Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Children Bible Verses in Tamil

Verses for and about children and parents.

  1. நீங்கள் அதிகாலையில் எழுந்து, நேரப்பட வேலையிலே தரித்து, வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் விருதா; அவரே தமக்குப் பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார்.

    Lo, children [are] an heritage of the LORD: [and] the fruit of the womb [is his] reward.

    Psalm 127:3 (சங்கீதம் 127:3)
  2. பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.

    Train up a child in the way he should go: and when he is old, he will not depart from it.

    Proverbs 22:6 (நீதிமொழிகள் 22:6)
  3. இயேசு அதைக் கண்டு, விசனமடைந்து: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது.

    But when Jesus saw [it], he was much displeased, and said unto them, Suffer the little children to come unto me, and forbid them not: for of such is the kingdom of God.

    Mark 10:14 (மாற்கு 10:14)
  4. பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக்கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம். உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும். உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது. பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக.

    Children, obey your parents in the Lord: for this is right. Honour thy father and mother; (which is the first commandment with promise;) That it may be well with thee, and thou mayest live long on the earth. And, ye fathers, provoke not your children to wrath: but bring them up in the nurture and admonition of the Lord.

    Ephesians 6:1–4 (எபேசியர் 6:1–4)
  5. இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக்கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசி,

    And these words, which I command thee this day, shall be in thine heart: And thou shalt teach them diligently unto thy children, and shalt talk of them when thou sittest in thine house, and when thou walkest by the way, and when thou liest down, and when thou risest up.

    Deuteronomy 6:6–7 (உபாகமம் 6:6–7)
  6. உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள்; உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும்.

    And all thy children [shall be] taught of the LORD; and great [shall be] the peace of thy children.

    Isaiah 54:13 (ஏசாயா 54:13)
  7. நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்.

    I will praise thee; for I am fearfully [and] wonderfully made: marvellous [are] thy works; and [that] my soul knoweth right well.

    Psalm 139:14 (சங்கீதம் 139:14)
  8. என் மகனே, என் போதகத்தை மறவாதே; உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது. அவைகள் உனக்கு நீடித்த நாட்களையும், தீர்க்காயுசையும், சமாதானத்தையும் பெருகப்பண்ணும்.

    My son, forget not my law; but let thine heart keep my commandments: For length of days, and long life, and peace, shall they add to thee.

    Proverbs 3:1–2 (நீதிமொழிகள் 3:1–2)
  9. இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

    Take heed that ye despise not one of these little ones; for I say unto you, That in heaven their angels do always behold the face of my Father which is in heaven.

    Matthew 18:10 (மத்தேயு 18:10)
  10. பிள்ளைகளே, உங்களைப் பெற்றோருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள்; இது கர்த்தருக்குப் பிரியமானது.

    Children, obey [your] parents in all things: for this is well pleasing unto the Lord.

    Colossians 3:20 (கொலோசெயர் 3:20)
  11. பிள்ளைகளே, வந்து எனக்குச் செவிகொடுங்கள்; கர்த்தருக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன்.

    Come, ye children, hearken unto me: I will teach you the fear of the LORD.

    Psalm 34:11 (சங்கீதம் 34:11)
  12. என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிறசந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை.

    I have no greater joy than to hear that my children walk in truth.

    3 John 1:4 (3 யோவான் 1:4)

More Bible verses in Tamil

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

King James Version: public domain.