்டியதாய் வரும்.
- Proverbs 14:29 நீதிமொழிகள் 14:29நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்; முற்கோபியோ புத்தியீனத்தைவிளங்கப்பண்ணுகிறான்.
- Ephesians 4:31 எபேசியர் 4:31சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களை விட்டு நீங்கக்கடவது.
- Proverbs 15:2 நீதிமொழிகள் 15:2ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்; மூடரின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும்.
- Ephesians 6:4 எபேசியர் 6:4பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக.
- Proverbs 25:28 நீதிமொழிகள் 25:28தன் ஆவியை அடக்காத மனுஷன் மதிலிடிந்த பாழான பட்டணம்போலிருக்கிறான்.
- Proverbs 27:3 நீதிமொழிகள் 27:3கல் கனமும், மணல் பாரமுமாயிருக்கும்; மூடனுடைய கோபமோ இவ்விரண்டிலும் பாரமாம்.
Original words (Hebrew)
- Saul’s · H7586שָׁאוּל Shâʼûwl
- anger · H639אַף ʼaph
- kindled · H2734חָרָה chârâh
- Jonathan · H3083יְהוֹנָתָן Yᵉhôwnâthân
- said · H559אָמַר ʼâmar
- son · H1121בֵּן bên
- perverse · H5753עָוָה ʻâvâh
- rebellious · H4780מַרְדּוּת mardûwth
- know · H3045יָדַע yâdaʻ
- chosen · H977בָּחַר bâchar
- son · H1121בֵּן bên
- Jesse · H3448יִשַׁי Yishay
- confusion · H1322בֹּשֶׁת bôsheth
- confusion · H1322בֹּשֶׁת bôsheth
- mother’s · H517אֵם ʼêm
- nakedness · H6172עֶרְוָה ʻervâh
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.