Acts 10:1 in Tamil
இத்தாலியா பட்டாளம் என்னப்பட்ட பட்டாளத்திலே நூற்றுக்கு அதிபதியாகிய கொர்நேலியு என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் செசரியா பட்டணத்திலே இருந்தான்.
Iththaaliyaa pattaalam ennappatta pattaalaththilae nootrukku athibathiyaagiya kornaeliyu ennum paerkonda oru manushan sesariyaa pattanaththilae irunthaan.
Acts 10:1 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இத்தாலியா இராணுவத்தில் நூறுபேர்கொண்ட படைப்பிரிவிற்கு கொர்நேலியு என்னும் பெயர்கொண்ட ஒரு மனிதன் தலைவனாக இருந்தான். அவன் செசரியா பட்டணத்தில் வாழ்ந்து வந்தான்.
- Open Tamil Contemporary Version
- செசரியாவில் கொர்நேலியு என்னும் பெயருடைய ஒருவன் இருந்தான். அவன் இத்தாலியா இராணுவப்படைப் பிரிவில் நூற்றுக்குத் தலைவன்.
- Tamil Easy Reading Version
- செசரியா நகரில் கொர்நேலியு என்னும் மனிதன் இருந்தான். ரோமப் படையில் “இத்தாலிய” வகுப்பில் அவன் ஒரு படை அதிகாரியாக இருந்தான்.
Acts 10:1 in English
- King James Version (KJV)
- There was a certain man in Cæsarea called Cornelius, a centurion of the band called the Italian [band],
- World English Bible (WEB)
- Now there was a certain man in Caesarea, Cornelius by name, a centurion of what was called the Italian Regiment,
- American Standard Version (ASV)
- Now [there was] a certain man in Cæsarea, Cornelius by name, a centurion of the band called the Italian [band],
- Bible in Basic English (BBE)
- Now there was a certain man in Caesarea, named Cornelius, the captain of the Italian band of the army;
- Darby Translation (DBY)
- But a certain man in Caesarea, — by name Cornelius, a centurion of the band called Italic,
- Webster's Bible (WBS)
- There was a certain man in Cesarea, called Cornelius, a centurion of the band called the Italian [band] ,
- Young's Literal Translation (YLT)
- And there was a certain man in Caesarea, by name Cornelius, a centurion from a band called Italian,
Read in context
- 1இத்தாலியா பட்டாளம் என்னப்பட்ட பட்டாளத்திலே நூற்றுக்கு அதிபதியாகிய கொர்நேலியு என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் செசரியா பட்டணத்திலே இருந்தான்.
- 2அவன் தேவபக்தியுள்ளவனும் தன் வீட்டாரனைவரோடும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்து, ஜனங்களுக்கு மிகுந்த தருமங்களைச் செய்து, எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தான்.
- 3பகலில் ஏறக்குறைய ஒன்பதாம்மணி நேரத்திலே தேவனுடைய தூதன் தன்னிடத்தில் வரவும், கொர்நேலியுவே, என்று அழைக்கவும் பிரத்தியட்சமாய்த் தரிசனங்கண்டு,
Cross references
- Acts 27:1 அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:1நாங்கள் இத்தாலியா தேசத்துக்குக் கப்பல் ஏறிப் போகும்படி தீர்மானிக்கப்பட்டபோது, பவுலையும் காவலில் வைக்கப்பட்டிருந்த வேறுசிலரையும் அகுஸ்துபட்டாளத்தைச்சேர்ந்த யூலியு என்னும் பேர்கொண்ட நூற்றுக்கு அதிபதியினிடத்தில் ஒப்புவித்தார்கள்.
- Matthew 27:27 மத்தேயு 27:27அப்பொழுது, தேசாதிபதியின் போர்ச்சேவகர் இயேசுவைத் தேசாதிபதியின் அரமனையிலே கொண்டுபோய், போர்ச்சேவகரின் கூட்டம் முழுவதையும் அவரிடத்தில் கூடிவரச்செய்து,
- Acts 8:40 அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:40பிலிப்பு ஆசோத்திலே காணப்பட்டு, அவ்விடத்திலிருந்து பிரயாணம்பண்ணி, செசரியாவுக்கு வருகிறவரையில் சகல பட்டணங்களிலும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்துக்கொண்டுவந்தான்.
- Matthew 8:5–13 மத்தேயு 8:5–13இயேசு கப்பர்நகூமில் பிரவேசித்தபோது, நூற்றுக்கு அதிபதி ஒருவன் அவரிடத்தில் வந்து: ஆண்டவரே! என் வேலைக்காரன் வீட்டிலே திமிர்வாதமாய்க் கிடந்து கொடிய வேதனைப்படுகிறான் என்று அவரை வேண்டிக்கொண்டான். அதற்கு இயேசு: நான் வந்து அவனைச் சொஸ்தமாக்குவேன் என்றார். நூற்றுக்கு அதிபதி பிரதியுத்தரமாக: ஆண்டவரே! நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல; ஒருவார்த்தைமாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான். நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான், மற்றொருவனைவாவென்றால் வருகிறான், என் வேலைக்காரனை, இதைச் செய்யென்றால் செய்கிறான் என்றான். இயேசு இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டு, தமக்குப் பின்செல்லுகிறவர்களைநோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசவாசத்தைக் காணவில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அநேகர் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வந்து, பரலோகராஜ்யத்தில் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடே பந்தியிருப்பார்கள். ராஜ்யத்தின் புத்திரரோ புறம்பான இருளிலே தள்ளப்படுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். பின்பு இயேசு நூற்றுக்கு அதிபதியை நோக்கி: நீ போகலாம், நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது என்றார். அந்த நாழிகையிலே அவன் வேலைக்காரன் சொஸ்தமானான்.
- Acts 27:43 அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:43நூற்றுக்கு அதிபதி பவுலைக் காப்பாற்ற மனதாயிருந்து, அவர்களுடைய யோசனையைத் தடுத்து, நீந்தத்தக்கவர்கள் முந்திக் கடலில் விழுந்து கரையேறவும்,
- Matthew 27:54 மத்தேயு 27:54நூற்றுக்கு அதிபதியும், அவனோடேகூட இயேசுவைக் காவல்காத்திருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் சம்பவித்த காரியங்களையும் கண்டு, மிகவும் பயந்து: மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள்.
- Acts 25:1 அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:1பெஸ்து என்பவன் நாட்டிற்கு அதிபதியாக வந்து, மூன்றுநாளானபின்பு, செசரியாவிலிருந்து எருசலேமுக்குப் போனான்.
- John 18:3 யோவான் 18:3யூதாஸ் போர்ச்சேவகரின் கூட்டத்தையும் பிரதான ஆசாரியர் பரிசேயர் என்பவர்களால் அனுப்பப்பட்ட ஊழியக்காரரையும் கூட்டிக்கொண்டு, பந்தங்களோடும் தீவட்டிகளோடும் ஆயுதங்களோடும் அவ்விடத்திற்கு வந்தான்.
- Acts 23:33 அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:33அவர்கள் செசரியாபட்டணத்தில்சேர்ந்து, நிருபத்தைத் தேசாதிபதியினிடத்தில் கொடுத்து, பவுலையும் அவன் முன்பாக நிறுத்தினார்கள்.
- Acts 22:25 அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:25அந்தப்படி அவர்கள் அவனை வாரினால் அழுந்தக் கட்டுப்போது, பவுல் சமீபமாய் நின்ற நூற்றுக்கு அதிபதியை நோக்கி: ரோமனும் நியாயம் விசாரிக்கப் படாதவனுமாயிருக்கிற மனுஷனை அடிக்கிறது உங்களுக்கு நியாயமா என்றான்.
- Acts 27:31 அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:31பவுல் நூற்றுக்கு அதிபதியையும் சேவகரையும் நோக்கி: இவர்கள் கப்பலில் இராவிட்டால் நீங்கள் தப்பிப் பிழைக்கமாட்டீர்கள் என்றான்.
- Acts 25:13 அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:13சிலநாள் சென்றபின்பு, அகிரிப்பா ராஜாவும் பெர்னீக்கேயாளும் பெஸ்துவைக் கண்டுகொள்ளும்படி செசரியாவுக்கு வந்தார்கள்.
Original words (Greek)
- There · G1161δέ dé
- was · G2258ἦν ēn
- certain · G5100τὶς tìs
- man · G435ἀνήρ anḗr
- in · G1722ἐν en
- Cæsarea · G2542Καισάρεια Kaisáreia
- called · G3686ὄνομα ónoma
- Cornelius · G2883Κορνήλιος Kornḗlios
- centurion · G1543ἑκατοντάρχης hekatontárchēs
- of · G1537ἐκ ek
- band · G4686σπεῖρα speîra
- called · G2564καλέω kaléō
- Italian · G2483Ἰταλικός Italikós
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.