Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Intha Vealayinil Vantharulum Lyricsஇந்த வேளையினில் வந்தருளும்

Artist to be confirmedHoly SpiritWorship

Intha Vealayinil Vantharulum Lyrics in Tamil & English

Chorus

சரணங்கள்

Saranangal

Verse 1

இந்த வேளையினில் வந்தருளும், தேவ ஆவியே!-இப்போ

எங்கள் மீதிறங்கித், தங்கி வரம் தாரும், ஆவியே.

Intha vaelaiyinil vantharulum, thaeva aaviyae!-ippo

Engal meethirangith, thangi varam thaarum, aaviyae.

Verse 2

அந்தணர் தம்மிடம் விந்தை செய்த சத்ய ஆவியே!-முன்

ஆச்சரியமாகக் காட்சி தந்த ஞான ஆவியே.

Anthanar thammidam vinthai seytha sathya aaviyae!-mun

Aachariyamaagak kaatchi thantha njaana aaviyae.

Verse 3

ஆர்ச்சியர்க் கந்நாளில் அற்புதம் செய்தாண்ட ஆவியே!-இந்த

ஆதிரை மீதினில் தீதகற்றியாளும், ஆவியே.

Aarchiyark kannaalil arputham seythaanda aaviyae!-intha

Aathirai meethinil theethagatriyaalum, aaviyae.

Verse 4

ஆருமறியாத ஆறுதல் செய்திடும் ஆவியே!-இங்கு

அஞ்ஞானம் அகற்றி, மெய்ஞ்ஞானம் புகட்டும், ஆவியே

Aarumariyaatha aaruthal seythidum aaviyae!-ingu

Anjnjaanam agatri, meynjnjaanam pugattum, aaviyae

Verse 5

சித்தம் இரங்காயோ, நித்தியராகிய ஆவியே!-அருள்

ஜீவ வழி காட்டிப் பாவம் அகற்றிடும், ஆவியே.

Siththam irangaayo, niththiyaraagiya aaviyae!-arul

Jeeva vazhi kaattip paavam agatridum, aaviyae.

Verse 6

வாரும், வாரும்; கண் பாரும், பரிசுத்த ஆவியே!-இன்று

வந்து சபை மீதில் சிந்தை வைத்தருளும், ஆவியே.

Vaarum, vaarum; kan paarum, parisuththa aaviyae!-indru

Vanthu sabai meethil sinthai vaiththarulum, aaviyae.

Verse 7

தேற்றரவாளன் என்றேற்றிப் புகழ்ந்திடும் ஆவியே!-நிதம்

சித்தம் வைத்தென் மீதில் முற்றிலும் காத்திடும், ஆவியே.

Thaetraravaalan endraetrip pugazhnthidum aaviyae!-nitham

Siththam vaiththen meethil mutrilum kaaththidum, aaviyae.

Intha Vealayinil Vantharulum PPT – PowerPoint Slides

Download இந்த வேளையினில் வந்தருளும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with I