Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Endan koodarathil Lyricsஎந்தன் கூடாரத்தில்

Artist to be confirmedFaith

Endan koodarathil Lyrics in Tamil & English

Chorus

எந்தன் கூடாரத்தில்

வாதைகள் வருவதில்லை

எங்கள் குடும்பங்களில்

தீமைகள் தொடர்வதில்லை

எதுவும் என்னை தொட முடியாது

இயேசுவே எங்கள் அடைக்கலம் (×2)

Enthan koodaaraththil

Vaathaigal varuvathillai

Engal kudumbangalil

Theemaigal thodarvathillai

Ethuvum ennai thoda mudiyaathu

Yesuvae engal adaikkalam (×2)

Verse 1

வழிகளிலெங்கும் காக்கும்படி

தூதர்கள் எனக்குண்டு (×2)

பாதம் கல்லில் மோதாமல்

தூதர்கள் தூக்கிடுவார் (×2)

Vazhigalilengum kaakkumbadi

Thootharkal enakkundu (×2)

Paatham kallil mothaamal

Thootharkal thookkiduvaar (×2)

Verse 2

ஆயிரம் பதினாயிரம் பேர்

எனக்கெதிராக வந்தாலும் (×2)

ஏழேழு வழிகளில் சத்ரு

ஒடியேப்போவார்கள் (×2)

Aayiram pathinaayiram paer

Enakkethiraaga vanthaalum (×2)

Aezhaezhu vazhigalil sathru

Odiyaeppovaarkal (×2)

Verse 3

இரவினிலுண்டாகும் பயங்கரம்

பகலில் பறக்கும் அம்பும் (×2)

என்னை சேதப்படுத்தாமல்

செட்டைகளால் மூடுவார் (×2)

Iravinilundaagum payangaram

Pagalil parakkum ambum (×2)

Ennai saethappaduththaamal

Settaigalaal mooduvaar (×2)

Verse 4

சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்

நடந்தேறிச் செல்லுவேன் (×2)

சாத்தானின் சகல வல்லமையை

என்றும் வென்றிடுவேன் (×2)

Singaththin maelum paambin maelum

Nadanthaeris selluvaen (×2)

Saaththaanin sagala vallamaiyai

Endrum vendriduvaen (×2)

Verse 5

ஆபத்து நேரம் கூப்பிடும் எனக்கு

எப்பவும் பதிலுண்டு (×2)

எனக்கு துணையாயிருந்து

என்றும் காத்திடுவார் (×2)

Aabaththu naeram kooppidum enakku

Eppavum pathilundu (×2)

Enakku thunaiyaayirunthu

Endrum kaaththiduvaar (×2)

Endan koodarathil PPT – PowerPoint Slides

Download எந்தன் கூடாரத்தில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E