Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Annaiyae Arokkiya Annaiyae Lyricsஅன்னையே ஆரோக்கிய அன்னையே அழகுள்ள வேளையில்

Artist to be confirmedPraiseFaithHealing

Annaiyae Arokkiya Annaiyae Lyrics in Tamil & English

Chorus

அன்னையே ஆரோக்கிய அன்னையே அழகுள்ள வேளையில்

ஆலயம் கொண்ட எங்கள் அன்னையே (×2)

Annaiyae aarokkiya annaiyae azhagulla vaelaiyil

Aalayam konda engal annaiyae (×2)

Verse 1

கடலின் அலைகள் காவியம் பாடும்

கார்முகில் கூட்டம் கருணையைக் கூறும் (×2)

மடல்விரி தாழையும் மணமது வீசும் (×2)

மாதா உந்தன் மகிமையைச் சொல்லும்

Kadalin alaigal kaaviyam paadum

Kaarmugil koottam karunaiyaik koorum (×2)

Madalviri thaazhaiyum manamathu veesum (×2)

Maathaa unthan magimaiyais sollum

Verse 2

பன்னிரு விண்மீன் முடியினைக் கொண்டாய்

பாதத்திற் கணியாய் நிலவினைப் பதித்தாய் (×2)

உன்னிரு கரங்களில் உலகத்தின் ஒளியாம் (×2)

உத்தமர் இயேசு பாலனைக் கொண்டாய்

Panniru vinmeen mudiyinaik kondaay

Paathaththir kaniyaay nilavinaip pathiththaay (×2)

Unniru karangalil ulagaththin oliyaam (×2)

Uththamar yesu paalanaik kondaay

Verse 3

உன் திருப்பாதம் தேடியே வந்தோம்

உன் எழில் கண்டு உள்ளத்தைத் தந்தோம் (×2)

கண்ணென எம்மைக் காத்தருள்வாயே (×2)

கர்த்தரின் தாயே துணை என்றும் நீயே

Un thiruppaatham thaediyae vanthom

Un ezhil kandu ullaththaith thanthom (×2)

Kannena emmaik kaaththarulvaayae (×2)

Karththarin thaayae thunai endrum neeyae

Annaiyae Arokkiya Annaiyae PPT – PowerPoint Slides

Download அன்னையே ஆரோக்கிய அன்னையே அழகுள்ள வேளையில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A