Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Visuvasiyin Kathil Pada Lyricsவிசுவாசியின் காதில் பட இயேசுவென்ற நாமம்

Artist to be confirmedPraiseFaithHealing

Visuvasiyin Kathil Pada Lyrics in Tamil & English

Chorus

விசுவாசியின் காதில் பட இயேசுவென்ற நாமம்

விருப்பாயவர் செவியில் தொனி இனிப்பாகுது பாசம்

Visuvaasiyin kaadhil pada yaesuvendra naamam

Viruppaayavar seviyil dhoni inippaakudhu paasam

Verse 1

பசித்த ஆத்துமாவைப் பசியாற்று மன்னாவதுவே

முசிப்பாறுதல் இளைத்தோர்க்கெல்லாம் முற்றும் அந்தப் பெயரே

Pasitha aathumaavai pasiyaatru mannaavadhuvae

Musippaarudhal ilaithoarkkellaam muttum andha peyarae

Verse 2

துயரையது நீக்கி காயமாற்றிக் குணப்படுத்தும்

பயங்கள் யாவும் இயேசுவென்றால் பறந்தோடியே போகும்

Thuyaraiyadhu neekki kaayamaatri gunappaduthum

Bayangal yaavum yaesuvendraal parandhoadiyae poagum

Verse 3

காயப்பட்ட இருதயத்தைக் கழுவிச் சுத்தப்படுத்தும்

மாயைகொண்ட நெஞ்சையது மயக்கமின்றிவிடுக்கும்

Kaayappatta irudhayathai kazhuvi suthappaduthum

Maayaikonda nenjaiyadhu mayakkaminrividukkum

Verse 4

எல்லை இல்லாக் கிருபைத்திரள் ஏற்றுநிறைந்திருக்கும்

எல்லா நாளும் மாறாச்செல்வம் இயேசுவென்ற பெயரே

Ellai illaa kirubaithiral aetru niraindhirukkum

Ellaa naalum maaraaselvam yaesuvendra peyarae

Verse 5

என்னாண்டவா, என் ஜீவனே என் மார்க்கமே, முடிவே

என்னால் வருந்துதியை நீரே ஏற்றுக்கொள்ளும், தேவே

Ennaandavaa en jeevanae en maarkkamae mudivae

Ennaal varunthudhiyai neerae aetrukkollum dhaevae

Visuvasiyin Kathil Pada PPT – PowerPoint Slides

Download விசுவாசியின் காதில் பட இயேசுவென்ற நாமம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with V