Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Saththiya Thaevanin Puurana Vaazhvai Lyricsபூரணவாழ்வு தாரும்

Artist to be confirmedFaith

Saththiya Thaevanin Puurana Vaazhvai Lyrics in Tamil & English

Chorus

பூரணவாழ்வு தாரும்

Pooranavaazhvu thaarum

Verse 1

சத்திய தேவனின் பூரண வாழ்வை

அனுபவமாய் நான் பெறவேண்டும் (×2)

Saththiya thaevanin poorana vaazhvai

Anubavamaay naan peravaendum (×2)

Verse 2

தேவனே என்னை போதித்து நடத்தும்

தோல்வி வராமல் தாங்கியே நிறுத்தும்

உத்தம பக்தர்கள் சூழ்ந்து நிற்க

இயேசுவை நோக்கித் தொடர உதவும் (×2)

Thaevanae ennai pothiththu nadaththum

Tholvi varaamal thaangiyae niruththum

Uththama paktharkal soozhnthu nirka

Yesuvai nokkith thodara uthavum (×2)

Verse 3

துன்பங்கள் தொடர்ந்து வந்திட்ட போதும்

துணிந்து நின்ற யோபுவைப்போல

அனைத்து வளமும் அகன்று போனாலும்

ஆபகூக் போல மகிழ்வேன் என்றும் (×2)

Thunpangal thodarnthu vanthitta pothum

Thuninthu nindra yobuvaippola

Anaiththu valamum agandru ponaalum

Aabagook pola magizhvaen endrum (×2)

Verse 4

கொண்டது அனைத்தையும் குப்பையாய்க் கண்ட

இலட்சிய வீரர் பவுலினைப் போல

இறுதிநாள் வரை உண்மையாயிருந்து

அழியா மகுடம் முடிவாய்ப் பெறுவேன் (×2)

Kondathu anaiththaiyum kuppaiyaayk kanda

Ilatchiya veerar pavulinaip pola

Iruthinaal varai unmaiyaayirunthu

Azhiyaa magudam mudivaayp peruvaen (×2)

Saththiya Thaevanin Puurana Vaazhvai PPT – PowerPoint Slides

Download பூரணவாழ்வு தாரும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with S