Pin Selluvean En Meetparae Lyrics in Tamil & English
Chorus
பின் செல்வேன் என் மீட்பரே – நானும்மைப்
பின் செல்வேன் என் மீட்பரே
Pin selvaen en meedparae – naanummaip
Pin selvaen en meedparae
Bridge
நான் செய்த பாவங்கள் நின் தயவால் தீர
நாதா ஜீவன் விட்டாய் வன் குருசில் அதால்
சரணங்கள்
Naan seytha paavangal nin thayavaal theera
Naathaa jeevan vittaay van kurusil athaal
Saranangal
Verse 1
என் சிலுவையை எடுத்தேன் – எல்லாம் விட்டு
என்றும் நின்னையே அடுத்தேன்
நின் திருப்பாதத் தடங்களை நோக்கி நான்
நித்தமும் சென்று உம் சித்தம் என்றும் செய்து
En siluvaiyai eduththaen – ellaam vittu
Endrum ninnaiyae aduththaen
Nin thiruppaathath thadangalai nokki naan
Niththamum sendru um siththam endrum seythu
Verse 2
சிங்கம்போல கெர்ச்சித்தே – எந்தன் நேசரே
சீறி மிக வெதிர்த்தே
கங்குல் பகலும் தீ அம்பு என்மேல் எய்யும்
கடியின்மேல் ஜெயம் பெற்று அடியேன் நின்னருள் பெற்று
Singambola kerchiththae – enthan naesarae
Seeri miga vethirththae
Kangul pagalum thee ambu enmael eyyum
Kadiyinmael jeyam petru adiyaen ninnarul petru
Verse 3
நெருக்கஞ் செய்தால் மனுஷர் – அதென்னை உன்
நெஞ்சண்டை யோட்டுவதாம்;
கருக்கான சோதனை கடினமாய் வதைத்தாலும்
உருக்கமுள்ளோனே! உனை ஒருபோதுமே விடேன்
Nerukkanj seythaal manushar – athennai un
Nenjsandai yottuvathaam;
Karukkaana sothanai kadinamaay vathaiththaalum
Urukkamullonae! unai orubothumae vidaen
Pin Selluvean En Meetparae PPT – PowerPoint Slides
Download பின் செல்வேன் என் மீட்பரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.