Psalm 104:29 in Tamil
நீர் உமது முகத்தை மறைக்க, திகைக்கும்; நீர் அவைகளின் சுவாசத்தை வாங்கிக்கொள்ள, அவைகள் மாண்டு, தங்கள் மண்ணுக்குத் திரும்பும்.
Neer umathu mugaththai maraikka, thigaikkum; neer avaigalin suvaasaththai vaangikkolla, avaigal maandu, thangal mannukkuth thirumbum.
Psalm 104:29 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நீர் உமது முகத்தை மறைக்க, திகைக்கும்; நீர் அவைகளின் சுவாசத்தை வாங்கிக்கொள்ள, அவைகள் இறந்து, தங்களுடைய மண்ணுக்குத் திரும்பும்.
- Open Tamil Contemporary Version
- நீர் உமது முகத்தை மறைக்கும்போது, அவை திகைக்கின்றன; நீர் அவைகளின் சுவாசத்தை எடுத்துவிட, அவை இறந்து தூசிக்குத் திரும்புகின்றன.
- Tamil Easy Reading Version
- நீர் அவற்றை விட்டு விலகும்போது அவை அஞ்சும். அவற்றின் சுவாசம் அவற்றைவிட்டு நீங்கும். அவை சோர்ந்து மரிக்கும். அவற்றின் உடல்கள் மீண்டும் புழுதியாகிவிடும்.
Psalm 104:29 in English
- King James Version (KJV)
- Thou hidest thy face, they are troubled: thou takest away their breath, they die, and return to their dust.
- World English Bible (WEB)
- You hide your face; they are troubled. You take away their breath; they die and return to the dust.
- American Standard Version (ASV)
- Thou hidest thy face, they are troubled; Thou takest away their breath, they die, And return to their dust.
- Bible in Basic English (BBE)
- If your face is veiled, they are troubled; when you take away their breath, they come to an end, and go back to the dust.
- Darby Translation (DBY)
- Thou hidest thy face, they are troubled; thou takest away their breath, they expire and return to their dust.
- Webster's Bible (WBS)
- Thou hidest thy face, they are troubled: thou takest away their breath, they die, and return to their dust.
- Young's Literal Translation (YLT)
- Thou hidest Thy face — they are troubled, Thou gatherest their spirit — they expire, And unto their dust they turn back.
Read in context
- 27ஏற்றவேளையில் ஆகாரத்தைத் தருவீர் என்று அவைகளெல்லாம் உம்மை நோக்கிக் காத்திருக்கும்.
- 28நீர்கொடுக்க, அவைகள் வாங்கிக்கொள்ளும்; நீர் உம்முடைய கையைத் திறக்க, அவைகள் நன்மையால் திருப்தியாகும்.
- 29நீர் உமது முகத்தை மறைக்க, திகைக்கும்; நீர் அவைகளின் சுவாசத்தை வாங்கிக்கொள்ள, அவைகள் மாண்டு, தங்கள் மண்ணுக்குத் திரும்பும்.
- 30நீர் உம்முடைய ஆவியை அனுப்பும்போது, அவைகள் சிருஷ்டிக்கப்படும்; நீர் பூமியின் ரூபத்தையும் புதிதாக்குகிறீர்.
- 31கர்த்தருடைய மகிமை என்றென்றைக்கும் விளங்கும்; கர்த்தர் தம்முடைய கிரியைகளிலே மகிழுவார்.
Cross references
- Job 34:14–15 யோபு 34:14–15அவர் தம்முடைய இருதயத்தை அவனுக்கு விரோதமாகத் திருப்பினாராகில், அவனுடைய ஆவியையும் அவனுடைய சுவாசத்தையும் தம்மிடத்தில் இழுத்துக்கொள்ளுவார். அப்படியே மாம்சமான யாவும் ஏகமாய் ஜீவித்துப்போம், மனுஷன் தூளுக்குத் திரும்புவான்.
- Ecclesiastes 12:7 பிரசங்கி 12:7இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை.
- Psalm 146:4 சங்கீதம் 146:4அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்து போம்.
- Genesis 3:19 ஆதியாகமம் 3:19நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.
- Acts 17:25 அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:25எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர், தமக்கு யாதொன்று தேவையானது போல, மனுஷர் கைகளால் பணிவிடைகொள்ளுகிறதுமில்லை.
- Psalm 30:7 சங்கீதம் 30:7கர்த்தாவே, உம்முடைய தயவினால் நீர் என் பர்வதத்தைத் திடமாய் நிற்கப்பண்ணியிருந்தீர்; உமது முகத்தை நீர் மறைத்துக்கொண்டபோதோ நான் கலங்கினவனானேன்
- Psalm 90:3 சங்கீதம் 90:3நீர் மனுஷரை நிர்த்தூளியாக்கி, மனுபுத்திரரே, திரும்புங்கள்என்கிறீர்.
- Job 10:9 யோபு 10:9களிமண்போல என்னை உருவாக்கினீர் என்பதையும், என்னைத் திரும்பத் தூளாகப்போகப்பண்ணுவீர் என்பதையும் நினைத்தருளும்.
- Deuteronomy 31:17 உபாகமம் 31:17அந்நாளிலே நான் அவர்கள்மேல் கோபங்கொண்டு, அவர்களைக் கைவிட்டு, என் முகத்தை அவர்களுக்கு மறைப்பேன்; அதினால் அவர்கள் பட்சிக்கப்படும்படிக்கு அநேக தீங்குகளும் இக்கட்டுகளும் அவர்களைத் தொடரும்; அந்நாளிலே அவர்கள்: எங்கள் தேவன் எங்கள் நடுவே இராததினாலே அல்லவா இந்தத் தீங்குகள் எங்களைத் தொடர்ந்தது என்பார்கள்.
- Job 13:24 யோபு 13:24நீர் உமது முகத்தை மறைத்து, என்னை உமக்குப் பகைஞனாக எண்ணுவானேன்?
- Job 34:29 யோபு 34:29மாயக்காரன் ஆளாதபடிக்கும், ஜனங்கள் சிக்கிக்கொள்ளப்படாதபடிக்கும்,
- Romans 8:20–22 ரோமர் 8:20–22அதேனென்றால் சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்றுவிடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடே, அந்தச் சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது. ஆகையால் நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.