2 Timothy 4:10 in Tamil
ஏனென்றால், தேமா இப்பிரபஞ்சத் தின்மேல் ஆசைவைத்து, என்னைவிட்டுப் பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்குப் போய்விட்டான்; கிரெஸ்கே கலாத்தியா நாட்டிற்கும், தீத்து தல்மாத்தியா நாட்டிற்கும் போய்விட்டார்கள்.
Aenendraal, thaemaa ippirabanjsath thinmael aasaivaiththu, ennaivittup pirinthu, thesalonikkae pattanaththukkup poyvittaan; kireskae kalaaththiyaa naattirkum, theeththu thalmaaththiyaa naattirkum poyvittaarkal.
2 Timothy 4:10 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஏனென்றால், தேமா இந்த உலகத்தின்மேல் ஆசைவைத்து, என்னைவிட்டுப் பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்திற்குப் போய்விட்டான்; கிரெஸ்கே கலாத்தியா நாட்டிற்கும், தீத்து தல்மாத்தியா நாட்டிற்கும் போய்விட்டார்கள்.
- Open Tamil Contemporary Version
- ஏனெனில் தேமா, இந்த உலகத்தில் ஆசைவைத்து என்னைக் கைவிட்டு தெசலோனிக்கேயாவுக்கு போய்விட்டான். கிரேஸ்கு, கலாத்தியாவுக்கும் தீத்து தல்மாத்தியாவுக்கும் போய்விட்டார்கள்.
- Tamil Easy Reading Version
- தேமா இந்த உலகை மிகுதியாக நேசித்தான். அதனாலேயே அவன் என்னை விட்டுப் போனான். அவன் தெசலோனிக்கே நகரத்துக்குப் போனான். கிரெஸ்கெ கலாத்தியாவுக்குப் போனான். தீத்து தல்மாத்தியாவுக்குப் போனான்.
2 Timothy 4:10 in English
- King James Version (KJV)
- For Demas hath forsaken me, having loved this present world, and is departed unto Thessalonica; Crescens to Galatia, Titus unto Dalmatia.
- World English Bible (WEB)
- for Demas left me, having loved this present world, and went to Thessalonica; Crescens to Galatia; and Titus to Dalmatia.
- American Standard Version (ASV)
- for Demas forsook me, having loved this present world, and went to Thessalonica; Crescens to Galatia, Titus to Dalmatia.
- Bible in Basic English (BBE)
- For Demas has gone away from me, for love of this present life, and has gone to Thessalonica: Crescens has gone to Galatia, Titus to Dalmatia.
- Darby Translation (DBY)
- for Demas has forsaken me, having loved the present age, and is gone to Thessalonica; Crescens to Galatia, Titus to Dalmatia.
- Webster's Bible (WBS)
- For Demas hath forsaken me, having loved this present world, and hath departed to Thessalonica; Crescens to Galatia, Titus to Dalmatia.
- Young's Literal Translation (YLT)
- for Demas forsook me, having loved the present age, and went on to Thessalonica, Crescens to Galatia, Titus to Dalmatia,
Read in context
- 8இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாக கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலைவிரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.
- 9நீ சீக்கிரமாய் என்னிடத்தில் வரும்படி ஜாக்கிரதைப்படு.
- 10ஏனென்றால், தேமா இப்பிரபஞ்சத் தின்மேல் ஆசைவைத்து, என்னைவிட்டுப் பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்குப் போய்விட்டான்; கிரெஸ்கே கலாத்தியா நாட்டிற்கும், தீத்து தல்மாத்தியா நாட்டிற்கும் போய்விட்டார்கள்.
- 11லூக்காமாத்திரம் என்னோடே இருக்கிறான். மாற்குவை உன்னோடே கூட்டிக் கொண்டுவா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன்.
- 12தீகிக்குவை நான் எபேசுவுக்கு அனுப்பினேன்.
Cross references
- 1 John 2:15–16 1 யோவான் 2:15–16உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின்பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.
- 2 Timothy 1:15 2 தீமோத்தேயு 1:15ஆசியாநாட்டிலிருக்கிற யாவரும், அவர்களில் பிகெல்லு எர்மொகெனே முதலாய் என்னைவிட்டு விலகினார்களென்று அறிந்திருக்கிறாய்.
- Colossians 4:14–15 கொலோசெயர் 4:14–15பிரியமான வைத்தியனாகிய லூக்காவும், தேமாவும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். லாவோதிக்கேயாவிலிருக்கிற சகோதரரையும், நிம்பாவையும், அவன் வீட்டில் கூடுகிற சபையையும் வாழ்த்துங்கள்.
- 1 John 5:4–5 1 யோவான் 5:4–5தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம். இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?
- Acts 16:6 அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:6அவர்கள் பிரிகியா கலாத்தியா நாடுகளைக் கடந்துபோனபோது, ஆசியாவிலே வசனத்தைச் சொல்லாதபடிக்குப் பரிசுத்தஆவியினாலே தடைபண்ணப்பட்டு,
- 2 Corinthians 2:13 2 கொரிந்தியர் 2:13நான் என் சகோதரனாகிய தீத்துவைக் காணாததினாலே, என் ஆவிக்கு அமைதலில்லாதிருந்தது. ஆதலால் நான் அவர்களிடத்தில் அனுப்புவித்துக்கொண்டு, மக்கெதோனியா நாட்டுக்குப் புறப்பட்டுப்போனேன்.
- Philemon 1:24 பிலேமோன் 1:24என் உடன்வேலையாட்களாகிய மாற்குவும், அரிஸ்தர்க்கும், தேமாவும், லூக்காவும் உமக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
- Philippians 2:21 பிலிப்பியர் 2:21மற்றவர்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குரியவைகளைத் தேடாமல், தங்களுக்குரியவைகளையே தேடுகிறார்கள்.
- Luke 14:26–27 லூக்கா 14:26–27யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான். தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
- 2 Timothy 4:16 2 தீமோத்தேயு 4:16நான் முதல்விசை உத்தரவுசொல்ல நிற்கையில் ஒருவனும் என்னோடேகூட இருக்கவில்லை, எல்லாரும் என்னைக் கைவிட்டார்கள்; அந்தக் குற்றம் அவர்கள்மேல் சுமராதிருப்பதாக.
- Luke 9:61–62 லூக்கா 9:61–62பின்பு வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, உம்மைப் பின்பற்றுவேன், ஆனாலும் முன்பு நான் போய் வீட்டிலிருக்கிறவர்களிடத்தில் அனுப்புவித்துக்கொண்டுவரும்படி எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான். அதற்கு இயேசு: கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார்.
- 1 Timothy 6:10 1 தீமோத்தேயு 6:10பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள்.
Original words (Greek)
- For · G1063γάρ gár
- Demas · G1214Δημᾶς Dēmâs
- forsaken · G1459ἐγκαταλείπω enkataleípō
- me · G3165μέ mé
- loved · G25ἀγαπάω agapáō
- this · G3588ὁ ho
- present · G3568νῦν nŷn
- world · G165αἰών aiṓn
- and · G2532καί kaí
- departed · G4198πορεύομαι poreúomai
- unto · G1519εἰς eis
- Thessalonica · G2332Θεσσαλονίκη Thessaloníkē
- Crescens · G2913Κρήσκης Krḗskēs
- to · G1519εἰς eis
- Galatia · G1053Γαλατία Galatía
- Titus · G5103Τίτος Títos
- unto · G1519εἰς eis
- Dalmatia · G1149Δαλματία Dalmatía
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.