Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Birthday Bible Verses in Tamil

Birthday Bible verses and blessings to share.

  1. கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர் என்பதே.

    The LORD bless thee, and keep thee: The LORD make his face shine upon thee, and be gracious unto thee: The LORD lift up his countenance upon thee, and give thee peace.

    Numbers 6:24–26 (எண்ணாகமம் 6:24–26)
  2. நீர் என் உள்ளிந்திரியங்களைக்கைக்கொண்டிருக்கிறீர்; என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர். நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்.

    For thou hast possessed my reins: thou hast covered me in my mother’s womb. I will praise thee; for I am fearfully [and] wonderfully made: marvellous [are] thy works; and [that] my soul knoweth right well.

    Psalm 139:13–14 (சங்கீதம் 139:13–14)
  3. நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள்தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.

    For I know the thoughts that I think toward you, saith the LORD, thoughts of peace, and not of evil, to give you an expected end.

    Jeremiah 29:11 (எரேமியா 29:11)
  4. நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்.

    So teach [us] to number our days, that we may apply [our] hearts unto wisdom.

    Psalm 90:12 (சங்கீதம் 90:12)
  5. இது கர்த்தர் உண்டுபண்ணின நாள்; இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்.

    This [is] the day [which] the LORD hath made; we will rejoice and be glad in it.

    Psalm 118:24 (சங்கீதம் 118:24)
  6. என்னாலே உன் நாட்கள் பெருகும்; உன் ஆயுசின் வருஷங்கள் விருத்தியாகும்.

    For by me thy days shall be multiplied, and the years of thy life shall be increased.

    Proverbs 9:11 (நீதிமொழிகள் 9:11)
  7. அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக.

    Grant thee according to thine own heart, and fulfil all thy counsel.

    Psalm 20:4 (சங்கீதம் 20:4)
  8. நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரியதாயிருக்கிறது.

    [It is of] the LORD’s mercies that we are not consumed, because his compassions fail not. [They are] new every morning: great [is] thy faithfulness.

    Lamentations 3:22–23 (புலம்பல் 3:22–23)
  9. நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன். (ஓய்வு நாளின் பாட்டாகிய சங்கீதம்.)

    With long life will I satisfy him, and shew him my salvation.

    Psalm 91:16 (சங்கீதம் 91:16)
  10. பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்.

    Beloved, I wish above all things that thou mayest prosper and be in health, even as thy soul prospereth.

    3 John 1:2 (3 யோவான் 1:2)
  11. உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயதுமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்துவந்தேன்; இனி மேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன்.

    And [even] to [your] old age I [am] he; and [even] to hoar hairs will I carry [you:] I have made, and I will bear; even I will carry, and will deliver [you].

    Isaiah 46:4 (ஏசாயா 46:4)
  12. ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு. (தாவீதின் விண்ணப்பம்.)

    Thou wilt shew me the path of life: in thy presence [is] fulness of joy; at thy right hand [there are] pleasures for evermore.

    Psalm 16:11 (சங்கீதம் 16:11)

More Bible verses in Tamil

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

King James Version: public domain.