Job 5:24 in Tamil
உம்முடைய கூடாரம் சமாதானத்தோடிருக்கக் காண்பீர்; உம்முடைய வாசஸ்தலத்தை விசாரிக்கும்போது குறைவைக் காணமாட்டீர்.
Ummudaiya koodaaram samaathaanaththodirukkak kaanpeer; ummudaiya vaasasthalaththai visaarikkumbothu kuraivaik kaanamaatteer.
Job 5:24 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- உம்முடைய குடியிருப்பு சமாதானத்துடன் இருக்கக் காண்பீர்; உம்முடைய குடியிருக்கும் இடத்தை விசாரிக்கும்போது குறைவைக் காணமாட்டீர்.
- Open Tamil Contemporary Version
- உன் கூடாரம் பாதுகாக்கப்பட்டிருப்பதை நீ அறிவாய்; உன் உடைமைகளைக் கணக்கெடுக்கும்போது ஒன்றும் குறைவுபடாதிருப்பதையும் நீ காண்பாய்.
- Tamil Easy Reading Version
- உனது கூடாரம் பாதுகாப்பாக இருப்பதால் நீ சமாதானத்தோடு (அமைதியாக) வாழ்வாய். உனது கொத்துக்களை எண்ணிப் பார்த்து ஒன்றும் காணாமல் போகாதிருப்பதைக் காண்பாய்.
Job 5:24 in English
- King James Version (KJV)
- And thou shalt know that thy tabernacle [shall be] in peace; and thou shalt visit thy habitation, and shalt not sin.
- World English Bible (WEB)
- You will know that your tent is in peace. You will visit your fold, and will miss nothing.
- American Standard Version (ASV)
- And thou shalt know that thy tent is in peace; And thou shalt visit thy fold, and shalt miss nothing.
- Bible in Basic English (BBE)
- And you will be certain that your tent is at peace, and after looking over your property you will see that nothing is gone.
- Darby Translation (DBY)
- And thou shalt know that thy tent is in peace; and thou wilt survey thy fold, and miss nothing.
- Webster's Bible (WBS)
- And thou shalt know that thy tabernacle [will be] in peace; and thou shalt visit thy habitation, and shalt not sin.
- Young's Literal Translation (YLT)
- And thou hast known that thy tent [is] peace, And inspected thy habitation, and errest not,
Read in context
- 22பாழாக்குதலையும் பஞ்சத்தையும் பார்த்து நகைப்பீர்; காட்டுமிருகங்களுக்கும் பயப்படாமலிருப்பீர்.
- 23வெளியின் கல்லுகளோடும் உமக்கு உடன்படிக்கையிருக்கும்; வெளியின் மிருகங்களும் உம்மோடே சமாதானமாயிருக்கும்.
- 24உம்முடைய கூடாரம் சமாதானத்தோடிருக்கக் காண்பீர்; உம்முடைய வாசஸ்தலத்தை விசாரிக்கும்போது குறைவைக் காணமாட்டீர்.
- 25உம்முடைய சந்தானம் பெருகி, உம்முடைய சந்ததியார் பூமியின் பூண்டுகளைப்போல இருப்பார்கள் என்பதை அறிந்துகொள்வீர்.
- 26தானியம் ஏற்றகாலத்திலே அம்பாரத்தில் சேருகிறதுபோல, முதிர்வயதிலே கல்லறையில் சேருவீர்.
Cross references
- Psalm 121:7–8 சங்கீதம் 121:7–8கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார். கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார். (தாவீது பாடின ஆரோகண சங்கீதம்.)
- Psalm 91:10 சங்கீதம் 91:10ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது.
- Job 8:6 யோபு 8:6சுத்தமும் செம்மையுமாய் இருந்தீரேயானால், அப்பொழுது அவர் உமக்காக விழித்து நீதியுள்ள உம்முடைய வாசஸ்தலத்தைச் சாங்கோபாங்கமாக்குவார்.
- Deuteronomy 28:6 உபாகமம் 28:6நீ வருகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய், நீ போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்.
- Isaiah 4:5–6 ஏசாயா 4:5–6அப்பொழுது கர்த்தர் சீயோன் மலையிலுள்ள எல்லா வாசஸ்தலங்களிலும், அதின் சபைகளின்மேலும், பகலில் மேகத்தையும் புகையையும், இரவில் கொழுந்துவிட்டு எரியும் அக்கினிப்பிரகாசத்தையும் உண்டாக்குவார்; மகிமையானவைகளின்மேலெல்லாம்காவல் உண்டாயிருக்கும். பகலிலே வெயிலுக்கு நிழலாகவும், பெருங்காற்றுக்கும் மழைக்கும் அடைக்கலமாகவும், மறைவிடமாகவும், ஒரு கூடாரம் உண்டாயிருக்கும்.
- Job 18:21 யோபு 18:21அக்கிரமக்காரன் குடியிருந்தஸ்தானங்கள் இவைகள்தான்; தேவனை அறியாமற்போனவனுடைய ஸ்தலம் இதுவே என்பார்கள் என்றான்.
- Job 18:6 யோபு 18:6அவன் கூடாரத்தில் வெளிச்சம் அந்தகாரப்படும்; அவன் விளக்கு அவனுடனே அணைந்துபோம்.
- Psalm 107:4 சங்கீதம் 107:4அவர்கள் தாபரிக்கும் ஊரைக்காணாமல், வனாந்தரத்திலே அவாந்தரவழியாய்,
- Psalm 25:13 சங்கீதம் 25:13அவன் ஆத்துமா நன்மையில் தங்கும்; அவன் சந்ததி பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளும்.
- Job 18:15 யோபு 18:15அவனுக்கு ஒன்றுமில்லாமற் போனதினால், பயங்கரம் அவன் கூடாரத்தில் குடியிருக்கும்; கந்தகம் அவன் வாசஸ்தலத்தின்மேல் தெளிக்கப்படும்.
- 1 Samuel 30:3 1 சாமுவேல் 30:3தாவீதும் அவன் மனுஷரும் அந்தப் பட்டணத்திற்கு வந்தபோது, இதோ, அது அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது என்றும், தங்கள் மனைவிகளும் தங்கள் குமாரரும் தங்கள் குமாரத்திகளும் சிறைபிடித்துக் கொண்டுபோகப்பட்டார்கள் என்றும் கண்டார்கள்.
- Psalm 107:40 சங்கீதம் 107:40அவர் பிரபுக்களின்மேல் இகழ்ச்சி வரப்பண்ணி, வழியில்லாத அவாந்தர வெளியிலே அவர்களைத் திரியச்செய்து,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.