Isaiah 41:1 in Tamil
தீவுகளே, எனக்கு முன்பாக மவுனமாயிருங்கள்; ஜனங்கள் தங்கள் பெலனைப் புதிதாக்கிக்கொண்டு, சமீபித்து வந்து, பின்பு பேசக்கடவர்கள்; நாம் ஒருமிக்க நியாயாசனத்துக்கு முன்பாகச் சேருவோம்.
Theevugalae, enakku munpaaga mavunamaayirungal; janangal thangal pelanaip puthithaakkikkondu, sameebiththu vanthu, pinpu paesakkadavarkal; naam orumikka niyaayaasanaththukku munpaagas saeruvom.
Isaiah 41:1 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தீவுகளே, எனக்கு முன்பாக மவுனமாயிருங்கள்; மக்கள் தங்கள் பெலனைப் புதிதாக்கிக்கொண்டு, அருகில் வந்து, பின்பு பேசட்டும்; நாம் ஒருமிக்க நியாயாசனத்திற்கு முன்பாகச் சேருவோம்.
- Open Tamil Contemporary Version
- “தீவுகளே, நீங்கள் எனக்குமுன் மவுனமாயிருங்கள்! நாடுகள் தமது பெலனைப் புதுப்பிக்கட்டும்! அவர்கள் முன்வந்து பேசட்டும்; நாம் எல்லோரும் நியாயந்தீர்க்கும் இடத்தில் ஒன்று கூடுவோம்.
- Tamil Easy Reading Version
- கர்த்தர் கூறுகிறார், “தூரத்திலுள்ள நாடுகளே, அமைதியாக இருங்கள் என்னிடம் வாருங்கள்! நாடுகளே மறுபடியும் தைரியம் கொள்ளுங்கள். என்னிடம் வந்து பேசுங்கள். நாம் சந்தித்து கூடுவோம். யார் சரியென்று முடிவு செய்வோம்.
Isaiah 41:1 in English
- King James Version (KJV)
- Keep silence before me, O islands; and let the people renew [their] strength: let them come near; then let them speak: let us come near together to judgment.
- World English Bible (WEB)
- “Keep silent before me, islands, and let the peoples renew their strength. Let them come near, then let them speak. Let’s meet together for judgment.
- American Standard Version (ASV)
- Keep silence before me, O islands; and let the peoples renew their strength: let them come near; then let them speak; let us come near together to judgment.
- Bible in Basic English (BBE)
- Come quietly before me, O sea-lands, and let the peoples get together their strength: let them come near; then let them say what they have to say: let us put forward our cause against one another.
- Darby Translation (DBY)
- Keep silence before me, islands; and let the peoples renew [their] strength: let them come near; then let them speak: let us draw near together to judgment.
- Webster's Bible (WBS)
- Keep silence before me, O isles; and let the people renew [their] strength: let them come near; then let them speak: let us come near together to judgment.
- Young's Literal Translation (YLT)
- Keep silent towards Me, O isles, And the peoples pass on [to] power, They come nigh, then they speak, 'Together — to judgment we draw near.'
Read in context
- 1தீவுகளே, எனக்கு முன்பாக மவுனமாயிருங்கள்; ஜனங்கள் தங்கள் பெலனைப் புதிதாக்கிக்கொண்டு, சமீபித்து வந்து, பின்பு பேசக்கடவர்கள்; நாம் ஒருமிக்க நியாயாசனத்துக்கு முன்பாகச் சேருவோம்.
- 2கிழக்கிலிருந்து நீதிமானை எழுப்பி, தமது பாதபடியிலே வரவழைத்தவர் யார்? ஜாதிகளை அவனுக்கு ஒப்புக்கொடுத்து, அவனை ராஜாக்களுக்கு ஆண்டவனாக்கி, அவர்களை அவன் பட்டயத்துக்குத் தூசியும், அவன் வில்லுக்குச் சிதறடிக்கப்பட்டதாளடியுமாக்கி,
- 3அவன் அவர்களைத் துரத்தவும், தன் கால்கள் நடவாதிருந்த பாதையிலே சமாதானத்தோடே நடக்கவும் பண்ணினவர் யார்?
Cross references
- Isaiah 1:18 ஏசாயா 1:18வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள்பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்.
- Habakkuk 2:20 ஆபகூக் 2:20கர்த்தரோவென்றால், தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; பூமியெல்லாம் அவருக்கு முன்பாக மெளனமாயிருக்கக்கடவது.
- Zechariah 2:13 சகரியா 2:13மாம்சமான சகலமான பேர் களே, கர்த்தருக்கு முன்பாக மெளனமாயிருங்கள்; அவர் தமது பரிசுத்த வாசஸ்தலத்திலிருந்து எழுந்தருளினார் என்று சொல் என்றார்.
- Psalm 46:10 சங்கீதம் 46:10நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்; ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன்.
- Isaiah 41:6–7 ஏசாயா 41:6–7ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசை செய்து திடன்கொள் என்று சகோதரனுக்குச் சகோதரன் சொல்லுகிறான். சித்திரவேலைக்காரன் தட்டானையும், சுத்தியாலே மெல்லிய தகடு தட்டுகிறவன் அடைகல்லின்மேல் அடிக்கிறவனையும் உற்சாகப்படுத்தி, இசைக்கிறதற்கான பக்குவமென்று சொல்லி, அது அசையாதபடிக்கு அவன் ஆணிகளால் அதை இறுக்குகிறான்.
- Isaiah 11:11 ஏசாயா 11:11அக்காலத்திலே, ஆண்டவர் அசீரியாவிலும், எகிப்திலும், பத்ரோசிலும், எத்தியோப்பியாவிலும், பெர்சியாவிலும், சிநேயாரிலும், ஆமாத்திலும், சமுத்திரத் தீவுகளிலும், தம்முடைய ஜனத்தில் மீதியானவர்களை மீட்டுக்கொள்ளத் திரும்ப இரண்டாம்விசை தமது கரத்தை நீட்டி,
- Joel 3:10–11 யோவேல் 3:10–11உங்கள் மண்வெட்டிகளைப் பட்டயங்களாகவும், உங்கள் அரிவாள்களை ஈட்டிகளாகவும் அடியுங்கள்; பலவீனனும் தன்னைப் பலவான் என்று சொல்வானாக. சகல ஜாதிகளே, நீங்கள் சுற்றிலுமிருந்து ஏகமாய் வந்து கூடுங்கள்; கர்த்தாவே, நீரும் அங்கே உம்முடைய பராக்கிரமசாலிகளை இறங்கப்பண்ணுவீராக.
- Job 38:3 யோபு 38:3இப்போதும் புருஷனைப்போல் இடைகட்டிக்கொள்; நான் உன்னைக் கேட்பேன்; நீ எனக்கு உத்தரவு சொல்லு.
- Job 40:7–10 யோபு 40:7–10இப்போதும் புருஷனைப்போல நீ அரைகட்டிக்கொள்; நான் உன்னைக் கேட்பேன்; நீ எனக்கு உத்தரவு சொல்லு. நீ என் நியாயத்தை அவமாக்குவாயோ? நீ உன்னை நீதிமானாக்கிக்கொள்ளும்படிக்கு என்மேல் குற்றஞ்சுமத்துவாயோ? தேவனுடைய புயத்தைப்போல் உனக்குப் புயமுண்டோ? அவரைப் போல் இடிமுழக்கமாய்ச் சத்தமிடக்கூடுமோ? இப்போதும் நீ முக்கியத்தாலும்மகத்துவத்தாலும் உன்னை அலங்கரித்து, மகிமையையும் கனத்தையும் தரித்துக்கொண்டு,
- Isaiah 34:1 ஏசாயா 34:1ஜாதிகளே, கேட்கிறதற்குக் கிட்டிவாருங்கள்; ஜனங்களே, கவனியுங்கள்; பூமியும் அதின் நிறைவும், பூச்சக்கரமும் அதில் உற்பத்தியான யாவும் கேட்கக்கடவது.
- Isaiah 41:21–22 ஏசாயா 41:21–22உங்கள் வழக்கைக் கொண்டுவாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் பலமான நியாயங்களை வெளிப்படுத்துங்கள் என்று யாக்கோபின் ராஜா உரைக்கிறார். அவர்கள் அவைகளைக் கொண்டுவந்து, சம்பவிக்கப்போகிறவைகளை நமக்குத் தெரிவிக்கட்டும்; அவைகளில் முந்தி சம்பவிப்பவைகள் இன்னவைகளென்று சொல்லி, நாம் நம்முடைய மனதை அவைகளின்மேல் வைக்கும்படிக்கும், பிந்தி சம்பவிப்பவைகளையும் நாம் அறியும்படிக்கும் நமக்குத் தெரிவிக்கட்டும்; வருங்காரியங்களை நமக்கு அறிவிக்கட்டும்.
- Micah 6:1–3 மீகா 6:1–3கர்த்தர் சொல்லுகிறதைக் கேளுங்கள்; நீ எழுந்து, பர்வதங்களுக்குமுன் உன் வழக்கைச் சொல்; மலைகள் உன் சத்தத்தைக் கேட்கக்கடவது. பர்வதங்களே, பூமியின் உறுதியான அஸ்திபாரங்களே, கர்த்தருடைய வழக்கைக் கேளுங்கள்; கர்த்தருக்கு அவர் ஜனத்தோடே வழக்கு இருக்கிறது; இஸ்ரவேலோடே அவர் வழக்காடுவார். என் ஜனமே, நான் உனக்கு என்ன செய்தேன்? நான் எதினால் உன்னைவிசனப்படுத்தினேன்? எனக்கு எதிரே உத்தரவு சொல்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.