Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 8 in Tamil

Present
  1. 1

    அப்பொழுது சூகியனான பில்தாத் பிரதியுத்தரமாக:

    Then answered Bildad the Shuhite, and said,

  2. 2

    நீர் எந்தமட்டும் இப்படிப்பட்டவைகளைப் பேசுவீர்? எதுவரைக்கும் உம்முடைய வாயின் வார்த்தைகள் பலமான காற்றைப்போலிருக்கும்?

    How long wilt thou speak these [things]? and [how long shall] the words of thy mouth [be like] a strong wind?

  3. 3

    தேவன் நியாயத்தைப் புரட்டுவாரோ? சர்வவல்லவர் நீதியைப் புரட்டுவாரோ?

    Doth God pervert judgment? or doth the Almighty pervert justice?

  4. 4

    உம்முடைய பிள்ளைகள் அவருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்திருந்தாலும் அவர்களுடைய பாதகத்தின் ஆக்கினைக்கு அவர்களை அவர் ஒப்புக்கொடுத்திருந்தாலும்,

    If thy children have sinned against him, and he have cast them away for their transgression;

  5. 5

    நீர் தேவனை ஏற்கனவே தேடி, சர்வவல்லவரை நோக்கி விண்ணப்பஞ் செய்து,

    If thou wouldest seek unto God betimes, and make thy supplication to the Almighty;

  6. 6

    சுத்தமும் செம்மையுமாய் இருந்தீரேயானால், அப்பொழுது அவர் உமக்காக விழித்து நீதியுள்ள உம்முடைய வாசஸ்தலத்தைச் சாங்கோபாங்கமாக்குவார்.

    If thou [wert] pure and upright; surely now he would awake for thee, and make the habitation of thy righteousness prosperous.

  7. 7

    உம்முடைய துவக்கம் அற்பமாயிருந்தாலும், உம்முடைய முடிவு சம்பூரணமாயிருக்கும்.

    Though thy beginning was small, yet thy latter end should greatly increase.

  8. 8

    ஆகையால், நீர் முந்தின தலைமுறையாரிடத்தில் விசாரித்து, அவர்கள் முன்னோர்களின் செய்தியை ஆராய்ந்துபாரும்.

    For enquire, I pray thee, of the former age, and prepare thyself to the search of their fathers:

  9. 9

    நாம் நேற்று உண்டானவர்கள், ஒன்றும் அறியோம்; பூமியின்மேல் நம்முடைய நாட்கள் நிழலைப்போலிருக்கிறது.

    (For we [are but of] yesterday, and know nothing, because our days upon earth [are] a shadow:)

  10. 10

    அவர்கள் உமக்கு உபதேசித்து, உமக்குத் தெரிவித்து, தங்கள் இருதயத்திலிருக்கும் நியாயங்களை வெளிப்படுத்துவார்கள் அல்லவோ?

    Shall not they teach thee, [and] tell thee, and utter words out of their heart?

  11. 11

    சேறில்லாமல் நாணல் ஓங்கி வளருமோ? தண்ணீரில்லாமல் கோரைப்புல் முளைக்குமோ?

    Can the rush grow up without mire? can the flag grow without water?

  12. 12

    அது இன்னும் பச்சையாயிருக்கும்போதே, அறுக்கப்படாதிருந்தும் மற்ற எந்தப் புல்லைப்பார்க்கிலும் சீக்கிரமாய் வாடிப்போம் அல்லவோ?

    Whilst it [is] yet in his greenness, [and] not cut down, it withereth before any [other] herb.

  13. 13

    தேவனை மறக்கிற எல்லாருடைய வழிகளும் அப்படியே இருக்கும்; மாயக்காரரின் நம்பிக்கை அழிந்து போம்.

    So [are] the paths of all that forget God; and the hypocrite’s hope shall perish:

  14. 14

    அவனுடைய வீண் எண்ணம் அற்றுப்போய், அவனுடைய நம்பிக்கை சிலந்திப்பூச்சி வீடுபோலிருக்கும்.

    Whose hope shall be cut off, and whose trust [shall be] a spider’s web.

  15. 15

    ஓருவன் அதின் வீட்டின்மேல் சாய்ந்தால், அது நிலைக்கமாட்டாது, அதைப் பிடித்தால், அது நிற்காது.

    He shall lean upon his house, but it shall not stand: he shall hold it fast, but it shall not endure.

  16. 16

    வெயில் எரிக்காததற்கு முன்னே அவன் பச்சைச்செடி, அதின் கொடிகள் அவன் தோட்டத்தின்மேலே படரும்;

    He [is] green before the sun, and his branch shooteth forth in his garden.

  17. 17

    அதின் வேர்கள் கற்குவியலில் சிக்கி, கற்பாறையை நாடும்.

    His roots are wrapped about the heap, [and] seeth the place of stones.

  18. 18

    அது அதினிடத்தில் இராதபடிக்கு நிர்மூலமானபின், அது இருந்த இடம் உன்னை நான் கண்டதில்லை யென்று மறுதலிக்கும்.

    If he destroy him from his place, then [it] shall deny him, [saying], I have not seen thee.

  19. 19

    இதோ, அவன் வழியின் மகிழ்ச்சி இப்படியே போகிறது; ஆனாலும் வேறே பேர் மண்ணிலிருந்து முளைப்பார்கள்.

    Behold, this [is] the joy of his way, and out of the earth shall others grow.

  20. 20

    இதோ, தேவன் உத்தமனை வெறுக்கிறதுமில்லை, பொல்லாதவர்களுக்குக் கைகொடுக்கிறதுமில்லை.

    Behold, God will not cast away a perfect [man], neither will he help the evil doers:

  21. 21

    இனி அவர் உம்முடைய வாயைநகைப்பினாலும், உம்முடைய உதடுகளைக் கெம்பீரத்தினாலும் நிரப்புவார்.

    Till he fill thy mouth with laughing, and thy lips with rejoicing.

  22. 22

    உம்மைப் பகைக்கிறவர்கள் வெட்கத்தால் மூடப்படுவார்கள்; துன்மார்க்கருடைய கூடாரம் அழிந்துபோகும் என்றான்.

    They that hate thee shall be clothed with shame; and the dwelling place of the wicked shall come to nought.

All chapters of Job · Tamil Bible

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

King James Version: public domain.