Psalm 88 in Tamil
சங்கீதம் 88
- 1
என் இரட்சிப்பின் தேவனாகிய கர்த்தாவே, இரவும் பகலும் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.
A Song [or] Psalm for the sons of Korah, to the chief Musician upon Mahalath Leannoth, Maschil of Heman the Ezrahite. O LORD God of my salvation, I have cried day [and] night before thee:
- 2
என் விண்ணப்பம் உமது சமுகத்தில் வருவதாக; என் கூப்பிடுதலுக்கு உமது செவியைச் சாய்த்தருளும்.
Let my prayer come before thee: incline thine ear unto my cry;
- 3
என் ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது; என் ஜீவன் பாதாளத்திற்குச் சமீபமாய் வந்திருக்கிறது.
For my soul is full of troubles: and my life draweth nigh unto the grave.
- 4
நான் குழியில் இறங்குகிறவர்களோடு எண்ணப்பட்டு, பெலனற்றமனுஷனைப்போலானேன்.
I am counted with them that go down into the pit: I am as a man [that hath] no strength:
- 5
மரித்தவர்களில் ஒருவனைப்போல் நெகிழப்பட்டிருக்கிறேன்; நீர் இனி ஒருபோதும் நினையாதபடி, உமது கையால் அறுப்புண்டுபோய்ப் பிரேதக் குழிகளிலே கிடக்கிறவர்களைப்போலானேன்.
Free among the dead, like the slain that lie in the grave, whom thou rememberest no more: and they are cut off from thy hand.
- 6
என்னைப் பாதாளக்குழியிலும் இருளிலும் ஆழங்களிலும் வைத்தீர்.
Thou hast laid me in the lowest pit, in darkness, in the deeps.
- 7
உம்முடைய கோபம் என்னை இருத்துகிறது; உம்முடைய அலைகள் எல்லாவற்றினாலும் என்னை வருத்தப்படுத்துகிறீர். (சேலா.)
Thy wrath lieth hard upon me, and thou hast afflicted [me] with all thy waves. Selah.
- 8
எனக்கு அறிமுகமானவர்களை எனக்குத் தூரமாக விலக்கி, அவர்களுக்கு என்னை அருவருப்பாக்கினீர்; நான் வெளியே புறப்படக்கூடாதபடி அடைபட்டிருக்கிறேன்.
Thou hast put away mine acquaintance far from me; thou hast made me an abomination unto them: [I am] shut up, and I cannot come forth.
- 9
துக்கத்தினால் என் கண் தொய்ந்துபோயிற்று; கர்த்தாவே, அநுதினமும் நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டு, உமக்கு நேராக என் கைகளை விரிக்கிறேன்.
Mine eye mourneth by reason of affliction: LORD, I have called daily upon thee, I have stretched out my hands unto thee.
- 10
மரித்தவர்களுக்கு அதிசயங்களைச் செய்வீரோ? செத்துபோனவீரர் எழுந்து உம்மைத் துதிப்பார்களோ? (சேலா.)
Wilt thou shew wonders to the dead? shall the dead arise [and] praise thee? Selah.
- 11
பிரேதக்குழியில் உமது கிருபையும், அழிவில் உமது உண்மையும் விவரிக்கப்படுமோ?
Shall thy lovingkindness be declared in the grave? [or] thy faithfulness in destruction?
- 12
இருளில் உமது அதிசயங்களும், மறதியின் பூமியில் உமது நீதியும் அறியப்படுமோ?
Shall thy wonders be known in the dark? and thy righteousness in the land of forgetfulness?
- 13
நானோ கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; காலையிலே என் விண்ணப்பம் உமக்குமுன்பாக வரும்.
But unto thee have I cried, O LORD; and in the morning shall my prayer prevent thee.
- 14
கர்த்தாவே, ஏன் என் ஆத்துமாவைத் தள்ளிவிடுகிறீர்? ஏன் உமது முகத்தை எனக்கு மறைக்கிறீர்?
LORD, why castest thou off my soul? [why] hidest thou thy face from me?
- 15
சிறுவயதுமுதல் நான் சிறுமைப்பட்டவனும் மாண்டுபோகிறவனுமாயிருக்கிறேன்; உம்மால் வரும் திகில்கள் என்மேல் சுமந்திருக்கிறது, நான் மனங்கலங்குகிறேன்.
I [am] afflicted and ready to die from [my] youth up: [while] I suffer thy terrors I am distracted.
- 16
உம்முடைய எரிச்சல்கள் என்மேல் புரண்டுபோகிறது; உம்முடையபயங்கரங்கள் என்னை அதம்பண்ணுகிறது.
Thy fierce wrath goeth over me; thy terrors have cut me off.
- 17
அவைகள் நாடோறும் தண்ணீரைப்போல் என்னைச் சூழ்ந்து, ஏகமாய் என்னை வளைந்துகொள்ளுகிறது.
They came round about me daily like water; they compassed me about together.
- 18
சிநேகிதனையும்தோழனையும் எனக்குத் தூரமாக விலக்கினீர்; எனக்கு அறிமுகமானவர்கள் மறைந்து போனார்கள். (எஸ்றாகியனாகிய ஏத்தானின் மஸ்கீல் என்னும் போதக சங்கீதம்.)
Lover and friend hast thou put far from me, [and] mine acquaintance into darkness.