Ephesians 4:31 in Tamil
சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களை விட்டு நீங்கக்கடவது.
Sagalavithamaana kasappum, kobamum, moorkkamum, kookkuralum, thooshanamum, matra enthath thurkkunamum ungalai vittu neengakkadavathu.
Ephesians 4:31 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- எல்லாவிதமான கசப்பும், கோபமும், எரிச்சலும், கூக்குரலும், அவமதிப்பதும், மற்ற எல்லாக் கெட்டகுணமும் உங்களைவிட்டு நீங்கட்டும்.
- Open Tamil Contemporary Version
- எல்லா விதமான கசப்பு உணர்வுகள், சினம், கோபம், வாய்ச்சண்டை, அவதூறாய் பேசுதல் ஆகியவற்றையும், எல்லா விதமான தீங்கையும் விட்டுவிடுங்கள்.
- Tamil Easy Reading Version
- கசப்பும், கோபமும், மூர்க்கமும் அடையாதீர்கள். கோபத்தில் சத்தம் இடாதீர்கள். கடுஞ்சொற்களைச் சொல்லாதீர்கள். பாவங்களை செய்யாதீர்கள்.
Ephesians 4:31 in English
- King James Version (KJV)
- Let all bitterness, and wrath, and anger, and clamour, and evil speaking, be put away from you, with all malice:
- World English Bible (WEB)
- Let all bitterness, wrath, anger, outcry, and slander be put away from you, with all malice.
- American Standard Version (ASV)
- Let all bitterness, and wrath, and anger, and clamor, and railing, be put away from you, with all malice:
- Bible in Basic English (BBE)
- Let all bitter, sharp and angry feeling, and noise, and evil words, be put away from you, with all unkind acts;
- Darby Translation (DBY)
- Let all bitterness, and heat of passion, and wrath, and clamour, and injurious language, be removed from you, with all malice;
- Webster's Bible (WBS)
- Let all bitterness, and wrath, and anger, and clamor, and evil-speaking, be put away from you, with all malice:
- Young's Literal Translation (YLT)
- Let all bitterness, and wrath, and anger, and clamour, and evil-speaking, be put away from you, with all malice,
Read in context
- 29கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.
- 30அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்தஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்.
- 31சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களை விட்டு நீங்கக்கடவது.
- 32ஒருவருக்கொருவர் தயவாயும் மன உருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
Cross references
- Colossians 3:8 கொலோசெயர் 3:8இப்பொழுதோ கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்கள் வாயில் பிறக்கலாகாத தூஷணமும் வம்பு வார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள்.
- Ecclesiastes 7:9 பிரசங்கி 7:9உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே; மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும்.
- Titus 3:2–3 தீத்து 3:2–3ஒருவனையும் தூஷியாமலும், சண்டைபண்னாமலும், பொறுமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்தகுணத்தைக் காண்பிக்கவும் அவர்களுக்கு நினைப்பூட்டு. ஏனெனில், முற்காலத்திலே நாமும் புத்தியீனரும், கீழ்ப்படியாதவர்களும், வழிதப்பி நடக்கிறவர்களும், பலவித இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும் அடிமைப்பட்டவர்களும், துர்க்குணத்தோடும் பொறாமையோடும் ஜீவனம்பண்ணுகிறவர்களும், பகைக்கப்படத்தக்கவர்களும், ஒருவரையொருவர் பகைக்கிறவர்களுமாயிருந்தோம்.
- 1 Peter 2:1 1 பேதுரு 2:1இப்படியிருக்க, கர்த்தர் தயையுள்ளவரென்பதை நீங்கள் ருசிபார்த்ததுண்டானால்,
- James 1:19 யாக்கோபு 1:19ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்;
- Colossians 3:19 கொலோசெயர் 3:19புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள், அவர்கள்மேல் கசந்துகொள்ளாதிருங்கள்.
- Ephesians 4:26 எபேசியர் 4:26நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது;
- 1 John 3:12 1 யோவான் 3:12பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்தகாயீனைப்போலிருக்கவேண்டாம்; அவன் எதினிமித்தம் அவனைக் கொலைசெய்தான்? தன் கிரியைகள் பொல்லாதவைகளும், தன் சகோதரனுடைய கிரியைகள் நீதியுள்ளவைகளுமாயிருந்ததினிமித்தந்தானே.
- Leviticus 19:16–18 லேவியராகமம் 19:16–18உன் ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் கோள்சொல்லித் திரியாயாக; பிறனுடைய இரத்தப்பழிக்கு உட்படவேண்டாம்; நான் கர்த்தர். உன் சகோதரனை உன் உள்ளத்தில் பகையாயாக; பிறன்மேல் பாவம் சுமராதபடிக்கு அவனை எப்படியும் கடிந்துகொள்ளவேண்டும். பழிக்குப்பழி வாங்காமலும், உன் ஜனப்புத்திரர்மேல் பொறாமை கொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூறுவதுபோல் பிறனிலும் அன்புகூறுவாயாக; நான் கர்த்தர்.
- Proverbs 29:22 நீதிமொழிகள் 29:22கோபக்காரன் வழக்கைக் கொளுவுகிறான்; மூர்க்கன் பெரும்பாதகன்.
- Psalm 101:5 சங்கீதம் 101:5பிறனை இரகசியமாய் அவதூறுபண்ணுகிறவனைச் சங்கரிப்பேன்; மேட்டிமைக் கண்ணனையும் பெருநெஞ்சுள்ளவனையும் பொறுக்கமாட்டேன்.
Original words (Greek)
- Let · G142αἴρω aírō
- all · G3956πᾶς pâs
- bitterness · G4088πικρία pikría
- and · G2532καί kaí
- wrath · G2372θυμός thymós
- and · G2532καί kaí
- anger · G3709ὀργή orgḗ
- and · G2532καί kaí
- clamour · G2906κραυγή kraugḗ
- and · G2532καί kaí
- speaking · G988βλασφημία blasphēmía
- away · G142αἴρω aírō
- from · G575ἀπό apó
- you · G5216ὑμῶν hymōn
- with · G4862σύν sýn
- all · G3956πᾶς pâs
- malice · G2549κακία kakía
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.