Job 6 in Tamil
யோபு 6
- 1
யோபு பிரதியுத்திரமாக:
But Job answered and said,
- 2
என் சஞ்சலம் நிறுக்கப்பட்டு, என் நிர்ப்பந்தம் எல்லாம் தராசிலே வைக்கப்பட்டால் நலமாயிருக்கும்.
Oh that my grief were throughly weighed, and my calamity laid in the balances together!
- 3
அப்பொழுது அது கடற்கரை மணலைப்பார்க்கிலும் பாரமாயிருக்கும்; ஆகையால் என் துக்கம் சொல்லிமுடியாது.
For now it would be heavier than the sand of the sea: therefore my words are swallowed up.
- 4
சர்வவல்லவரின் அம்புகள் எனக்குள் தைத்திருக்கிறது; அவைகளின் விஷம் என் உயிரைக் குடிக்கிறது; தேவனால் உண்டாகும் பயங்கரங்கள் எனக்கு முன்பாக அணியணியாய் நிற்கிறது.
For the arrows of the Almighty [are] within me, the poison whereof drinketh up my spirit: the terrors of God do set themselves in array against me.
- 5
புல்லிருக்கிற இடத்திலே காட்டுக்கழுதை கத்துமோ? தனக்குத் தீவனமிருக்கிற இடத்திலே எருது கதறுமோ?
Doth the wild ass bray when he hath grass? or loweth the ox over his fodder?
- 6
ருசியில்லாத பதார்த்தத்தை உப்பில்லாமல் சாப்பிடக்கூடுமோ? முட்டையின் வெள்ளைக்கருவில் சுவை உண்டோ?
Can that which is unsavoury be eaten without salt? or is there [any] taste in the white of an egg?
- 7
உங்கள் வார்த்தைகளை என் ஆத்துமா தொடமாட்டேன் என்கிறது; அவைகள் அரோசிகமான போஜனம் போல் இருக்கிறது.
The things [that] my soul refused to touch [are] as my sorrowful meat.
- 8
ஆ, என் மன்றாட்டு எனக்கு அருளப்பட்டு, நான் வாஞ்சிப்பதைத் தேவன் எனக்குத் தந்து,
Oh that I might have my request; and that God would grant [me] the thing that I long for!
- 9
தேவன் என்னை நொறுக்கச் சித்தமாய், தம்முடைய கையை நீட்டி என்னைத் துண்டித்துப்போட்டால் நலமாயிருக்கும்.
Even that it would please God to destroy me; that he would let loose his hand, and cut me off!
- 10
அப்பொழுதாவது எனக்கு ஆறுதல் இருக்குமே; அப்பொழுது என்னைத் தப்பவிடாத நோவிலே மரத்திருப்பேன்; பரிசுத்தருடைய வார்த்தைகளை நான் மறைத்துவைக்கவில்லை, அவர் என்னைத் தப்பவிடாராக.
Then should I yet have comfort; yea, I would harden myself in sorrow: let him not spare; for I have not concealed the words of the Holy One.
- 11
நான் காத்துக்கொண்டிருக்க என் பெலன் எம்மாத்திரம்? என் ஜீவனை நீடித்திருக்கப்பண்ண என் முடிவு எப்படிப்பட்டது?
What [is] my strength, that I should hope? and what [is] mine end, that I should prolong my life?
- 12
என் பெலன் கற்களின் பெலனோ? என் மாம்சம் வெண்கலமோ?
[Is] my strength the strength of stones? or [is] my flesh of brass?
- 13
எனக்கு உதவியானது ஒன்றும் இல்லையல்லவோ? சகாயம் என்னை விட்டுநீங்கிற்றே.
[Is] not my help in me? and is wisdom driven quite from me?
- 14
உபாதிக்கப்படுகிறவனுக்கு அவனுடைய சிநேகிதனால் தயைகிடைக்கவேண்டும்; அவனோ சர்வவல்லவருக்குப்பயப்படாதே போகிறான்.
To him that is afflicted pity [should be shewed] from his friend; but he forsaketh the fear of the Almighty.
- 15
என் சகோதரர் காட்டாறுபோலமோசம்பண்ணுகிறார்கள்; ஆறுகளின் வெள்ளத்தைப்போலக் கடந்துபோகிறார்கள்.
My brethren have dealt deceitfully as a brook, [and] as the stream of brooks they pass away;
- 16
அவைகள் குளிர்காலப் பனிக்கட்டியினாலும், அதில் விழுந்திருக்கிற உறைந்த மழையினாலும் கலங்கலாகி,
Which are blackish by reason of the ice, [and] wherein the snow is hid:
- 17
உஷ்ணங்கண்டவுடனே உருகி வற்றி, அனல்பட்டவுடனே தங்கள் ஸ்தலத்தில் உருவழிந்துபோகின்றன.
What time they wax warm, they vanish: when it is hot, they are consumed out of their place.
- 18
அவைகளுடைய வழிகளின் போக்குகள் இங்குமங்கும் பிரியும்; அவைகள் விருதாவிலே பரவி ஒன்றும் இல்லாமற்போகும்.
The paths of their way are turned aside; they go to nothing, and perish.
- 19
தேமாவின் பயணக்காரர் தேடி, சேபாவின் பயணக்கூட்டங்கள் அவைகள்மேல் நம்பிக்கை வைத்து,
The troops of Tema looked, the companies of Sheba waited for them.
- 20
தாங்கள் இப்படி நம்பினதினாலே வெட்கப்படுகிறார்கள்; அவ்விடமட்டும்வந்து கலங்கிப்போகிறார்கள்.
They were confounded because they had hoped; they came thither, and were ashamed.
- 21
அப்படியே நீங்களும் இப்பொழுது ஒன்றுக்கும் உதவாமற்போனீர்கள்; என் ஆபத்தைக் கண்டு பயப்படுகிறீர்கள்.
For now ye are nothing; ye see [my] casting down, and are afraid.
- 22
எனக்கு ஏதாகிலும் கொண்டுவாருங்கள் என்றும், உங்கள் ஆஸ்தியிலிருந்து எனக்கு யாதொரு வெகுமானம் கொடுங்கள் என்றும்;
Did I say, Bring unto me? or, Give a reward for me of your substance?
- 23
அல்லது சத்துருவின் கைக்கு என்னைத் தப்புவியுங்கள், வல்லடிக்காரரின் கைக்கு என்னை நீங்கலாக்கி மீட்டு விடுங்கள் என்றும் நான் சொன்னதுண்டோ?
Or, Deliver me from the enemy’s hand? or, Redeem me from the hand of the mighty?
- 24
எனக்கு உபதேசம்பண்ணுங்கள், நான் மவுனமாயிருப்பேன்; நான் எதிலே தவறினேனோ அதை எனக்குத் தெரியப்படுத்துங்கள்.
Teach me, and I will hold my tongue: and cause me to understand wherein I have erred.
- 25
செம்மையான வார்த்தைகளில் எவ்வளவு வல்லமை உண்டு? உங்கள் கடிந்துகொள்ளுதலினால் காரியம் என்ன?
How forcible are right words! but what doth your arguing reprove?
- 26
கடிந்து கொள்ள நீங்கள் வார்த்தைகளை யோசித்து, நம்பிக்கையற்றவனுடைய வார்த்தைகளைக் காற்றிலே விட்டுவிடுகிறீர்களோ?
Do ye imagine to reprove words, and the speeches of one that is desperate, [which are] as wind?
- 27
இப்படிச் செய்து திக்கற்றவன்மேல் நீங்கள் விழுந்து, உங்கள் சிநேகிதனுக்குப் படுகுழியை வெட்டுகிறீர்கள்.
Yea, ye overwhelm the fatherless, and ye dig [a pit] for your friend.
- 28
இப்போதும் உங்களுக்குச் சித்தமானால் என்னை நோக்கிப் பாருங்கள்; அப்பொழுது நான் பொய்சொல்லுகிறேனோ என்று உங்களுக்குப் பிரத்தியட்சமாய் விளங்கும்.
Now therefore be content, look upon me; for [it is] evident unto you if I lie.
- 29
நீங்கள் திரும்புங்கள், அக்கிரமம் காணப்படாதிருக்கும்; திரும்புங்கள் என் நீதி அதிலே விளங்கும்.
Return, I pray you, let it not be iniquity; yea, return again, my righteousness [is] in it.
- 30
என் நாவிலே அக்கிரமம் உண்டோ? என் வாய் ஆகாதவைகளைப் பகுத்தறியாதோ?
Is there iniquity in my tongue? cannot my taste discern perverse things?