1 Chronicles 8:6 in Tamil
கேபாவின் குடிகளுக்கு மூப்பானதலைவராயிருந்து, இவர்களை மனாகாத்திற்கு அழைத்துக்கொண்டுபோனவர்கள், நாமான், அகியா, கேரா என்பவர்களே.
Kaebaavin kudigalukku mooppaanathalaivaraayirunthu, ivarkalai manaagaaththirku azhaiththukkondubonavarkal, naamaan, agiyaa, kaeraa enpavarkalae.
1 Chronicles 8:6 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கேபாவின் குடிகளுக்கு முக்கிய தலைவர்களாக இருந்து, இவர்களை மனாகாத்திற்கு அழைத்துக்கொண்டுபோனவர்கள், நாமான், அகியா, கேரா என்பவர்களே.
- Open Tamil Contemporary Version
- ஏகூத்தின் சந்ததிகள்: இவர்கள் மனாகாத்திற்கு நாடுகடத்தப்பட்டு கேபாவின் குடிகளின் தலைவர்களாயிருந்தவர்கள்:
- Tamil Easy Reading Version
- இவர்கள் ஏகூதின் சந்ததியினர். கேபாவின் குடும்பங்களுக்குத் தலைவர்களாக இருந்தனர். இவர்கள், தம் வீடுகளை விட்டு விட்டு மனாகாத்துக்குப் போகும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்கள். நாமான், அகியா, கேரா ஆகியோர் ஏகூதின் சந்ததியினர். கேரா இவர்களைக் கட்டாயமாக வீட்டைவிட்டு அழைத்துச்சென்றான். ஊசா, அகியூத் ஆகியோர் தந்தையானான் கேரா.
1 Chronicles 8:6 in English
- King James Version (KJV)
- And these [are] the sons of Ehud: these are the heads of the fathers of the inhabitants of Geba, and they removed them to Manahath:
- World English Bible (WEB)
- These are the sons of Ehud. These are the heads of fathers’ households of the inhabitants of Geba, who were carried captive to Manahath:
- American Standard Version (ASV)
- And these are the sons of Ehud: these are the heads of fathers’ [houses] of the inhabitants of Geba, and they carried them captive to Manahath:
- Bible in Basic English (BBE)
- And these are the sons of Ehud, heads of families of those living in Geba: Iglaam and Alemeth
- Darby Translation (DBY)
- — And these are the sons of Ehud (these were the chief fathers of the inhabitants of Geba; and they carried them away to Manahath;
- Webster's Bible (WBS)
- And these [are] the sons of Ehud: these are the heads of the fathers of the inhabitants of Geba, and they removed them to Manahath:
- Young's Literal Translation (YLT)
- And these [are] sons of Ehud: they are heads of fathers to the inhabitants of Geba, and they remove them unto Manahath;
Read in context
- 4அபிசுவா, நாமான், அகோவா,
- 5கேரா, செப்புப்பான், ஊராம் என்பவர்கள் எகூதின் குமாரர்.
- 6கேபாவின் குடிகளுக்கு மூப்பானதலைவராயிருந்து, இவர்களை மனாகாத்திற்கு அழைத்துக்கொண்டுபோனவர்கள், நாமான், அகியா, கேரா என்பவர்களே.
- 7கேரா அவர்களை அங்கே அழைத்துக் கொண்டுபோனபின்பு, ஊசாவையும் அகியூதையும் பெற்றான்.
- 8அவர்களை அனுப்பிவிட்டபின், சகராயீம் மோவாப் தேசத்திலே ஊசிம் பாராள் என்னும் தன் பெண்ஜாதிகளிடத்திலேபெற்ற பிள்ளைகளைத்தவிர,
Cross references
- 1 Chronicles 2:54 1 நாளாகமம் 2:54சல்மாவின் சந்ததிகள், பெத்லெகேமியரும், நேத்தோப்பாத்தியரும், பெத் யோவாப் என்னும் அதரோத் ஊராரும், மானாத்தியரிலும் சோரியரிலும் பாதிஜனங்களுமே.
- Judges 3:20–30 நியாயாதிபதிகள் 3:20–30ஏகூத் அவன் கிட்டே போனான்; அவனோ தனக்குத் தனிப்புற இருந்த குளிர்ச்சியான அறைவீட்டில் உட்கார்ந்திருந்தான்; அப்பொழுது ஏகூத்: உம்மிடத்தில் சொல்லவேண்டிய தேவவாக்கு எனக்கு உண்டு என்றான்; அவன் தன் ஆசனத்திலிருந்து எழுந்திருந்தான். உடனே ஏகூத் தன் இடதுகையை நீட்டி, தன் வலதுபுறத்து இடுப்பிலே கட்டியிருந்த கத்தியை உருவி, அதை அவன் வயிற்றிற்குள் பாய்ச்சினான். அலகோடேகூடக் கைப்பிடியும் உள்ளே புகுந்தது; அவனுடைய வயிற்றிற்குள் போன கத்தியை இவன் இழுக்கக்கூடாதபடிக்கு, நிணம் அலகைச் சுற்றிக் கொண்டடைத்தது; அது பின்புறத்திலே புறப்பட்டது. ஏகூத் புறப்பட்டு, அறைவீட்டின்கதவைச் சாத்திப் பூட்டிப்போட்டு, கொலுக்கூடத்தின் வழியாய்ப் போய்விட்டான். அவன் போனபின்பு ஊழியக்காரார் வந்து பார்த்தார்கள்; இதோ, அறைவீட்டின் கதவு பூட்டியிருந்தது; ஆகையால் அவர் அந்தக் குளிர்ச்சியான அறையிலேமலஜலாதிக்கிருக்கிறாராக்கும் என்றார்கள். அவர்கள் சலித்துப்போகுமட்டும்காத்திருந்தார்கள்; அவன் அறைவீட்டின்கதவைத் திறக்கவில்லை; ஆகையால் ஒரு திறவுகோலை எடுத்துத் திறந்தார்கள்; இதோ, அவர்கள் ஆண்டவன் தரையிலே செத்துக்கிடந்தான். அவர்கள் தாமதித்துக்கொண்டிருந்தபோது, ஏகூத் ஓடிப்போய், சிலைகளுள்ள இடத்தைக் கடந்து, சேயிராத்தைச் சேர்ந்து தப்பினான். அங்கே வந்தபோது எப்பிராயீம் மலையிலே எக்காளம் ஊதினான்; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் அவனோடேகூட மலையிலிருந்து இறங்கினார்கள்; அவன் அவர்களுக்கு முன்பாக நடந்து: என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள்; கர்த்தர் உங்கள் பகைஞராகிய மோவாபியரை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுத்தார் என்றான்; அவர்கள் அவனைப் பின்தொடர்ந்துபோய், மோவாபுக்கு எதிரான யோர்தான் துறைகளைப் பிடித்து, ஒருவனையும் கடந்துபோகவொட்டாமல், அக்காலத்திலே மோவாபியரில் ஏறக்குறையப் பதினாயிரம்பேரை வெட்டினார்கள்; அவர்களெல்லாரும் புஷ்டியுள்ளவர்களும் பராக்கிரமசாலிகளுமாயிருந்தார்கள்; அவர்களில் ஒருவனும் தப்பவில்லை. இப்படியே அந்நாளிலே மோவாப் இஸ்ரவேலுடைய கையின்கீழ்த் தாழ்த்தப்பட்டது; அதனாலே தேசம் எண்பது வருஷம் அமைதலாயிருந்தது.
- 1 Chronicles 6:60 1 நாளாகமம் 6:60பென்யமீன் கோத்திரத்திலே கேபாவையும் அதின் வெளிநிலங்களையும், அலெமேத்தையும் அதின் வெளிநிலங்களையும், ஆனதோத்தையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இவர்கள் வம்சங்களுக்குக் கொடுத்த இவர்கள் பட்டணங்களெல்லாம் பதின்மூன்று.
- 1 Chronicles 7:10 1 நாளாகமம் 7:10யெதியாயேலின் குமாரரில் ஒருவன் பில்கான்; பில்கானின் குமாரர், எயூஷ், பென்யமீன், ஏகூத், கெனானா, சேத்தான், தர்ஷீஸ், அகிஷாகார் என்பவர்கள்.
- Genesis 46:21 ஆதியாகமம் 46:21பென்யமீனுடைய குமாரர் பேலா, பெகேர், அஸ்பேல், கேரா, நாகமான், ஏகி, ரோஷ், முப்பிம், உப்பிம், ஆர்து என்பவர்கள்.
- Judges 4:1 நியாயாதிபதிகள் 4:1ஏகூத் மரணமடைந்தபின்பு இஸ்ரவேல் புத்திரர் திரும்பக் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து வந்தார்கள்.
- 1 Chronicles 2:25 1 நாளாகமம் 2:25எஸ்ரோனுக்கு முதற்பிறந்த யெர்மெயேலின் குமாரர், ராம் என்னும் மூத்தவனும், பூனா, ஓரென், ஓத்சேம், அகியா என்பவர்களுமே.
- 1 Chronicles 2:52 1 நாளாகமம் 2:52கீரியாத்யாரிமின் மூப்பனான சோபாலின் குமாரர், ஆரோவே, ஆசியம் மெனுகோத் என்பவர்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.