Tharaniyil Malarattum Iyaesuvin Aatsi Lyrics in Tamil & English
Chorus
இயேசுவின் ஆட்சி மலரட்டும்
Yesuvin aatchi malarattum
Verse 1
தரணியில் மலரட்டும் இயேசுவின் ஆட்சி
தலைமுறை தலைமுறை தொடரட்டும் மீட்சி
புறப்படு நீ திருச்சபை செயல்படு நீ அதி விரைவே
அறுவடை மிகுதி ஆளில்லையே (×2)
Tharaniyil malarattum yesuvin aatchi
Thalaimurai thalaimurai thodarattum meetchi
Purappadu nee thiruchabai seyalpadu nee athi viraivae
Aruvadai miguthi aalillaiyae (×2)
Verse 2
இந்திய மண்ணில் எண்ணற்ற கோடி
எங்கெங்கோ அலைகிறார் இறைவனைத் தேடி
சிந்தையில் கலக்கம் மனதினில் மயக்கம்
அங்கங்கே தவிக்கிறார் அமைதியைத் நாடி
Inthiya mannil ennatra kodi
Engengo alaigiraar iraivanaith thaedi
Sinthaiyil kalakkam manathinil mayakkam
Angangae thavikkiraar amaithiyaith naadi
Verse 3
இந்த நிலை நீக்கவேண்டும் விந்தை ஒளி ஈர்க்கவேண்டும்
மந்தைக்குள் பலரைச் சேர்க்கவேண்டும் (×2)
Intha nilai neekkavaendum vinthai oli eerkkavaendum
Manthaikkul palarais saerkkavaendum (×2)
Verse 4
இமயத்தில் துவங்கி குமரி வரையில்
இம்மானுவேலனை வணங்கிடவேண்டும்
சமயங்கள் பலவும் சகலமும் படைத்த
சர்வாதி கர்த்தரைப் பணிந்திடவேண்டும்
Imayaththil thuvangi kumari varaiyil
Immaanuvaelanai vanangidavaendum
Samayangal palavum sagalamum padaiththa
Sarvaathi karththaraip paninthidavaendum
Verse 5
பாரதமே மாறவேண்டும் பரனேசுவைச் சேரவேண்டும்
பரிசுத்த ஆவியின் மாரி வேண்டும் (×2)
Paarathamae maaravaendum paranaesuvais saeravaendum
Parisuththa aaviyin maari vaendum (×2)
Verse 6
ஞாலத்தில் முழுதும் நற்செய்தி பரவும்
வேளைதான் முடிவின் அடையாளம் தெளிவாய்
காலத்தை உணர்வோம் கடுமையாய் உழைப்போம்
கர்த்தரின் வருகை நெருங்குதே விரைவாய்
Njaalaththil muzhuthum narseythi paravum
Vaelaithaan mudivin adaiyaalam thelivaay
Kaalaththai unarvom kadumaiyaay uzhaippom
Karththarin varugai nerunguthae viraivaay
Verse 7
அழைப்பின் குரல் கேட்கலையோ அவசரமும் புரியலையோ
அவகாசம் முடிந்தது கிளம்பலையோ (×2)
Azhaippin kural kaedkalaiyo avasaramum puriyalaiyo
Avagaasam mudinthathu kilambalaiyo (×2)
Tharaniyil Malarattum Iyaesuvin Aatsi PPT – PowerPoint Slides
Download இயேசுவின் ஆட்சி மலரட்டும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.