Psalm 132 in Tamil
சங்கீதம் 132
- 1
கர்த்தாவே, தாவீதையும் அவனுடைய சகல உபத்திரவத்தையும் நினைத்தருளும்.
A Song of degrees. LORD, remember David, [and] all his afflictions:
- 2
அவன்: நான் கர்த்தருக்கு ஒரு இடத்தையும், யாக்கோபின் வல்லவருக்கு ஒரு வாசஸ்தலத்தையும் காணுமட்டும்,
How he sware unto the LORD, [and] vowed unto the mighty [God] of Jacob;
- 3
என் வீடாகிய கூடாரத்தில் பிரவேசிப்பதுமில்லை, என் படுக்கையாகிய கட்டிலின்மேல் ஏறுவதுமில்லை;
Surely I will not come into the tabernacle of my house, nor go up into my bed;
- 4
என் கண்களுக்கு நித்திரையையும், என் இமைகளுக்கு உறக்கத்தையும் வரவிடுவதுமில்லை என்று,
I will not give sleep to mine eyes, [or] slumber to mine eyelids,
- 5
கர்த்தருக்கு ஆணையிட்டு, யாக்கோபின் வல்லவருக்குப் பொருத்தனை பண்ணினான்.
Until I find out a place for the LORD, an habitation for the mighty [God] of Jacob.
- 6
இதோ, நாம் எப்பிராத்தாவிலே அதின் செய்தியைக் கேட்டு, வனத்தின் வெளிகளில் அதைக் கண்டோம்.
Lo, we heard of it at Ephratah: we found it in the fields of the wood.
- 7
அவருடைய வாசஸ்தலங்களுக்குள் பிரவேசித்து, அவர் பாதபடியில்பணிவோம்.
We will go into his tabernacles: we will worship at his footstool.
- 8
கர்த்தாவே, உமது வல்லமை விளங்கும் பெட்டியுடன் நீர் உமதுதாபர ஸ்தலத்திற்குள் எழுந்தருளும்.
Arise, O LORD, into thy rest; thou, and the ark of thy strength.
- 9
உம்முடைய ஆசாரியர்கள் நீதியைத் தரித்து, உம்முடைய பரிசுத்தவான்கள் கெம்பீரிப்பார்களாக.
Let thy priests be clothed with righteousness; and let thy saints shout for joy.
- 10
நீர் அபிஷேகம்பண்ணுவித்தவனின் முகத்தை உமது தாசனாகிய தாவீதினிமித்தம் புறக்கணியாதிரும்.
For thy servant David’s sake turn not away the face of thine anointed.
- 11
உன் கர்ப்பத்தின் கனியை உன் சிங்காசனத்தின்மேல் வைப்பேன்என்றும்,
The LORD hath sworn [in] truth unto David; he will not turn from it; Of the fruit of thy body will I set upon thy throne.
- 12
உன் குமாரர் என் உடன்படிக்கையையும், நான் போதிக்கும் என் சாட்சிகளையும் காத்து நடந்தால், அவர்கள் குமாரரும் என்றென்றைக்கும் உன் சிங்காசனத்தில் வீற்றிருப்பார் கள்என்றும், கர்த்தர் தாவீதுக்கு உண்மையாய் ஆணையிட்டார்; அவர் தவறமாட்டார்.
If thy children will keep my covenant and my testimony that I shall teach them, their children shall also sit upon thy throne for evermore.
- 13
கர்த்தர் சீயோனைத் தெரிந்துகொண்டு, அது தமக்கு வாசஸ்தலமாகும்படி விரும்பினார்.
For the LORD hath chosen Zion; he hath desired [it] for his habitation.
- 14
இது என்றென்றைக்கும் நான் தங்கும் இடம்; இதை நான் விரும்பினபடியால், இங்கே வாசம்பண்ணுவேன்.
This [is] my rest for ever: here will I dwell; for I have desired it.
- 15
அதின் ஆகாரத்தை நான் ஆசீர்வதித்து வருவேன்; அதின் ஏழைகளை நான் அப்பத்தினால் திருப்தியாக்குவேன்.
I will abundantly bless her provision: I will satisfy her poor with bread.
- 16
அதின் ஆசாரியர்களுக்கு இரட்சிப்பை உடுத்துவேன்; அதிலுள்ள பரிசுத்தவான்கள் மிகவும் கெம்பீரிப்பார்கள்.
I will also clothe her priests with salvation: and her saints shall shout aloud for joy.
- 17
அங்கே தாவீதுக்காக ஒரு கொம்பை முளைக்கப்பண்ணுவேன்; நான் அபிஷேகம்பண்ணுவித்தவனுக்காக ஒரு விளக்கை ஆயத்தம்பண்ணினேன்.
There will I make the horn of David to bud: I have ordained a lamp for mine anointed.
- 18
அவன் சத்துருக்களுக்கு வெட்கத்தை உடுத்துவேன்; அவன்மீதிலோ அவன் கிரீடம் பூக்கும் என்றார். (தாவீது பாடின ஆரோகண சங்கீதம்.)
His enemies will I clothe with shame: but upon himself shall his crown flourish.