Ulagin Oliye Unmaiyin Vilakke Lyrics in Tamil & English
Chorus
உலகின் ஒளியே உண்மையின் விளக்கே
உயிரினில் கலந்திட வா
மண்ணகம் வாழும் மனிதரின் வாழ்வை
மாண்புறச் செய்திட வா (×2)
இயேசு பாலனே இதயம் வாருமே
மனிதம் நாளும் புனிதம் காணும் மகிழ்வை அளித்திட வா
Ulagin oliyae unmaiyin vilakkae
Uyirinil kalanthida vaa
Mannagam vaazhum manitharin vaazhvai
Maanpuras seythida vaa (×2)
Yesu paalanae ithayam vaarumae
Manitham naalum punitham kaanum magizhvai aliththida vaa
Verse 1
இருள் வாழ்வை அகற்றிட வருவீர்
புது அருள் வாழ்வை அளித்திட எழுவீர் (×2)
பல கோடி உள்ளங்கள் மகிழ
நீர் பகலவனாய் உதித்திடுவீர் (×2)
எந்தன் உள்ளம் உன்னைப் பாடும்
என்றும் உந்தன் உறவைத் தேடும்
என் உயிரே வருவீர் – உலகின்
Irul vaazhvai agatrida varuveer
Puthu arul vaazhvai aliththida ezhuveer (×2)
Pala kodi ullangal magizha
Neer pagalavanaay uthiththiduveer (×2)
Enthan ullam unnaip paadum
Endrum unthan uravaith thaedum
En uyirae varuveer – ulagin
Verse 2
புகழ் தேடி அலைகின்ற போது என்னில்
புதுவாழ்வை அளித்திட வருவீர் (×2)
கரைசேரா ஓடங்கள் ஆனோம்
நீர் கரை சேர்க்கும் துடுப்பாவீர் (×2)
உந்தன் வரவால் உள்ளம் மகிழும்
எந்தன் உயிரும் உம்மில் இணையும்
விண்மலரே வருவீர் – உலகின்
Pugazh thaedi alaigindra pothu ennil
Puthuvaazhvai aliththida varuveer (×2)
Karaisaeraa odangal aanom
Neer karai saerkkum thuduppaaveer (×2)
Unthan varavaal ullam magizhum
Enthan uyirum ummil inaiyum
Vinmalarae varuveer – ulagin
Ulagin Oliye Unmaiyin Vilakke PPT – PowerPoint Slides
Download உலகின் ஒளியே உண்மையின் விளக்கே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.