Peace Bible Verses in Tamil
சமாதானம் வசனங்கள்
Verses of peace for an anxious heart.
சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.
Peace I leave with you, my peace I give unto you: not as the world giveth, give I unto you. Let not your heart be troubled, neither let it be afraid.
John 14:27 (யோவான் 14:27) நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்கு தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.
Be careful for nothing; but in every thing by prayer and supplication with thanksgiving let your requests be made known unto God. And the peace of God, which passeth all understanding, shall keep your hearts and minds through Christ Jesus.
Philippians 4:6–7 (பிலிப்பியர் 4:6–7) உம்மைஉறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.
Thou wilt keep [him] in perfect peace, [whose] mind [is] stayed [on thee:] because he trusteth in thee.
Isaiah 26:3 (ஏசாயா 26:3) என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன். என்றார். அதிகாரம்
These things I have spoken unto you, that in me ye might have peace. In the world ye shall have tribulation: but be of good cheer; I have overcome the world.
John 16:33 (யோவான் 16:33) கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர் என்பதே.
The LORD lift up his countenance upon thee, and give thee peace.
Numbers 6:26 (எண்ணாகமம் 6:26) பரிசுத்தஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக.
Now the God of hope fill you with all joy and peace in believing, that ye may abound in hope, through the power of the Holy Ghost.
Romans 15:13 (ரோமர் 15:13) தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்.
And let the peace of God rule in your hearts, to the which also ye are called in one body; and be ye thankful.
Colossians 3:15 (கொலோசெயர் 3:15) சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னை சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர். (நெகினோத்தென்னும் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.)
I will both lay me down in peace, and sleep: for thou, LORD, only makest me dwell in safety.
Psalm 4:8 (சங்கீதம் 4:8) சமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக. கர்த்தர் உங்களனைவரோடுங்கூட இருப்பாராக.
Now the Lord of peace himself give you peace always by all means. The Lord [be] with you all.
2 Thessalonians 3:16 (2 தெசலோனிக்கேயர் 3:16) நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
For unto us a child is born, unto us a son is given: and the government shall be upon his shoulder: and his name shall be called Wonderful, Counsellor, The mighty God, The everlasting Father, The Prince of Peace.
Isaiah 9:6 (ஏசாயா 9:6) சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.
Blessed [are] the peacemakers: for they shall be called the children of God.
Matthew 5:9 (மத்தேயு 5:9) கர்த்தர் தமது ஜனத்திற்குப்பெலன்கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார். (கிரகப்பிரதிஷ்டையின் பாட்டாகிய தாவீதின் சங்கீதம்.)
The LORD will give strength unto his people; the LORD will bless his people with peace.
Psalm 29:11 (சங்கீதம் 29:11)
More Bible verses in Tamil
- Blessing ஆசீர்வாதம்
- Comfort ஆறுதல்
- Strength பெலன்
- Motivation and success வெற்றி
- Love அன்பு
- Faith விசுவாசம்
- Healing சுகம்
- Prayer ஜெபம்
- Thanksgiving நன்றி
- Birthday பிறந்தநாள்
- Wedding and marriage திருமணம்
- New Year புத்தாண்டு
- Children பிள்ளைகள்
- Fear and worry பயம் வேண்டாம்
- Forgiveness மன்னிப்பு
- Salvation இரட்சிப்பு
- Holy Spirit பரிசுத்த ஆவி
- Christmas கிறிஸ்துமஸ்
- Good Friday and Easter உயிர்த்தெழுதல்