Job 7 in Tamil
யோபு 7
- 1
பூமியிலே போராட மனுஷனுக்குக் குறிக்கப்பட்ட காலம் உண்டல்லவோ? அவன் நாட்கள் ஒரு கூலிக்காரன் நாட்களைப்போல் இருக்கிறதல்லவோ?
[Is there] not an appointed time to man upon earth? [are not] his days also like the days of an hireling?
- 2
ஒரு வேலையாள் நிழலை வாஞ்சித்து, ஒரு கூலிக்காரன் தன் கூலியை வரப்பார்த்திருக்கிறதுபோல,
As a servant earnestly desireth the shadow, and as an hireling looketh for [the reward of] his work:
- 3
மாயையான மாதங்கள் என்னுடைய சுதந்தரமாகி, சஞ்சலமான ராத்திரிகள் எனக்குக் குறிக்கப்பட்டது.
So am I made to possess months of vanity, and wearisome nights are appointed to me.
- 4
நான் படுத்துக்கொள்ளுகிறபோது, எப்பொழுது எழுந்திருப்பேன்? இராக்காலம் எப்பொழுது முடியும் என்று சொல்லி, கிழக்குவெளுக்குமட்டும் அரண்டு புரளுகிறதினால் எனக்குப் போதுமென்று போகிறது.
When I lie down, I say, When shall I arise, and the night be gone? and I am full of tossings to and fro unto the dawning of the day.
- 5
என் மாம்சம் பூச்சிகளினாலும்; அடைபற்றின புழுதியினாலும் மூடப்பட்டிருக்கிறது; என் தோல் வெடித்து அருவருப்பாயிற்று.
My flesh is clothed with worms and clods of dust; my skin is broken, and become loathsome.
- 6
என் நாட்கள் நெய்கிறவன் எறிகிற நாடாவிலும் தீவிரமாய் ஓடுகிறது; அவைகள் நம்பிக்கையில்லாமல் முடிந்துபோகும்.
My days are swifter than a weaver’s shuttle, and are spent without hope.
- 7
என் பிராணன் காற்றைப்போலிருக்கிறதென்றும், என் கண்கள் இனி நன்மையைக் காணப்போகிறதில்லையென்றும் நினைத்தருளும்.
O remember that my life [is] wind: mine eye shall no more see good.
- 8
இப்போது என்னைக் காண்கிறவர்களின் கண்கள் இனி என்னைக் காண்பதில்லை; உம்முடைய கண்கள் என்மேல் நோக்கமாயிருக்கிறது; நானோ இல்லாமற்போகிறேன்.
The eye of him that hath seen me shall see me no [more:] thine eyes [are] upon me, and I [am] not.
- 9
மேகம் பறந்துபோகிறதுபோல, பாதாளத்தில் இறங்குகிறவன் இனி ஏறிவரான்.
[As] the cloud is consumed and vanisheth away: so he that goeth down to the grave shall come up no [more].
- 10
இனி தன் வீட்டுக்குத் திரும்பான், அவன் ஸ்தலம் இனி அவனை அறியாது.
He shall return no more to his house, neither shall his place know him any more.
- 11
ஆகையால் நான் என் வாயை அடக்காமல், என் ஆவியின் வேதனையினால் பேசி, என் ஆத்துமத்தின் கசப்பினால் அங்கலாய்ப்பேன்.
Therefore I will not refrain my mouth; I will speak in the anguish of my spirit; I will complain in the bitterness of my soul.
- 12
தேவரீர் என்மேல் காவல் வைக்கிறதற்கு நான் சமுத்திரமோ? நான் ஒரு திமிங்கிலமோ?
[Am] I a sea, or a whale, that thou settest a watch over me?
- 13
என் கட்டில் எனக்கு ஆறுதல் கொடுக்கும் என்றும், என் படுக்கை என் தவிப்பை ஆற்றும் என்றும் நான் சொல்வேனாகில்,
When I say, My bed shall comfort me, my couch shall ease my complaint;
- 14
நீர் சொப்பனங்களால் என்னைக் கலங்கப்பண்ணி, தரிசனங்களால் எனக்குத் திகிலுண்டாக்குகிறீர்.
Then thou scarest me with dreams, and terrifiest me through visions:
- 15
அதினால் என் ஆத்துமா, நெருக்குண்டு சாகிறதையும், என் எலும்புகளோடே உயிரோடிருக்கிறதைப்பார்க்கிலும், மரணத்தையும் விரும்புகிறது.
So that my soul chooseth strangling, [and] death rather than my life.
- 16
இப்படியிருக்கிறதை ஆரோசிக்கிறேன்; எந்நாளும் உயிரோடிருக்கவிரும்பேன், என்னை விட்டுவிடும்; என் நாட்கள் மாயைதானே.
I loathe [it;] I would not live alway: let me alone; for my days [are] vanity.
- 17
மனுஷனை நீர் ஒரு பொருட்டாக எண்ணுகிறதற்கும், அவன்மேல் சிந்தை வைக்கிறதற்கும்,
What [is] man, that thou shouldest magnify him? and that thou shouldest set thine heart upon him?
- 18
காலைதோறும் அவனை விசாரிக்கிறதற்கும், நிமிஷந்தோறும் அவனைச் சோதிக்கிறதற்கும், அவன் எம்மாத்திரம்?
And [that] thou shouldest visit him every morning, [and] try him every moment?
- 19
நான் என் உமிழ்நீரை விழுங்காதபடி எத்தனைகாலம் என்னை நெகிழாமலும், என்னை விடாமலும் இருப்பீர்.
How long wilt thou not depart from me, nor let me alone till I swallow down my spittle?
- 20
மன்னுயிரைக் காப்பவரே, பாவஞ் செய்தேனானால் உமக்கு நான் செய்யவேண்டியது என்ன? நான் எனக்குத் தானே பாரமாயிருக்கும்படிக்கு, நீர் என்னை உமக்கு இலக்காக வைத்தது என்ன?
I have sinned; what shall I do unto thee, O thou preserver of men? why hast thou set me as a mark against thee, so that I am a burden to myself?
- 21
என் மீறுதலை நீர் மன்னியாமலும், என் அக்கிரமத்தை நீக்காமலும் இருக்கிறது என்ன? இப்பொழுதே மண்ணில் படுத்துக்கொள்வேன்; விடியற்காலத்திலே என்னைத் தேடுவீரானால் நான் இரேன் என்றான்.
And why dost thou not pardon my transgression, and take away mine iniquity? for now shall I sleep in the dust; and thou shalt seek me in the morning, but I [shall] not [be].