Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thaayae Unthan Dharisanam Lyricsதாயே உந்தன் தரிசனம்

Artist to be confirmedPraiseFaith

Thaayae Unthan Dharisanam Lyrics in Tamil & English

Chorus

தாயே உந்தன் தரிசனம் தருவாயே (×2)

தரணி ஆளும் தாரகையே தஞ்சம் நீ அம்மா அண்டி வந்தோம் எங்களுக்கு

அடைக்கலம் நீ அம்மா

அம்மா மரியே எம்மை

அரவணைப்பாய் நீயே

தாயே உந்தன் தரிசனம் தருவாயே (×2)

Thaayae unthan tharisanam tharuvaayae (×2)

Tharani aalum thaaragaiyae thanjsam nee ammaa andi vanthom engalukku

Adaikkalam nee ammaa

Ammaa mariyae emmai

Aravanaippaay neeyae

Thaayae unthan tharisanam tharuvaayae (×2)

Verse 1

காரிருளில் நடப்பவர்க்கு பகலொளி நீ

தஞ்சமின்றி தவிப்பவர்க்கு தாய்மடி நீ (×2)

இறைவன் கண்டெடுத்த காவியம் நீ (×2)

இயேசுவை ஈன்றெடுத்த அழகோவியம் நீ (×2)

மரியே வாழ்க மரியே வாழ்க

Kaarirulil nadappavarkku pagaloli nee

Thanjsamindri thavippavarkku thaaymadi nee (×2)

Iraivan kandeduththa kaaviyam nee (×2)

Yesuvai eendreduththa azhagoviyam nee (×2)

Mariyae vaazhka mariyae vaazhka

Chorus

தாயே உந்தன் தரிசனம் தருவாயே…

Thaayae unthan tharisanam tharuvaayae…

Verse 2

பாரெல்லாம் உம் பெருமை பாடுதம்மா

உள்ளமெல்லாம் உன்னை நினைந்து மகிழுதம்மா (×2)

துயரில் உறுதுணை நீயம்மா (×2)

தாயென வந்தோம் அருள் தாருமம்மா (×2)

மரியே வாழ்க மரியே வாழ்க

Paarellaam um perumai paaduthammaa

Ullamellaam unnai ninainthu magizhuthammaa (×2)

Thuyaril uruthunai neeyammaa (×2)

Thaayena vanthom arul thaarumammaa (×2)

Mariyae vaazhka mariyae vaazhka

Chorus

தாயே உந்தன் தரிசனம் தருவாயே

Thaayae unthan tharisanam tharuvaayae

Thaayae Unthan Dharisanam PPT – PowerPoint Slides

Download தாயே உந்தன் தரிசனம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with T