Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kirubai Ennai Soozhnthathaal Lyricsகிருபை என்னை சூழ்ந்ததால்

Rev.VIJAY AARON ELANGOVANCrossFaithThanksgiving

Kirubai Ennai Soozhnthathaal Lyrics in Tamil & English

Chorus

கிருபை என்னை சூழ்ந்ததால்

நான் தலை குனிவதில்லை

கிருபை என்னை ஆட்கொண்டதால்

அழிந்து போவதில்லை (×2)

Kirubai ennai soozhnthathaal

Naan thalai kunivathillai

Kirubai ennai aadkondathaal

Azhinthu povathillai (×2)

Bridge

அந்த மரத்தில் தூக்கப்பட்டு

என் சாபம் ஏற்றப்பட்டு (×2)

விடுதலை செய்ததால்

நான் உயரப் பறக்கின்றேன் (×2)

Antha maraththil thookkappattu

En saabam aetrappattu (×2)

Viduthalai seythathaal

Naan uyarap parakkindraen (×2)

Verse 1

தள்ளி நின்று பார்க்கத்தான்

அருகதை இருந்த போது

என்னை அள்ளி அரவணைத்து

தம்மோடு இணைத்துக் கொண்டார் (×2)

Thalli nindru paarkkaththaan

Arugathai iruntha pothu

Ennai alli aravanaiththu

Thammodu inaiththuk kondaar (×2)

Verse 2

குறை பல இருந்தபோதும்

நிறைவான வாழ்வைத் தந்தார்

தூரம் தூரம் போன போதும்

வேகமாய் என் பக்கம் வந்தார்-மரத்தில்

Kurai pala irunthabothum

Niraivaana vaazhvaith thanthaar

Thooram thooram pona pothum

Vaegamaay en pakkam vanthaar-maraththil

Verse 3

எத்தனையோ நேரங்கள்

தகப்பனை நான் வெறுத்த போது

அத்தனைக்கும் சேர்த்து வைத்து

சிலுவையிலே திருப்பித் தந்தார் (×2)

Eththanaiyo naerangal

Thagappanai naan veruththa pothu

Aththanaikkum saerththu vaiththu

Siluvaiyilae thiruppith thanthaar (×2)

Verse 4

சகதியால் சூழ்ந்த என்னை

குருதியால் வாழ செய்தார்

மேலிருந்து பார்த்தபோது

அவரையே என்னில் கண்டார்-மரத்தில்

Sagathiyaal soozhntha ennai

Kuruthiyaal vaazha seythaar

Maelirunthu paarththabothu

Avaraiyae ennil kandaar-maraththil

Kirubai Ennai Soozhnthathaal PPT – PowerPoint Slides

Download கிருபை என்னை சூழ்ந்ததால் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Rev.VIJAY AARON ELANGOVAN

More Tamil Christian songs starting with K