Udalai Kodu Ullathai Kodu Lyrics in Tamil & English
Chorus
உடலைக்கொடு உள்ளத்தைக்கொடு உற்சாகமாய்
உன்னைக் கொடு ஒப்புக் கொடு சந்தோஷமாய் (×2)
இதிலே தேவன் பிரியமாய் இருக்கிறார்
இதிலே தான் மகிமை அடைகிறார் (×2)
Udalaikkodu ullaththaikkodu ursaagamaay
Unnaik kodu oppuk kodu santhoshamaay (×2)
Ithilae thaevan piriyamaay irukkiraar
Ithilae thaan magimai adaigiraar (×2)
Verse 1
ஒரு மணி நேரம் கொடுத்துப்பாரு
உன்னைத் தேவன் உயர்த்துவாரு (×2)
பத்தில் ஒரு பங்கு கொடுத்துப்பாரு
கடன் இல்லாமல் நடத்துவாரு (×2)
Oru mani naeram koduththuppaaru
Unnaith thaevan uyarththuvaaru (×2)
Paththil oru pangu koduththuppaaru
Kadan illaamal nadaththuvaaru (×2)
Verse 2
நன்றிப் பாடல் தினமும் பாடு
நல்ல தேவன் வருவார் உன்னோடு (×2)
என்ன நடந்தாலும் நன்றி கூறிடு -
தீமையை நன்மையால் தினமும் வென்றிடு (×2)
Nandrip paadal thinamum paadu
Nalla thaevan varuvaar unnodu (×2)
Enna nadanthaalum nandri kooridu -
Theemaiyai nanmaiyaal thinamum vendridu (×2)
Verse 3
தேசத்திற்காக தினம் மன்றாடு
பிறருக்காக பிரார்த்தனை செய்திடு (×2)
ஆளும் தலைவர்களை ஜெபத்தில் நினைத்திடு
அமைதி பொங்கிடும் வன்முறை நீங்கிடும் (×2)
Thaesaththirkaaga thinam mandraadu
Pirarukkaaga piraarththanai seythidu (×2)
Aalum thalaivarkalai jebaththil ninaiththidu
Amaithi pongidum vanmurai neengidum (×2)
Verse 4
விசுவாசம் தானே உலகத்தை ஜெயிக்கும்
விசுவாசி என்றும் பதறான் பதறான் (×2)
அறிக்கை செய்திடுவோம் எரிக்கோ பிடித்திடுவோம்
செங்கடல் விலகிடும் யோர்தான் பிரிந்திடும்
Visuvaasam thaanae ulagaththai jeyikkum
Visuvaasi endrum patharaan patharaan (×2)
Arikkai seythiduvom erikko pidiththiduvom
Sengadal vilagidum yorthaan pirinthidum
Verse 5
நாடெங்கும் சென்றிடு நற்செய்தி சொல்லிடு
வீடுகள் தோறும் விடுதலை கூறிடு
சபைகளை நிரப்பிடு சாட்சிகள் எழுப்பிடு
இரட்சகர் வருகைக்கு ஆயத்தமாக்கிடு
Naadengum sendridu narseythi sollidu
Veedugal thorum viduthalai kooridu
Sabaigalai nirappidu saatchigal ezhuppidu
Ratchagar varugaikku aayaththamaakkidu
Udalai Kodu Ullathai Kodu PPT – PowerPoint Slides
Download உடலைக்கொடு உள்ளத்தைக்கொடு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.