Engal Tharisanathai Engal Lyrics in Tamil & English
Chorus
எங்கள் தரிசனத்தை எங்கள் ஊழியத்தில்
நிறைவேற்றிடும் ஆவியானவரே
தரிசனம் தந்தவரே... நிறைவேற்றிட உதவிடுமே...
Engal tharisanaththai engal oozhiyaththil
Niraivaetridum aaviyaanavarae
Tharisanam thanthavarae... niraivaetrida uthavidumae...
Verse 1
நாங்கள் இழந்து போன உந்தன் வல்லமையை
திரும்பவும் தந்திடுமே
நாங்கள் மறந்து போன தரிசனத்தை
மீண்டும் புதுப்பித்திடும்
Naangal izhanthu pona unthan vallamaiyai
Thirumbavum thanthidumae
Naangal maranthu pona tharisanaththai
Meendum puthuppiththidum
Verse 2
எங்கள் பார்வையை ஒரு விசை தெளிவாக்கிடும்
நோக்கத்தை நேராக்கிடும்
உந்தன் சித்தத்தை விட்டு விலகிடாமல்
காத்துக் கொள்ளும் தேவனே
Engal paarvaiyai oru visai thelivaakkidum
Nokkaththai naeraakkidum
Unthan siththaththai vittu vilagidaamal
Kaaththuk kollum thaevanae
Verse 3
எங்கள் சுய பலத்தை நம்பி தோற்றுப் போனோம்
அனுபவம் சார்ந்து கொண்டோம்
உந்தன் கிருபையை முற்றிலும் சார்ந்து கொண்டு
ஓடிட உதவிடுமே
Engal suya palaththai nambi thotrup ponom
Anubavam saarnthu kondom
Unthan kirubaiyai mutrilum saarnthu kondu
Odida uthavidumae
Verse 4
நாங்கள் உண்மையுள்ளவர்களென்று நம்பி
தந்த இவ்வூழியத்தை
உண்மையாய் செய்திட வாஞ்சிக்கிறோம்
உந்தன் பலத்தால் நிரப்பிடுமே
Naangal unmaiyullavarkalendru nambi
Thantha ivvoozhiyaththai
Unmaiyaay seythida vaanjsikkirom
Unthan palaththaal nirappidumae
Engal Tharisanathai Engal PPT – PowerPoint Slides
Download எங்கள் தரிசனத்தை எங்கள் ஊழியத்தில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.