Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Annamae Zion Kannae Lyricsஅன்னமே சீயோன் கண்ணே

Artist to be confirmedCross

Annamae Zion Kannae Lyrics in Tamil & English

Verse 1

அன்னமே சீயோன் கண்ணே அன்பரதோ போறாரடி

மன்னவனார் நமக்காகத் தம்மை பலியிடப் போறார்.

Annamae seeyon kannae anparatho poraaradi

Mannavanaar namakkaagath thammai paliyidap poraar.

Verse 2

இன்னும் என்ன செய்யப் போறார் கன்னியரே சோரிசிந்த

என்னருமை ஏசுபரன் சின்னப்படப் போறாரடி.

Innum enna seyyap poraar kanniyarae sorisintha

Ennarumai aesubaran sinnappadap poraaradi.

Verse 3

பன்னிரு சீடர்களில் பண ஆசைகொண்ட யூதாஸ்

மன்னர் புகழ் தேசிகரை காட்டிக் கொடுக்கத் துணிந்தான்.

Panniru seedarkalil pana aasaigonda yoothaas

Mannar pugazh thaesigarai kaattik kodukkath thuninthaan.

Verse 4

ஆகடிய யூதர் கூடி அண்ணல் திருக்கரத்தைக் கட்டி

தேகம் நொந்து துடிக்க ஓங்கி ஓங்கி அடித்தார்.

Aagadiya yoothar koodi annal thirukkaraththaik katti

Thaegam nonthu thudikka ongi ongi adiththaar.

Verse 5

பித்தனென்று வெள்ளை அரைச்சட்டை ஒன்று தானுடுத்தி

பேதக ஏரோதே அவன் பேசிப் பரிகாசம் செய்தான்.

Piththanendru vellai araichattai ondru thaanuduththi

Paethaga aerothae avan paesip parigaasam seythaan.

Verse 6

குப்புற விழுந்தே துயர் அற்புதனடைந்தாரடி

எப்பொருளான திரியேக வஸ்து நமக்காக

Kuppura vizhunthae thuyar arputhanadainthaaradi

Epporulaana thiriyaega vasthu namakkaaga

Verse 7

கொல்கதா மலைதனிலே குருசதிலேதான் மரிக்க

கோதில்லா நீதிபரன் போறார் அதோ பார் சகியே

Kolkathaa malaithanilae kurusathilaethaan marikka

Kothillaa neethibaran poraar atho paar sagiyae

Verse 8

பாரச் சிலுவை சுமந்து பாதகரோடே நடந்து

போற துயரறியப் பொங்கி மிக மனம் நொறுங்கி

Paaras siluvai sumanthu paathagarodae nadanthu

Pora thuyarariyap pongi miga manam norungi

Verse 9

வாசகன் ஏசு திருபாடுகளைத் தானுணர்ந்து

நேசமதாய்த் தாசர்களும் சாற்றித்துதி பாடிடவே

Vaasagan aesu thirubaadugalaith thaanunarnthu

Naesamathaayth thaasarkalum saatriththuthi paadidavae

Annamae Zion Kannae PPT – PowerPoint Slides

Download அன்னமே சீயோன் கண்ணே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A