Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Jillena Kulir Kaatru Lyricsஜில்லான குளிர் காற்று வீசும் நேரமது

Jillena Kulir Kaatru Lyrics in Tamil & English

Chorus

ஜில்லான குளிர் காற்று வீசும் நேரமது

மேலோக தூதர் கூட்டம் பாடும் வேளையது

மண்ணின் மாந்தரும் கதறும் நேரமது

நம் மேசியா மண்ணில் உதித்தார் (×2)

Jillaana kulir kaatru veesum naeramathu

Maeloga thoothar koottam paadum vaelaiyathu

Mannin maantharum katharum naeramathu

Nam maesiyaa mannil uthiththaar (×2)

Verse 1

நட்சத்திரம் நடுவானில் ஒளி விளக்காய்

சாஸ்திரிகள் பின்தொடர்ந்தாரே

வெள்ளைப்போளம் தூபவர்க்கம் அள்ளிச்சென்றே

அர்ப்பணித்தார் அவர் திரு முன்னே (×2)

மந்தை மேய்ப்பர்கள் புது கானம் பாடியே

விந்தை காணவே விரைந்தோடிச் சென்றனர் (×2)

Natchaththiram naduvaanil oli vilakkaay

Saasthirigal pinthodarnthaarae

Vellaippolam thoobavarkkam allichendrae

Arppaniththaar avar thiru munnae (×2)

Manthai maeypparkal puthu kaanam paadiyae

Vinthai kaanavae virainthodis sendranar (×2)

Verse 2

மானிடரின் பாவரோகம் மாற்றிடவே

மா ஜோதி மானிடரானார்

உன்னை மீட்க தம்மை பலியாக தந்த

அவர் அன்பிற்கு இணையில்லையே (×2)

நாசரேத்திலோர் நன்மை பிறந்ததே

நம்பினோர்க்கெல்லாம் அது நன்மை அளித்ததே (×2)

ஜில்லான குளிர் காற்று வீசும் நேரமது

மேலோக தூதர் கூட்டம் பாடும் வேளையது

மண்ணின் மாந்தரும் கதறும் நேரமது

நம் மேசியா மண்ணில் உதித்தார் (×2)

Maanidarin paavarogam maatridavae

Maa jothi maanidaraanaar

Unnai meedka thammai paliyaaga thantha

Avar anpirku inaiyillaiyae (×2)

Naasaraeththilor nanmai piranthathae

Nambinorkkellaam athu nanmai aliththathae (×2)

Jillaana kulir kaatru veesum naeramathu

Maeloga thoothar koottam paadum vaelaiyathu

Mannin maantharum katharum naeramathu

Nam maesiyaa mannil uthiththaar (×2)

Jillena Kulir Kaatru PPT – PowerPoint Slides

Download ஜில்லான குளிர் காற்று வீசும் நேரமது as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by David L. Franklin

More Tamil Christian songs starting with J