Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Vaarum Magathuvamulla Arasae Lyricsவாரும் மகத்துவ முள்ள அரசே

CrossWorshipHoly Spirit

Vaarum Magathuvamulla Arasae Lyrics in Tamil & English

Chorus

வாரும் மகத்துவ முள்ள அரசே!

மனுக்குலத்தை இரட்சிக்கவென்று!

Vaarum magaththuva mulla arasae!

Manukkulaththai ratchikkavendru!

Bridge

கேளும் உமதடியார் விண்ணப்பங்களை அன்பாய்!

கேட்டு உமதாவியின் வரங்களைப் பொழிந்திட

Kaelum umathadiyaar vinnappangalai anpaay!

Kaettu umathaaviyin varangalaip pozhinthida

Verse 1

பாருல குதித்தீரே! பகைஞனை ஜெயித்தீரே!

பாவ விஷ மகற்றப் படுகொலை யடைந்தீரே!

சாவின் கூரொடித்தீரே! தரணியில் உயிர்த்தீரே!

தற்பரனின் வல பாகத்தைத் தெரிந்தீரே! – வா

Paarula kuthiththeerae! pagainjanai jeyiththeerae!

Paava visha magatrap padugolai yadaintheerae!

Saavin koorodiththeerae! tharaniyil uyirththeerae!

Tharparanin vala paagaththaith therintheerae! – vaa

Verse 2

என்னை இரட்சிக்கவென்று உன்னதம் துறந்தவா!

எளியன் மனுவடிவம் ஏற்கவும் மகிழ்ந்தவா!

சென்னி அழுந்திநோக முண்முடி புனைந்தவா!

சிலுவை மரத்தில் இரு கள்வரோடிறந்தவா! – வா

Ennai ratchikkavendru unnatham thuranthavaa!

Eliyan manuvadivam aerkavum magizhnthavaa!

Senni azhunthinoga munmudi punainthavaa!

Siluvai maraththil iru kalvarodiranthavaa! – vaa

Verse 3

கிருபையுடன் என்னிருதயந்தனில் வாரும்!

கேடுபாடுகள் எல்லாவற்றையும் தீரும்!

பொறுமை நம்பிக்கை அன்பு போதவே தாரும்!

பொன்னுலகமதில் என்னையும் சேரும்! – வா

Kirubaiyudan enniruthayanthanil vaarum!

Kaedubaadugal ellaavatraiyum theerum!

Porumai nambikkai anpu pothavae thaarum!

Ponnulagamathil ennaiyum saerum! – vaa

Vaarum Magathuvamulla Arasae PPT – PowerPoint Slides

Download வாரும் மகத்துவ முள்ள அரசே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Vaarum Magathuvamulla Arasae meaning பாடலின் பொருள்

chorus

The singer calls on Jesus, the majestic King, to come, since he came to save humankind.

மனுக்குலத்தை இரட்சிக்க வந்த மகத்துவ அரசரே, வாரும் என்று அழைக்கிறோம்.

bridge

The worshippers ask the Lord to lovingly hear their prayers and, in answer, to pour out the gifts of his Spirit on them.

எங்கள் விண்ணப்பங்களைக் கேட்டு உம் ஆவியின் வரங்களைப் பொழியும் என்று வேண்டுகிறோம்.

verse

This verse recounts Christ's work: he was born into the world, defeated the enemy, and was put to death to remove the poison of sin. He broke the sting of death, rose again, and took his place at God's right hand.

உலகில் பிறந்து, பாவத்துக்காக மரித்து, உயிர்த்து, தேவனின் வலப்பக்கம் அமர்ந்தவரைப் போற்றுகிறோம்.

verse

The singer marvels that Jesus left heaven's glory to save him and gladly took on lowly human form. He wore a crown of thorns that pressed into his head and died on the cross between two thieves.

என்னை இரட்சிக்க மனிதனாகி, முண்முடி சூடி, சிலுவையில் மரித்தவரை நினைத்து வியக்கிறோம்.

verse

The singer prays for Jesus to come graciously into his heart and remove all his troubles and faults. He asks for enough patience, hope and love, and to be brought at last into the golden world of heaven.

என் இதயத்தில் வந்து, குறைகளை நீக்கி, அன்பும் நம்பிக்கையும் தந்து, பரலோகத்தில் சேர்த்துக்கொள்ளும் என்று ஜெபிக்கிறோம்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

    But he [was] wounded for our transgressions, [he was] bruised for our iniquities: the chastisement of our peace [was] upon him; and with his stripes we are healed.

    Isaiah 53:5 (ஏசாயா 53:5)
  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

    John 3:16 (யோவான் 3:16)
  • பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.

    But ye shall receive power, after that the Holy Ghost is come upon you: and ye shall be witnesses unto me both in Jerusalem, and in all Judæa, and in Samaria, and unto the uttermost part of the earth.

    Acts 1:8 (அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:8)

Good Friday and Easter verses in Tamil →Love verses in Tamil →Holy Spirit verses in Tamil →

More Tamil Christian songs starting with V