Proverbs 16:25 in Tamil
மனுஷனுக்குச் செம்மையாய்த்தோன்றுகிற வழியுண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.
Manushanukkus semmaiyaayththondrugira vazhiyundu; athin mudivo marana vazhigal.
Proverbs 16:25 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மனிதனுக்குச் செம்மையாகத் தோன்றுகிற வழியுண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.
- Open Tamil Contemporary Version
- மனிதனுக்கு சரியெனத் தோன்றும் வழி ஒன்று உண்டு; முடிவில் அது மரணத்திற்கே வழிநடத்தும்.
- Tamil Easy Reading Version
- ஜனங்களுக்குச் சில வழிகள் சரியானதாக தோன்றும். அவ்வழிகள் மரணத்துக்கே அழைத்துச் செல்லும்.
Proverbs 16:25 in English
- King James Version (KJV)
- There is a way that seemeth right unto a man, but the end thereof [are] the ways of death.
- World English Bible (WEB)
- There is a way which seems right to a man, but in the end it leads to death.
- American Standard Version (ASV)
- There is a way which seemeth right unto a man, But the end thereof are the ways of death.
- Bible in Basic English (BBE)
- There is a way which seems straight before a man, but its end is the ways of death.
- Darby Translation (DBY)
- There is a way that seemeth right unto a man, but the end thereof is the ways of death.
- Webster's Bible (WBS)
- There is a way that seemeth right to a man, but the end of it [is] the ways of death.
- Young's Literal Translation (YLT)
- There is a way right before a man, And its latter end — ways of death.
Read in context
- 23ஞானியின் இருதயம் அவன் வாய்க்கு அறிவை யூட்டும்; அவன் உதடுகளுக்கு அது மேன்மேலும் கல்வியைக் கொடுக்கும்.
- 24இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு மதுரமும், எலும்புகளுக்கு ஒளஷதமுமாகும்.
- 25மனுஷனுக்குச் செம்மையாய்த்தோன்றுகிற வழியுண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.
- 26பிரயாசப்படுகிறவன் தனக்காகவே பிரயாசப்படுகிறான்; அவன் வாய் அதை அவனிடத்தில் வருந்திக் கேட்கும்.
- 27பேலியாளின் மகன் கிண்டிவிடுகிறான்; எரிகிற அக்கினிபோன்றது அவன் உதடுகளில் இருக்கிறது.
Cross references
- Proverbs 14:12 நீதிமொழிகள் 14:12மனுஷனுக்குத் செம்மையாய்த்தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.
- Proverbs 12:15 நீதிமொழிகள் 12:15மதியீனனுடைய வழி அவன் பார்வைக்குச் செம்மையாயிருக்கும்; ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன்.
- 2 Corinthians 13:5 2 கொரிந்தியர் 13:5நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்; உங்களை நீங்களே பரீட்சித்துப்பாருங்கள். இயேசுகிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறாரென்று உங்களை நீங்களே அறியீர்களா? நீங்கள் பரீட்சைக்கு நில்லாதவர்களாயிருந்தால் அறியீர்கள்.
- Proverbs 12:26 நீதிமொழிகள் 12:26நீதிமான் தன் அயலானைப்பார்க்கிலும் மேன்மையுள்ளவன்; துன்மார்க்கருடைய வழியோ அவர்களை மோசப்படுத்தும்.
- Isaiah 28:15–19 ஏசாயா 28:15–19நீங்கள்: மரணத்தோடே உடன்படிக்கையும், பாதாளத்தோடே ஒப்பந்தமும் பண்ணினோம்; வாதை பெருவெள்ளமாய்ப் புரண்டுவந்தாலும் எங்களை அணுகாது; நாங்கள் பொய்யை எங்களுக்கு அடைக்கலமாக்கி, மாயையின் மறைவிலே வந்து அடைந்தோம் என்கிறீர்களே. ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன்; அது பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும், விசுவாசிக்கிறவன் பதறான். நான் நியாயத்தை நூலும், நீதியைத் தூக்கு நூலுமாக வைப்பேன்; பொய் என்னும் அடைக்கலத்தைக் கல்மழை அழித்துவிடும்; மறைவிடத்தை ஜலப்பிரவாகம் அடித்துக்கொண்டுபோகும். நீங்கள் மரணத்தோடு செய்த உடன்படிக்கை விருதாவாகி, நீங்கள் பாதாளத்தோடு செய்த ஒப்பந்தம் நிற்காதேபோம்; வாதை புரண்டுவரும்போது அதின்கீழ் மிதிக்கப்படுவீர்கள். அது புரண்டுவந்தமாத்திரத்தில் உங்களை அடித்துக்கொண்டுபோம்; அது நாள்தோறும் இரவும்பகலும் புரண்டுவரும்; அதைப்பற்றிப் பிறக்குஞ்செய்தியைக் கேட்பதும் சஞ்சலத்தை உண்டாக்கும்.
- John 7:47–49 யோவான் 7:47–49அப்பொழுது பரிசேயர்: நீங்களும் வஞ்சிக்கப்பட்டீர்களா? அதிகாரிகளிலாவது பரிசேயரிலாவது யாதாமொருவர் அவனை விசுவாசித்ததுண்டா? வேதத்தை அறியாதவர்களாகிய இந்த ஜனங்கள் சபிக்கப்பட்டவர்கள் என்றார்கள்.
- Acts 26:9 அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:9முன்னே நானும் நசரேயனாகிய இயேசுவின் நாமத்திற்கு விரோதமாய் அநேக காரியங்களை நடப்பிக்கவேண்டுமென்று நினைத்திருந்தேன்.
- John 9:40 யோவான் 9:40அவருடனேகூட இருந்த பரிசேயரில் சிலர் இவைகளைக் கேட்டபொழுது: நாங்களும் குருடரோ என்றார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.