Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 63 in Tamil

Present
  1. 1

    தேவனே, நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும்தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது, என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது.

    A Psalm of David, when he was in the wilderness of Judah. O God, thou [art] my God; early will I seek thee: my soul thirsteth for thee, my flesh longeth for thee in a dry and thirsty land, where no water is;

  2. 2

    இப்படியே பரிசுத்த ஸ்தலத்தில் உம்மைப்பார்க்க ஆசையாயிருந்து, உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டேன்.

    To see thy power and thy glory, so [as] I have seen thee in the sanctuary.

  3. 3

    ஜீவனைப்பார்க்கிலும் உமது கிருபை நல்லது; என் உதடுகள் உம்மைத் துதிக்கும்.

    Because thy lovingkindness [is] better than life, my lips shall praise thee.

  4. 4

    என் ஜீவனுள்ளமட்டும் நான் உம்மைத் துதித்து, உமது நாமத்தைச் சொல்லிக் கையெடுப்பேன்.

    Thus will I bless thee while I live: I will lift up my hands in thy name.

  5. 5

    நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல என் ஆத்துமா திருப்தியாகும்; என் வாய் ஆனந்தக்களிப்புள்ள உதடுகளால் உம்மைப் போற்றும்.

    My soul shall be satisfied as [with] marrow and fatness; and my mouth shall praise [thee] with joyful lips:

  6. 6

    என் படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது, இராச்சாமங்களில் உம்மைத் தியானிக்கிறேன்.

    When I remember thee upon my bed, [and] meditate on thee in the [night] watches.

  7. 7

    நீர் எனக்குத் துணையாயிருந்ததினால், உமது செட்டைகளின் நிழலிலேகளிகூருகிறேன்.

    Because thou hast been my help, therefore in the shadow of thy wings will I rejoice.

  8. 8

    என் ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது; உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது.

    My soul followeth hard after thee: thy right hand upholdeth me.

  9. 9

    என் பிராணனை அழிக்கத் தேடுகிறவர்களோ, பூமியின் தாழ்விடங்களில் இறங்குவார்கள்.

    But those [that] seek my soul, to destroy [it], shall go into the lower parts of the earth.

  10. 10

    அவர்கள் பட்டயத்தால் விழுவார்கள்; நரிகளுக்கு இரையாவார்கள்.

    They shall fall by the sword: they shall be a portion for foxes.

  11. 11

    ராஜாவோ தேவனில் களிகூருவார்; அவர்பேரில் சத்தியம்பண்ணுகிறவர்கள் யாவரும் மேன்மைபாராட்டுவார்கள்; பொய் பேசுகிறவர்களின் வாய் அடைக்கப்படும். (இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின்சங்கீதம்.)

    But the king shall rejoice in God; every one that sweareth by him shall glory: but the mouth of them that speak lies shall be stopped.

All chapters of Psalms · Tamil Bible

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

King James Version: public domain.