Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Anbir Sirantha Kristhaiyaney Lyricsஅன்பிற் சிறந்த கிறிஸ்தையனே

Artist to be confirmedWorshipHoly SpiritPraise

Anbir Sirantha Kristhaiyaney Lyrics in Tamil & English

Chorus

அன்பிற் சிறந்த கிறிஸ் தையனே!

இயேசு மெய்யனே! மா தூயனே – திருச்சுதனே!

சரணங்கள்

Anpir sirantha kiris thaiyanae!

Yesu meyyanae! maa thooyanae – thiruchuthanae!

Saranangal

Verse 1

உன்னாவியின் பலத்தால் என்னை நிரப்புமேன்

துன்மார்க்கன் மனந்தனைத் தூயதா யாக்குமேன்!

சன்மார்க்கத்தோடுன் அன்பை நான்பெறச் செய்யுமேன்,

சத்தியம் நிறைந்த தேவ மைந்தனே, எந்தன் கர்த்தனே

பரிசுத்தனே! என தத்தனே!

Unnaaviyin palaththaal ennai nirappumaen

Thunmaarkkan mananthanaith thooyathaa yaakkumaen!

Sanmaarkkaththodun anpai naanperas seyyumaen,

Saththiyam niraintha thaeva mainthanae, enthan karththanae

Parisuththanae! ena thaththanae!

Verse 2

மன்னிப் படைந்தாய் என்ற மா தொனிதானே

என்னகந்தனில் கேட்க இன்பங்கொண்டேனே;

உன் பதிக்கென எந்தன் உள்ளம் தந்தேனே!

வந்தென்னை யாளு மெந்தன் பரனே! தேவ சுதனே!

அரும் போதனே! என தரணே

Mannip padainthaay endra maa thonithaanae

Ennaganthanil kaedka inpangondaenae;

Un pathikkena enthan ullam thanthaenae!

Vanthennai yaalu menthan paranae! thaeva suthanae!

Arum pothanae! ena tharanae

Verse 3

தேற்றரவாள னெனில் தினம் வசிப்பாரே?

ஆற்றல் செய் தெந்தனை அணைத்துக்கொள்வாரே!

போற்ற என் னகம் தேவ வீடாக்குவாரே!

புண்ய மிது எனது புகழ்ச்சி! மன மகிழ்ச்சி!

இல்லை இகழ்ச்சி! இதென் சாட்சி!

Thaetraravaala nenil thinam vasippaarae?

Aatral sey thenthanai anaiththukkolvaarae!

Potra en nagam thaeva veedaakkuvaarae!

Punya mithu enathu pugazhchi! mana magizhchi!

Illai igazhchi! ithen saatchi!

Verse 4

தேவ ராஜ்ய மெந்தன் சொந்தமதாமே!

பாவி எனக்கு வந்த மா பங்குதாமே!

ஜீவ நாதனோ டங்கு சுகித்திருப்பேனே!

ஆவலா யங்கு வர நானே! அருள் கோனே!

என் சீமானே! நீ தானே!

Thaeva raajya menthan sonthamathaamae!

Paavi enakku vantha maa panguthaamae!

Jeeva naathano dangu sugiththiruppaenae!

Aavalaa yangu vara naanae! arul konae!

En seemaanae! nee thaanae!

Anbir Sirantha Kristhaiyaney PPT – PowerPoint Slides

Download அன்பிற் சிறந்த கிறிஸ்தையனே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A