Job 17 in Tamil
யோபு 17
- 1
என் சுவாசம் ஒழிகிறது, என் நாட்கள் முடிகிறது; பிரேதக்குழி எனக்கு ஆயத்தமாயிருக்கிறது.
My breath is corrupt, my days are extinct, the graves [are ready] for me.
- 2
பரியாசம்பண்ணுகிறவர்கள் என்னிடத்தில் இல்லையோ? அவர்கள் செய்யும் அநியாயங்களை என் கண் பார்த்துக்கொண்டிருக்கிறது.
[Are there] not mockers with me? and doth not mine eye continue in their provocation?
- 3
தேவரீர் என் காரியத்தை மேல் போட்டுக்கொண்டு, எனக்காகப் பிணைப்படுவீராக; வேறே யார் எனக்குக் கைகொடுக்கத்தக்கவர்?
Lay down now, put me in a surety with thee; who [is] he [that] will strike hands with me?
- 4
நீர் அவர்கள் இருதயத்துக்குஞானத்தை மறைத்தீர்; ஆகையால் அவர்களை உயர்த்தாதிருப்பீர்.
For thou hast hid their heart from understanding: therefore shalt thou not exalt [them].
- 5
எவன் தன் சிநேகிதருக்குக் கேடாகத் துரோகம் பேசுகிறானோ, அவன் பிள்ளைகளின் கண்களும் பூத்துப்போகும்.
He that speaketh flattery to [his] friends, even the eyes of his children shall fail.
- 6
ஜனங்களுக்குள்ளே அவர் என்னைப் பழமொழியாக வைத்தார்; அவர்கள் முகத்துக்குமுன் நான் அருவருப்பானேன்.
He hath made me also a byword of the people; and aforetime I was as a tabret.
- 7
இதினிமித்தம் என் கண்கள் சஞ்சலத்தினால் இருளடைந்தது; என் அவயவங்களெல்லாம் நிழலைப்போலிருக்கிறது.
Mine eye also is dim by reason of sorrow, and all my members [are] as a shadow.
- 8
சன்மார்க்கர் இதற்காகப் பிரமிப்பார்கள்; குற்றமில்லாதவன் மாயக்காரனுக்கு விரோதமாக எழும்புவான்.
Upright [men] shall be astonied at this, and the innocent shall stir up himself against the hypocrite.
- 9
நீதிமான் தன் வழியை உறுதியாய்ப் பிடிப்பான்; சுத்தமான கைகளுள்ளவன் மேன்மேலும், பலத்துப்போவான்.
The righteous also shall hold on his way, and he that hath clean hands shall be stronger and stronger.
- 10
இப்போதும் நீங்கள் எல்லாரும் போய்வாருங்கள்; உங்களில் ஞானமுள்ள ஒருவனையும் காணேன்.
But as for you all, do ye return, and come now: for I cannot find [one] wise [man] among you.
- 11
என் நாட்கள் போயிற்று; என் இருதயத்தில் எனக்கு உண்டாயிருந்த சிந்தனைகள் அற்றுப்போயிற்று.
My days are past, my purposes are broken off, [even] the thoughts of my heart.
- 12
அவைகள் இரவைப் பகலாக்கிற்று; இருளை வெளிச்சம் தொடர்ந்து வரும் என்று எண்ணச்செய்தது.
They change the night into day: the light [is] short because of darkness.
- 13
அப்படி நான் காத்துக்கொண்டிருந்தாலும், பாதாளம் எனக்கு வீடாயிருக்கும்; இருளில் என் படுக்கையைப் போடுவேன்.
If I wait, the grave [is] mine house: I have made my bed in the darkness.
- 14
அழிவைப்பார்த்து, நீ எனக்குத் தகப்பன் என்கிறேன்; புழுக்களைப் பார்த்து, நீங்கள் எனக்குத் தாயும் எனக்குச் சகோதரியும் என்கிறேன்.
I have said to corruption, Thou [art] my father: to the worm, [Thou art] my mother, and my sister.
- 15
என் நம்பிக்கை இப்போது எங்கே? நான் நம்பியிருந்ததைக் காண்பவன் யார்?
And where [is] now my hope? as for my hope, who shall see it?
- 16
அது பாதாளத்தின் காவலுக்குள் இறங்கும்; அப்போது தூளில் ஏகமாய் இளைப்பாறுவோம் என்றான்.
They shall go down to the bars of the pit, when [our] rest together [is] in the dust.