Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Paavathin Balan Nagaram Lyricsபாவத்தின் பலன் நரகம்

Artist to be confirmedCrossFaith

Paavathin Balan Nagaram Lyrics in Tamil & English

Verse 1

பாவத்தின் பலன் நரகம், நரகம்

ஓ! பாவி நடுங்கிடாயோ?

காண்பதெல்லாம் அழியும் அழியும்

காணாததல்லோ நித்யம்

Paavaththin palan naragam, naragam

O! paavi nadungidaayo?

Kaanpathellaam azhiyum azhiyum

Kaanaathathallo nithyam

Chorus

இயேசு ராஜா வருவார்

இன்னும் கொஞ்சக் காலந்தான்

மோட்ச லோகம் சேர்ந்திடுவோம்

Yesu raajaa varuvaar

Innum konjsak kaalanthaan

Motcha logam saernthiduvom

Verse 2

உலக இன்பம் நம்பாதே, நம்பாதே – அதன்

இச்சை யாவும் ஒழியும்

உன் ஜீவன் போகும் நாளிலே, நாளிலே

ஓர் காசும் கூட வராதே

Ulaga inpam nambaathae, nambaathae – athan

Ichai yaavum ozhiyum

Un jeevan pogum naalilae, naalilae

Or kaasum kooda varaathae

Verse 3

உன் காலமெல்லாம் போகுதே, போகுதே

உலக மாய்கையிலே

ஓ! தேவ கோபம் வருமுன், வருமுன்

உன் மீட்பரண்டை வாராயோ

Un kaalamellaam poguthae, poguthae

Ulaga maaykaiyilae

O! thaeva kobam varumun, varumun

Un meedparandai vaaraayo

Verse 4

தேவன்பின் வெள்ளம் ஓடுதே ஓடுதே

கல்வாரி மலைதனிலே

உன் பாவம் யாவும் நீங்கிப்போம், நீங்கிப்போம்

அதில் ஸ்நானம் செய்வதாலே

Thaevanpin vellam oduthae oduthae

Kalvaari malaithanilae

Un paavam yaavum neengippom, neengippom

Athil snaanam seyvathaalae

Verse 5

மா பாவியான என்னையும், என்னையும்,

என் நேசர் ஏற்றுக் கொண்டாரே

ஓ! பாவி நீயும் ஓடிவா ஓடிவா

தேவாசீர்வாதம் பெறவா

Maa paaviyaana ennaiyum, ennaiyum,

En naesar aetruk kondaarae

O! paavi neeyum odivaa odivaa

Thaevaaseervaatham peravaa

Paavathin Balan Nagaram PPT – PowerPoint Slides

Download பாவத்தின் பலன் நரகம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P