Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ananda Mazhaiyil Nanilam Mahizha Lyricsஆனந்த மழையில் நானிலம் மகிழ மன்னவன் எழுகின்றான்

Artist to be confirmedPraiseWorship

Ananda Mazhaiyil Nanilam Mahizha Lyrics in Tamil & English

Chorus

ஆனந்த மழையில் நானிலம் மகிழ மன்னவன் எழுகின்றான் (×2)

ஆயிரம் நிலவொளியோ எனை ஆண்டிடும் இறையரசோ

அவனியை மாற்றிடும் அருட்கடலோ

Aanantha mazhaiyil naanilam magizha mannavan ezhugindraan (×2)

Aayiram nilavoliyo enai aandidum iraiyaraso

Avaniyai maatridum arudkadalo

Verse 1

மன்னவனே என் இதயம் பொன்னடி பதிக்கின்றான்

விண்ணகமே என் இதயம் அன்புடன் அழைக்கின்றான் (×2)

இனி என் வாழ்விலே ஒரு பொன்னாளிதே

பண்பாடவோ என்றும் கொண்டாவோ

மலர்கின்ற புதுவாழ்விலே இனி சுகமான புதுராகமே

என்றென்றும் உண்டாகும் பேரின்பமே (×3)

Mannavanae en ithayam ponnadi pathikkindraan

Vinnagamae en ithayam anpudan azhaikkindraan (×2)

Ini en vaazhvilae oru ponnaalithae

Panpaadavo endrum kondaavo

Malarkindra puthuvaazhvilae ini sugamaana puthuraagamae

Endrendrum undaagum paerinpamae (×3)

Verse 2

சேற்றினிலே தாமரையாய் தேர்ந்தென்னை எடுத்தானே

காற்றிலே நறுமணமாய் கலந்தென்னில் நிறைந்தானே (×2)

எனில் ஒன்றாகினான் நான் நன்றாகினேன்

பணிவாழ்வுக்காய் என்னைப் பரிசாக்கினேன்

மலர்கின்ற புதுவாழ்விலே இனி சுகமான புதுராகமே

என்றென்றும் உண்டாகும் பேரின்பமே (×3)

Saetrinilae thaamaraiyaay thaernthennai eduththaanae

Kaatrilae narumanamaay kalanthennil nirainthaanae (×2)

Enil ondraaginaan naan nandraaginaen

Panivaazhvukkaay ennaip parisaakkinaen

Malarkindra puthuvaazhvilae ini sugamaana puthuraagamae

Endrendrum undaagum paerinpamae (×3)

Ananda Mazhaiyil Nanilam Mahizha PPT – PowerPoint Slides

Download ஆனந்த மழையில் நானிலம் மகிழ மன்னவன் எழுகின்றான் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A