Maniyosai kettidave mannar ingu pirakkiraar Lyrics in Tamil & English
Chorus
மணியோசை கேட்டிடவே மன்னர் இங்கு பிறக்கிறார்
வாருங்கள் வாருங்கள் ஒன்று கூடுவோம் (×2)
வார்த்தையான இறைவன் இன்று வாழ்வளிக்க வருகிறார்
வானவரின் வாழ்த்துக்களை வாழ்வாக்குவோம்
Maniyosai kaettidavae mannar ingu pirakkiraar
Vaarungal vaarungal ondru kooduvom (×2)
Vaarththaiyaana iraivan indru vaazhvalikka varugiraar
Vaanavarin vaazhththukkalai vaazhvaakkuvom
Bridge
எழுந்திடு மனமே விரைந்திடு தினமே
நினைத்திடு கணமே இது இறைத்திருவுளமே (×2)
Ezhunthidu manamae virainthidu thinamae
Ninaiththidu kanamae ithu iraiththiruvulamae (×2)
Chorus
மணியோசை கேட்டிடவே மன்னர் இங்கு பிறக்கிறார்
வாருங்கள் வாருங்கள் ஒன்று கூடுவோம் (×2)
Maniyosai kaettidavae mannar ingu pirakkiraar
Vaarungal vaarungal ondru kooduvom (×2)
Verse 1
அன்பாலே அரவணைத்திடுவோம்
அருளாசீரால் அகமகிழ்ந்திடுவோம்
இறைப்பிறப்பில் இணைந்திடுவோம் நாம்
இன்று ஈகையுடன் ஈசனின் பிறப்பில் (×2)
Anpaalae aravanaiththiduvom
Arulaaseeraal agamagizhnthiduvom
Iraippirappil inainthiduvom naam
Indru eegaiyudan eesanin pirappil (×2)
Verse 2
விண்மீனின் வழி சென்றிடுவோம்
நாம் விண்வாழ்வின் வழி கண்டிடுவோம்
விண்ணரசுன் விதையாவோம் நாம்
இன்று விண்ணவனின் மண்ணக பிறப்பில் (×2)
Vinmeenin vazhi sendriduvom
Naam vinvaazhvin vazhi kandiduvom
Vinnarasun vithaiyaavom naam
Indru vinnavanin mannaga pirappil (×2)
Maniyosai kettidave mannar ingu pirakkiraar PPT – PowerPoint Slides
Download மணியோசை கேட்டிடவே மன்னர் இங்கு பிறக்கிறார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.