Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Paazhk Logamae Po Arpa Kuppayae Lyricsபாழ் லோகமே போ அற்பக் குப்பையே

Artist to be confirmedFaithCross

Paazhk Logamae Po Arpa Kuppayae Lyrics in Tamil & English

Verse 1

பாழ் லோகமே போ, அற்பக் குப்பையே

சிறையாக்கி என்னை வஞ்சித்தாயே

உன் கீதம் நான் கேட்டுக் கெட்டேன்

நிர் மூடனாகவே

என் ஆத்மமும் உன்னைச் சேவித்ததே

Paazh logamae po, arpak kuppaiyae

Siraiyaakki ennai vanjsiththaayae

Un keetham naan kaettuk kettaen

Nir moodanaagavae

En aathmamum unnais saeviththathae

Verse 2

பெருக்கினும் உன் இன்பங்களெல்லாம்

ஓர் ஆன்மத்தைத் தேற்றா அற்பப்புல்லாம்

மெய்யின்பமாம் என் சொந்தமாம்

மோட்சப் பிரயாணி நான்

பாலும் தேனும் கலந்து அங்கென்றும் ஓடுமாம்

Perukkinum un inpangalellaam

Or aanmaththaith thaetraa arpappullaam

Meyyinpamaam en sonthamaam

Motchap pirayaani naan

Paalum thaenum kalanthu angendrum odumaam

Verse 3

ஆச்சரியமே இயேசுவின் வேண்டுதல்

ஆம் மெய்யாய் நான் கிருபை பெறுதல்!

மெய் தத்தத்தால் வேண்டுதலால்

என் ஆசை சித்திக்கும்!

அவர் இரத்தம் என்னைப் புதுப்பிக்கும்

Aachariyamae yesuvin vaenduthal

Aam meyyaay naan kirubai peruthal!

Mey thaththaththaal vaenduthalaal

En aasai siththikkum!

Avar iraththam ennaip puthuppikkum

Verse 4

விழித்திடு துரிதம் உள்ளதே!

அதோ நீ கேள் தேவ எக்காளமே!

வெற்றி பெற மோட்சம் சேர

மெய் யுத்தம் செய்திடு;

மீட்பர் சாட்சி நீ எங்கும் பாடிடு

Vizhiththidu thuritham ullathae!

Atho nee kael thaeva ekkaalamae!

Vetri pera motcham saera

Mey yuththam seythidu;

Meedpar saatchi nee engum paadidu

Paazhk Logamae Po Arpa Kuppayae PPT – PowerPoint Slides

Download பாழ் லோகமே போ அற்பக் குப்பையே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P