Psalm 145 in Tamil
சங்கீதம் 145
- 1
ராஜாவாகியஎன் தேவனே, உம்மை உயர்த்தி, உம்முடைய நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிப்பேன்.
David’s [Psalm] of praise. I will extol thee, my God, O king; and I will bless thy name for ever and ever.
- 2
நாடோறும் உம்மை ஸ்தோத்திரித்து, எப்பொழுதும் என்றென்றைக்கும் உம்முடைய நாமத்தைத் துதிப்பேன்.
Every day will I bless thee; and I will praise thy name for ever and ever.
- 3
கர்த்தர்பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாயிருக்கிறார்; அவருடைய மகத்துவம் ஆராய்ந்து முடியாது.
Great [is] the LORD, and greatly to be praised; and his greatness [is] unsearchable.
- 4
தலைமுறை தலைமுறையாக உம்முடைய கிரியைகளின் புகழ்ச்சியைச் சொல்லி, உம்முடைய வல்லமையுள்ள செய்கைகளை அறிவிப்பார்கள்.
One generation shall praise thy works to another, and shall declare thy mighty acts.
- 5
உம்முடைய சிறந்த மகிமைப்பிரதாபத்தையும், உம்முடைய அதிசயமான கிரியைகளையுங்குறித்துப் பேசுவேன்.
I will speak of the glorious honour of thy majesty, and of thy wondrous works.
- 6
ஜனங்கள் உம்முடைய பயங்கரமான கிரியைகளின் வல்லமையைச் சொல்லுவார்கள்; உம்முடைய மகத்துவத்தை நான் விவரிப்பேன்.
And [men] shall speak of the might of thy terrible acts: and I will declare thy greatness.
- 7
அவர்கள் உமது மிகுந்த தயவை நினைத்து வெளிப்படுத்தி, உமது நீதியைக் கெம்பீரித்துப் பாடுவார்கள்.
They shall abundantly utter the memory of thy great goodness, and shall sing of thy righteousness.
- 8
கர்த்தர் இரக்கமும் மன உருக்கமும், நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர்.
The LORD [is] gracious, and full of compassion; slow to anger, and of great mercy.
- 9
கர்த்தர் எல்லார்மேலும் தயவுள்ளவர்; அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாக் கிரியைகளின்மேலுமுள்ளது.
The LORD [is] good to all: and his tender mercies [are] over all his works.
- 10
கர்த்தாவே, உம்முடைய கிரியைகளெல்லாம் உம்மைத் துதிக்கும்; உம்முடைய பரிசுத்தவான்கள் உம்மைஸ்தோத்திரிப்பார்கள்.
All thy works shall praise thee, O LORD; and thy saints shall bless thee.
- 11
மனுபுத்திரருக்கு உமது வல்லமையுள்ள செய்கைகளையும், உமது ராஜ்யத்தின் சிறந்த மகிமைப்பிரதாபத்தையும் தெரிவிக்கும்படிக்கு;
They shall speak of the glory of thy kingdom, and talk of thy power;
- 12
உமது ராஜ்யத்தின் மகிமையை அறிவித்து, உமது வல்லமையைக் குறித்துப் பேசுவார்கள்.
To make known to the sons of men his mighty acts, and the glorious majesty of his kingdom.
- 13
உம்முடைய ராஜ்யம் சதாகாலங்களிலுமுள்ள ராஜ்யம், உம்முடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாகவும் உள்ளது.
Thy kingdom [is] an everlasting kingdom, and thy dominion [endureth] throughout all generations.
- 14
கர்த்தர் விழுகிற யாவரையும் தாங்கி, மடங்கடிக்கப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகிறார்.
The LORD upholdeth all that fall, and raiseth up all [those that be] bowed down.
- 15
எல்லா ஜீவன்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது; ஏற்ற வேளையிலே நீர் அவைகளுக்கு ஆகாரங்கொடுக்கிறீர்.
The eyes of all wait upon thee; and thou givest them their meat in due season.
- 16
நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின்வாஞ்சையையும்திருப்தியாக்குகிறீர்.
Thou openest thine hand, and satisfiest the desire of every living thing.
- 17
கர்த்தர்தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும், தமது கிரியைகளிலெல்லாம் கிருபையுள்ளவருமாயிருக்கிறார்.
The LORD [is] righteous in all his ways, and holy in all his works.
- 18
தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.
The LORD [is] nigh unto all them that call upon him, to all that call upon him in truth.
- 19
அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார்.
He will fulfil the desire of them that fear him: he also will hear their cry, and will save them.
- 20
கர்த்தர் தம்மில் அன்புகூருகிற யாவரையும் காப்பாற்றி, துன்மார்க்கர் யாவரையும் அழிப்பார்.
The LORD preserveth all them that love him: but all the wicked will he destroy.
- 21
என் வாய் கர்த்தரின் துதியைச் சொல்வதாக; மாம்சதேகமுள்ள யாவும். அவருடைய பரிசுத்த நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கக்கடவது.
My mouth shall speak the praise of the LORD: and let all flesh bless his holy name for ever and ever.