Siluvaiyil Araiyunda Messiah Lyrics in Tamil & English
Chorus
சிலுவையில் அறையுண்ட மேசியா
இறை வல்லமையும் இறை ஞானமுமாய் உள்ளார்
இதை உள்ளங்கள் உணர்ந்திடட்டும்
இந்த உலகமும் உணர்ந்திடட்டும் (×2)
அல்லேலூ அல்லேலூ அல்லேலுயா (×4)
Siluvaiyil araiyunda maesiyaa
Irai vallamaiyum irai njaanamumaay ullaar
Ithai ullangal unarnthidattum
Intha ulagamum unarnthidattum (×2)
Allaeloo allaeloo allaeluyaa (×4)
Verse 1
குற்றம் இல்லாதோர் மாய்கின்றார்
எம் குழந்தைகள் பசியில் வாடுகின்றார்
நீதியை அழிப்போர் வாழ்கின்றார்
பல நேரிய மனிதர்கள் வீழ்கின்றார்
இந்த சிலுவை உமது வல்லமையோ
இந்த சிலுவை உமது ஞானமோ (×2)
Kutram illaathor maaykindraar
Em kuzhanthaigal pasiyil vaadugindraar
Neethiyai azhippor vaazhkindraar
Pala naeriya manitharkal veezhkindraar
Intha siluvai umathu vallamaiyo
Intha siluvai umathu njaanamo (×2)
Verse 2
சிலுவையில் இறந்த செம்மறிதான்
பின் சாவினை அழித்து உயிர்த்ததன்றோ
சிலுவை வடிவே முடிவல்ல
முழு ஜெயமே எங்கள் பரிசன்றோ
இந்த சிலுவை உமது வல்லமையே
இந்த சிலுவை உமது ஞானமே (×2)
Siluvaiyil irantha semmarithaan
Pin saavinai azhiththu uyirththathandro
Siluvai vadivae mudivalla
Muzhu jeyamae engal parisandro
Intha siluvai umathu vallamaiyae
Intha siluvai umathu njaanamae (×2)
Verse 3
நெஞ்சினில் அமைதியை இழக்கின்றோம் – மன
நிம்மதி இழந்தே தவிக்கின்றோம்
நோவிலும் சாவிலும் துடிக்கின்றோம் – எங்கள்
தேவனே சிலுவையின் பொருள் சொல்வாய்
இந்தச் சிலுவை உமது வல்லமையோ
இந்தச் சிலுவை உமது ஞானமோ (×2)
Nenjsinil amaithiyai izhakkindrom – mana
Nimmathi izhanthae thavikkindrom
Novilum saavilum thudikkindrom – engal
Thaevanae siluvaiyin porul solvaay
Inthas siluvai umathu vallamaiyo
Inthas siluvai umathu njaanamo (×2)
Verse 4
உறவுகள் நிறைவு தருவதில்லை எங்கள்
உள்ளத்தில் அன்பு வளர்வதில்லை
பிரிவுகள் பிளவுகள் பிணக்குகளே எங்கள்
வீட்டிலும் நாட்டிலும் வளர்வது ஏன்
இந்தச் சிலுவை உமது வல்லமையோ
இந்தச் சிலுவை உமது ஞானமோ (×2)
Uravugal niraivu tharuvathillai engal
Ullaththil anpu valarvathillai
Pirivugal pilavugal pinakkugalae engal
Veettilum naattilum valarvathu aen
Inthas siluvai umathu vallamaiyo
Inthas siluvai umathu njaanamo (×2)
Siluvaiyil Araiyunda Messiah PPT – PowerPoint Slides
Download சிலுவையில் அறையுண்ட மேசியா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.