Job 5 in Tamil
யோபு 5
- 1
இப்போது கூப்பிடும், உமக்கு உத்தரவு கொடுப்பார் உண்டோ பார்ப்போம்? பரிசுத்தவான்களில் யாரை நோக்கிப் பார்ப்பீர்?
Call now, if there be any that will answer thee; and to which of the saints wilt thou turn?
- 2
கோபம் நிர்மூடனைக் கொல்லும்; பொறாமை புத்தியில்லாதவனை அதம்பண்ணும்.
For wrath killeth the foolish man, and envy slayeth the silly one.
- 3
நிர்மூடன் ஒருவன் வேரூன்றுகிறதை நான் கண்டு உடனே அவன் வாசஸ்தலத்தைச் சபித்தேன்.
I have seen the foolish taking root: but suddenly I cursed his habitation.
- 4
அவன் பிள்ளைகள் இரட்சிப்புக்குத்தூரமாகி, தப்புவிப்பாரில்லாமல், வாசலிலே நொறுக்கப்பட்டார்கள்.
His children are far from safety, and they are crushed in the gate, neither [is there] any to deliver [them].
- 5
பசித்தவன் அவன் விளைச்சலை முட்செடிகளுக்குள்ளுமிருந்து பறித்துத்தின்றான்; பறிகாரன் அவன் ஆஸ்தியை விழுங்கினான்.
Whose harvest the hungry eateth up, and taketh it even out of the thorns, and the robber swalloweth up their substance.
- 6
தீங்கு புழுதியிலிருந்து உண்டாகிறதுமில்லை; வருத்தம் மண்ணிலிருந்து முளைக்கிறதுமில்லை.
Although affliction cometh not forth of the dust, neither doth trouble spring out of the ground;
- 7
அக்கினிப்பொறிகள் மேலே பறக்கிறதுபோல, மனுஷன் வருத்தம் அனுபவிக்கப் பிறந்திருக்கிறான்.
Yet man is born unto trouble, as the sparks fly upward.
- 8
ஆனாலும் நான் தேவனை நாடி, என் நியாயத்தைத் தேவனிடத்தில் ஒப்புவிப்பேன்.
I would seek unto God, and unto God would I commit my cause:
- 9
ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்.
Which doeth great things and unsearchable; marvellous things without number:
- 10
தாழ்ந்தவர்களை உயரத்தில் வைத்து, துக்கிக்கிறவர்களை இரட்சித்து உயர்த்துகிறார்.
Who giveth rain upon the earth, and sendeth waters upon the fields:
- 11
அவர் பூமியின்மேல் மழையை வருஷிக்கப்பண்ணி, வெளிநிலங்களின்மேல் தண்ணீர்களை வருவிக்கிறார்.
To set up on high those that be low; that those which mourn may be exalted to safety.
- 12
தந்திரக்காரரின் கைகள் காரியத்தை முடிய நடத்தக்கூடாதபடிக்கு, அவர்களுடைய உபாயங்களை அவர் அபத்தமாக்குகிறார்.
He disappointeth the devices of the crafty, so that their hands cannot perform [their] enterprise.
- 13
அவர் ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறார்; திரியாவரக்காரரின் ஆலோசனை கவிழ்க்கப்படும்.
He taketh the wise in their own craftiness: and the counsel of the froward is carried headlong.
- 14
அவர்கள் பகற்காலத்திலே அந்தகாரத்துக்குள்ளாகி, மத்தியான வேளையிலே இரவில் தடவுகிறதுபோலத்தடவித் திரிகிறார்கள்.
They meet with darkness in the daytime, and grope in the noonday as in the night.
- 15
ஆனாலும் எளியவனை அவர்கள் வாயிலிருக்கிற பட்டயத்துக்கும், பெலவானின் கைக்கும் விலக்கி இரட்சிக்கிறார்.
But he saveth the poor from the sword, from their mouth, and from the hand of the mighty.
- 16
அதினால் தரித்திரனுக்கு நம்பிக்கை உண்டு; தீமையானது தன் வாயை மூடும்.
So the poor hath hope, and iniquity stoppeth her mouth.
- 17
இதோ, தேவன் தண்டிக்கிற மனுஷன் பாக்கியவான்; ஆகையால் சர்வவல்லவருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதிரும்.
Behold, happy [is] the man whom God correcteth: therefore despise not thou the chastening of the Almighty:
- 18
அவர் காயப்படுத்திக் காயங்கட்டுகிறார்; அவர் அடிக்கிறார், அவருடைய கை ஆற்றுகிறது.
For he maketh sore, and bindeth up: he woundeth, and his hands make whole.
- 19
ஆறு இக்கட்டுகளுக்கு உம்மைநீங்கலாக்குவார்; ஏழாவதிலும் பொல்லாப்பு உம்மைத் தொடாது.
He shall deliver thee in six troubles: yea, in seven there shall no evil touch thee.
- 20
பஞ்சகாலத்திலே அவர் உம்மைமரணத்துக்கும், யுத்தத்திலே பட்டயத்தின் வெட்டுக்கும் விலக்கி மீட்பார்.
In famine he shall redeem thee from death: and in war from the power of the sword.
- 21
நாவின் சவுக்குக்கும் மறைக்கப்படுவீர்; பாழாக்குதல் வரும்போதும் பயப்படாமலிருப்பீர்.
Thou shalt be hid from the scourge of the tongue: neither shalt thou be afraid of destruction when it cometh.
- 22
பாழாக்குதலையும் பஞ்சத்தையும் பார்த்து நகைப்பீர்; காட்டுமிருகங்களுக்கும் பயப்படாமலிருப்பீர்.
At destruction and famine thou shalt laugh: neither shalt thou be afraid of the beasts of the earth.
- 23
வெளியின் கல்லுகளோடும் உமக்கு உடன்படிக்கையிருக்கும்; வெளியின் மிருகங்களும் உம்மோடே சமாதானமாயிருக்கும்.
For thou shalt be in league with the stones of the field: and the beasts of the field shall be at peace with thee.
- 24
உம்முடைய கூடாரம் சமாதானத்தோடிருக்கக் காண்பீர்; உம்முடைய வாசஸ்தலத்தை விசாரிக்கும்போது குறைவைக் காணமாட்டீர்.
And thou shalt know that thy tabernacle [shall be] in peace; and thou shalt visit thy habitation, and shalt not sin.
- 25
உம்முடைய சந்தானம் பெருகி, உம்முடைய சந்ததியார் பூமியின் பூண்டுகளைப்போல இருப்பார்கள் என்பதை அறிந்துகொள்வீர்.
Thou shalt know also that thy seed [shall be] great, and thine offspring as the grass of the earth.
- 26
தானியம் ஏற்றகாலத்திலே அம்பாரத்தில் சேருகிறதுபோல, முதிர்வயதிலே கல்லறையில் சேருவீர்.
Thou shalt come to [thy] grave in a full age, like as a shock of corn cometh in in his season.
- 27
இதோ, நாங்கள் ஆராய்ந்து அறிந்தது இதுதான்; காரியம் இப்படியிருக்கிறது; இதை நீர் கேட்டு உமக்கு நன்மையுண்டாக அறிந்துகொள்ளும் என்றான்.
Lo this, we have searched it, so it [is;] hear it, and know thou [it] for thy good.