Luke 1:58 in Tamil
கர்த்தர் அவளிடத்தில் தம்முடைய இரக்கத்தை விளங்கப்பண்ணினாரென்று அவளுடைய அயலகத்தாரும் பந்துஜனங்களும் கேள்விப்பட்டு, அவளுடனேகூடச்சந்தோஷப்பட்டார்கள்.
Karththar avalidaththil thammudaiya irakkaththai vilangappanninaarendru avaludaiya ayalagaththaarum panthujanangalum kaelvippattu, avaludanaegoodachanthoshappattaarkal.
Luke 1:58 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கர்த்தர் அவள்மேல் எவ்வளவு இரக்கமாக இருந்தார் என்று அவள் அருகில் வசிப்பவர்களும் சொந்தங்களும் கேள்விப்பட்டு, அவளோடு சேர்ந்து சந்தோஷப்பட்டார்கள்.
- Open Tamil Contemporary Version
- அவளுடைய அயலவர்களும் உறவினர்களும் கர்த்தர் அவளுக்குப் பெரிதான இரக்கம் காண்பித்திருக்கிறார் என்று கேள்விப்பட்டபோது, அவளுடன்கூட மகிழ்ச்சி அடைந்தார்கள்.
- Tamil Easy Reading Version
- அவளது அக்கம் பக்கத்தாரும் உறவினரும் கர்த்தர் அவளுக்குக் கருணைக் காட்டியதை கேள்விப்பட்டனர். அதைக்குறித்து மகிழ்ச்சியடைந்தனர்.
Luke 1:58 in English
- King James Version (KJV)
- And her neighbours and her cousins heard how the Lord had shewed great mercy upon her; and they rejoiced with her.
- World English Bible (WEB)
- Her neighbors and her relatives heard that the Lord had magnified his mercy toward her, and they rejoiced with her.
- American Standard Version (ASV)
- And her neighbors and her kinsfolk heard that the Lord had magnified his mercy towards her; and they rejoiced with her.
- Bible in Basic English (BBE)
- And it came to the ears of her neighbours and relations that the Lord had been very good to her, and they took part in her joy.
- Darby Translation (DBY)
- And her neighbours and kinsfolk heard that [the] Lord had magnified his mercy with her, and they rejoiced with her.
- Webster's Bible (WBS)
- And her neighbors and her cousins heard that the Lord had shown great mercy upon her; and they rejoiced with her.
- Young's Literal Translation (YLT)
- and the neighbours and her kindred heard that the Lord was making His kindness great with her, and they were rejoicing with her.
Read in context
- 56மரியாள் ஏறக்குறைய மூன்றுமாதம் அவளுடனே இருந்து, தன் வீட்டுக்குத் திரும்பிப்போனாள்.
- 57எலிசபெத்துக்குப் பிரசவகாலம் நிறைவேறினபோது அவள் ஒரு புத்திரனைப் பெற்றாள்.
- 58கர்த்தர் அவளிடத்தில் தம்முடைய இரக்கத்தை விளங்கப்பண்ணினாரென்று அவளுடைய அயலகத்தாரும் பந்துஜனங்களும் கேள்விப்பட்டு, அவளுடனேகூடச்சந்தோஷப்பட்டார்கள்.
- 59எட்டாம்நாளிலே பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணும்படிக்கு அவர்கள் வந்து, அதின் தகப்பனுடைய நாமத்தின்படி அதற்குச் சகரியா என்றுபேரிடப்போனார்கள்.
- 60அப்பொழுது அதின் தாய்: அப்படியல்ல, அதற்கு யோவான் என்று பேரிட வேண்டும் என்றாள்.
Cross references
- Romans 12:15 ரோமர் 12:15சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள்; அழுகிறவர்களுடனே அழுங்கள்.
- Psalm 113:9 சங்கீதம் 113:9மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி, வீட்டிலேகுடியிருக்கப்பண்ணுகிறார். அல்லேலூயா.
- Ruth 4:14–17 ரூத் 4:14–17அப்பொழுது ஸ்திரீகள் நகோமியைப் பார்த்து: சுதந்தரவாளி அற்றுப்போகாதபடிக்கு இன்று உனக்குத் தயைசெய்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவன் பேர் இஸ்ரவேலிலே பிரபலமாகக்கடவது. அவன் உன் ஆத்துமாவுக்கு ஆறுதல் செய்கிறவனும், உன் முதிர்வயதிலே உன்னை ஆதரிக்கிறவனுமாயிருக்கக்கடவன்; உன்னைச் சிநேகித்து, ஏழு குமாரரைப்பார்க்கிலும் உனக்கு அருமையாயிருக்கிற உன் மருமகள் அவனைப் பெற்றாளே என்றார்கள். நகோமி அந்தப் பிள்ளையை எடுத்து, தன் மடியிலே வைத்து, அதை வளர்க்கிற தாயானாள். அயல்வீட்டுக்காரிகள் நகோமிக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்தது என்று வாழ்த்தி, அதற்கு ஓபேத் என்று பேரிட்டார்கள்; அவன் தாவீதின் தகப்பனாகிய ஈசாயின் தகப்பன்.
- Luke 1:14 லூக்கா 1:14உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பினிமித்தம் அநேகர் சந்தோஷப்படுவார்கள்.
- Luke 1:25 லூக்கா 1:25எனக்கு இப்படிச் செய்தருளினார் என்று சொல்லி, ஐந்து மாதம் வெளிப்படாதிருந்தாள்.
- 1 Corinthians 12:26 1 கொரிந்தியர் 12:26ஆதலால் ஒரு அவயவம் பாடுபட்டால் எல்லா அவயவங்களும் கூடப் பாடுபடும்; ஒரு அவயவம் மகிமைப்பட்டால் எல்லா அவயவங்களும் கூடச் சந்தோஷப்படும்.
- Isaiah 66:9–10 ஏசாயா 66:9–10பெறப்பண்ணுகிறவராகிய நான் பெறச்செய்யாமல் இருப்பேனோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; பிரசவிக்கப்பண்ணுகிறவராகிய நான் பிரசவத்தைத் தடுப்பேனோ என்று உன் தேவன் சொல்லுகிறார். எருசலேமை நேசிக்கிற நீங்களெல்லாரும் அவளோடேகூடச் சந்தோஷப்பட்டு, அவளைக்குறித்துக் களிகூருங்கள்; அவள்நிமித்தம் துக்கித்திருந்த நீங்களெல்லாரும் அவளோடே கூட மிகவும் மகிழுங்கள்.
- Genesis 19:19 ஆதியாகமம் 19:19உமது கண்களில் உமது அடியேனுக்குக் கிருபை கிடைத்ததே; என் பிராணனைக் காக்கத் தேவரீர் எனக்குச் செய்த கிருபையைப் பெரிதாக விளங்கப்பண்ணினீர்; மலைக்கு ஓடிப்போக என்னால் முடியாது; தீங்கு என்னைத் தொடரும், நான் மரித்துப்போவேன்.
- Genesis 21:6 ஆதியாகமம் 21:6அப்பொழுது சாராள்: தேவன் என்னை நகைக்கப்பண்ணினார்; இதைக் கேட்கிற யாவரும் என்னோடேகூடநகைப்பார்கள்.
Original words (Greek)
- And · G2532καί kaí
- her · G846αὐτός autós
- neighbours · G4040περίοικος períoikos
- and · G2532καί kaí
- her · G846αὐτός autós
- cousins · G4773συγγενής syngenḗs
- heard · G191ἀκούω akoúō
- how · G3754ὅτι hóti
- Lord · G2962κύριος kýrios
- great · G3170μεγαλύνω megalýnō
- mercy · G1656ἔλεος éleos
- upon · G3326μετά metá
- her · G846αὐτός autós
- and · G2532καί kaí
- rejoiced · G4796συγχαίρω synchaírō
- her · G846αὐτός autós
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.