Psalm 89 in Tamil
சங்கீதம் 89
- 1
கர்த்தரின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன்; உமது உண்மையைத் தலைமுறை தலைமுறையாக என் வாயினால் அறிவிப்பேன்.
Maschil of Ethan the Ezrahite. I will sing of the mercies of the LORD for ever: with my mouth will I make known thy faithfulness to all generations.
- 2
கிருபைஎன்றென்றைக்கும்ஸ்திரப்பட்டிருக்கும்; உமது உண்மையை வானங்களிலே ஸ்தாபிப்பீர் என்றேன்.
For I have said, Mercy shall be built up for ever: thy faithfulness shalt thou establish in the very heavens.
- 3
என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவனோடே உடன்படிக்கைபண்ணி, என் தாசனாகிய தாவீதை நோக்கி:
I have made a covenant with my chosen, I have sworn unto David my servant,
- 4
என்றென்றைக்கும் உன் சந்ததியை நிலைப்படுத்தி, தலைமுறை தலைமுறையாக உன் சிங்காசனத்தை ஸ்தாபிப்பேன் என்று ஆணையிட்டேன் என்றீர். (சேலா.)
Thy seed will I establish for ever, and build up thy throne to all generations. Selah.
- 5
கர்த்தாவே, வானங்கள் உம்முடைய அதிசயங்களைத் துதிக்கும், பரிசுத்தவான்களின் சபையிலே உம்முடைய உண்மையும் விளங்கும்.
And the heavens shall praise thy wonders, O LORD: thy faithfulness also in the congregation of the saints.
- 6
ஆகாயமண்டலத்தில் கர்த்தருக்கு நிகரானவர் யார்? பலவான்களின் புத்திரரில் கர்த்தருக்கு ஒப்பானவர் யார்?
For who in the heaven can be compared unto the LORD? [who] among the sons of the mighty can be likened unto the LORD?
- 7
தேவன்பரிசுத்தவான்களுடைய ஆலோசனைச் சபையில் மிகவும் பயப்படத்தக்கவர், தம்மைச் சூழ்ந்திருக்கிற அனைவராலும் அஞ்சப்படத்தக்கவர்.
God is greatly to be feared in the assembly of the saints, and to be had in reverence of all [them that are] about him.
- 8
சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்மைப்போல் வல்லமையுள்ள கர்த்தர் யார்? உம்முடைய உண்மை உம்மைச் சூழ்ந்திருக்கிறது.
O LORD God of hosts, who [is] a strong LORD like unto thee? or to thy faithfulness round about thee?
- 9
தேவரீர் சமுத்திரத்தின் பெருமையை ஆளுகிறவர்; அதின் அலைகள் எழும்பும்போது அவைகளை அடங்கப்பண்ணுகிறீர்.
Thou rulest the raging of the sea: when the waves thereof arise, thou stillest them.
- 10
நீர் ராகாபை வெட்டுண்ட ஒருவனைப்போல் நொறுக்கினீர்; உமது வல்லமையான புயத்தினால் உம்முடைய சத்துருக்களைச் சிதறடித்தீர்.
Thou hast broken Rahab in pieces, as one that is slain; thou hast scattered thine enemies with thy strong arm.
- 11
வானங்கள் உம்முடையது, பூமியும் உம்முடையது, பூலோகத்தையும் அதிலுள்ள யாவையும் நீரே அஸ்திபாரப்படுத்தினீர்.
The heavens [are] thine, the earth also [is] thine: [as for] the world and the fulness thereof, thou hast founded them.
- 12
வடக்கையும் தெற்கையும் நீர் உண்டாக்கினீர்; தாபோரும் எர்மோனும் உம்முடைய நாமம் விளங்கக் கெம்பீரிக்கும்.
The north and the south thou hast created them: Tabor and Hermon shall rejoice in thy name.
- 13
உமக்கு வல்லமையுள்ள புயமிருக்கிறது; உம்முடைய கரம் பராக்கிரமமுள்ளது; உம்முடைய வலதுகரம் உன்னதமானது.
Thou hast a mighty arm: strong is thy hand, [and] high is thy right hand.
- 14
நீதியும் நியாயமும் உம்முடைய சிங்காசனத்தின் ஆதாரம்; கிருபையும் சத்தியமும் உமக்கு முன்பாக நடக்கும்.
Justice and judgment [are] the habitation of thy throne: mercy and truth shall go before thy face.
- 15
கெம்பீரசத்தத்தைஅறியும்ஜனங்கள் பாக்கியமுள்ளவர்கள்; கர்த்தாவே, அவர்கள் உம்முடைய முகத்தின் வெளிச்சத்தில் நடப்பார்கள்.
Blessed [is] the people that know the joyful sound: they shall walk, O LORD, in the light of thy countenance.
- 16
அவர்கள் உம்முடைய நாமத்தில் நாடோறும் களிகூர்ந்து, உம்முடைய நீதியால் உயர்ந்திருப்பார்கள்.
In thy name shall they rejoice all the day: and in thy righteousness shall they be exalted.
- 17
நீரே அவர்கள் பலத்தின் மகிமையாயிருக்கிறீர்; உம்முடைய தயவினால் எங்கள் கொம்பு உயரும்.
For thou [art] the glory of their strength: and in thy favour our horn shall be exalted.
- 18
கர்த்தரால் எங்கள் கேடகமும், இஸ்ரவேலின் பரிசுத்தரால் எங்களுடைய ராஜாவும் உண்டு.
For the LORD [is] our defence; and the Holy One of Israel [is] our king.
- 19
அப்பொழுது நீர் உம்முடைய பக்தனுக்குத் தரிசனமாகி: சகாயஞ்செய்யத்தக்க சக்தியை ஒரு சவுரியவான் மேல் வைத்து, ஜனத்தில் தெரிந்துகொள்ளப்பட்டவனை உயர்த்தினேன்.
Then thou spakest in vision to thy holy one, and saidst, I have laid help upon [one that is] mighty; I have exalted [one] chosen out of the people.
- 20
என் தாசனாகிய தாவீதைக்கண்டுபிடித்தேன்; என் பரிசுத்த தைலத்தினால் அவனை அபிஷேகம்பண்ணினேன்.
I have found David my servant; with my holy oil have I anointed him:
- 21
என் கை அவனோடே உறுதியாயிருக்கும்; என் புயம் அவனைப் பலப்படுத்தும்.
With whom my hand shall be established: mine arm also shall strengthen him.
- 22
சத்துரு அவனை நெருக்குவதில்லை; நியாயக்கேட்டின் மகன் அவனை ஒடுக்குவதில்லை.
The enemy shall not exact upon him; nor the son of wickedness afflict him.
- 23
அவன் சத்துருக்களை அவனுக்கு முன்பாக மடங்கடித்து, அவனைப் பகைக்கிறவர்களை வெட்டுவேன்.
And I will beat down his foes before his face, and plague them that hate him.
- 24
என் உண்மையும் என் கிருபையும் அவனோடிருக்கும்; என் நாமத்தினால் அவன் கொம்பு உயரும்.
But my faithfulness and my mercy [shall be] with him: and in my name shall his horn be exalted.
- 25
அவன் கையைச் சமுத்திரத்தின் மேலும், அவன் வலதுகரத்தை ஆறுகள் மேலும் ஆளும்படி வைப்பேன்.
I will set his hand also in the sea, and his right hand in the rivers.
- 26
அவன் என்னை நோக்கி: நீர் என் பிதா, என் தேவன், என் இரட்சிப்பின் கன்மலையென்று சொல்லுவான்.
He shall cry unto me, Thou [art] my father, my God, and the rock of my salvation.
- 27
நான் அவனை எனக்கு முதற் பேறானவனும், பூமியின் ராஜாக்களைப் பார்க்கிலும் மகா உயர்ந்தவனுமாக்குவேன்.
Also I will make him [my] firstborn, higher than the kings of the earth.
- 28
என் கிருபையை என்றென்றைக்கும் அவனுக்காகக் காப்பேன்; என் உடன்படிக்கை அவனுக்காக உறுதிப்படுத்தப்படும்.
My mercy will I keep for him for evermore, and my covenant shall stand fast with him.
- 29
அவன் சந்ததி என்றென்றைக்கும் நிலைத்திருக்கவும், அவன் ராஜாசனம் வானங்களுள்ளமட்டும் நிலைநிற்கவும் செய்வேன்.
His seed also will I make [to endure] for ever, and his throne as the days of heaven.
- 30
அவன் பிள்ளைகள் என் நியாயங்களின்படி நடவாமல், என் வேதத்தை விட்டு விலகி;
If his children forsake my law, and walk not in my judgments;
- 31
என் கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், என் நியமங்களை மீறிநடந்தால்;
If they break my statutes, and keep not my commandments;
- 32
அவர்கள் மீறுதலை மிலாற்றினாலும், அவர்கள் அக்கிரமத்தை வாதைகளினாலும் தண்டிப்பேன்.
Then will I visit their transgression with the rod, and their iniquity with stripes.
- 33
ஆனாலும் என் கிருபையை அவனை விட்டு விலக்காமலும், என் உண்மையில் பிசகாமலும் இருப்பேன்.
Nevertheless my lovingkindness will I not utterly take from him, nor suffer my faithfulness to fail.
- 34
என் உடன்படிக்கையை மீறாமலும், என் உதடுகள் விளம்பினதைமாற்றாமலும் இருப்பேன்.
My covenant will I not break, nor alter the thing that is gone out of my lips.
- 35
ஒருவிசை என் பரிசுத்தத்தின்பேரில் ஆணையிட்டேன், தாவீதுக்கு நான் பொய்சொல்லேன்.
Once have I sworn by my holiness that I will not lie unto David.
- 36
அவன் சந்ததி என்றென்றைக்கும் இருக்கும்; அவன் சிங்காசனம் சூரியனைப்போல எனக்கு முன்பாக நிலைநிற்கும்.
His seed shall endure for ever, and his throne as the sun before me.
- 37
சந்திரனைப்போல அது என்றென்றைக்கும் உறுதியாயும், ஆகாயமண்டலத்துச் சாட்சியைப்போல் உண்மையாயும் இருக்கும் என்று விளம்பினீர். (சேலா.)
It shall be established for ever as the moon, and [as] a faithful witness in heaven. Selah.
- 38
ஆனாலும் நீர் எங்களை வெறுத்துத் தள்ளிவிட்டீர்; நீர் அபிஷேகம்பண்ணுவித்தவன்மேல் உக்கிரமானீர்.
But thou hast cast off and abhorred, thou hast been wroth with thine anointed.
- 39
உமது அடியானுடன் நீர் பண்ணின உடன்படிக்கையை ஒழித்துவிட்டு, அவன் கிரீடத்தைத் தரையிலே தள்ளி அவமானப்படுத்தினீர்.
Thou hast made void the covenant of thy servant: thou hast profaned his crown [by casting it] to the ground.
- 40
அவன் மதில்களையெல்லாம் தகர்த்துப்போட்டு, அவன் அரணான ஸ்தலங்களைப் பாழாக்கினீர்.
Thou hast broken down all his hedges; thou hast brought his strong holds to ruin.
- 41
வழிநடக்கிற யாவரும் அவனைக் கொள்ளையிடுகிறார்கள்; தன் அயலாருக்கு நிந்தையானான்.
All that pass by the way spoil him: he is a reproach to his neighbours.
- 42
அவன் சத்துருக்களின் வலது கையை நீர் உயர்த்தி, அவன் விரோதிகள் யாவரும் சந்தோஷிக்கும்படி செய்தீர்.
Thou hast set up the right hand of his adversaries; thou hast made all his enemies to rejoice.
- 43
அவன் பட்டயத்தின் கருக்கைமழுக்கிப்போட்டு, அவனை யுத்தத்தில் நிற்காதபடி செய்தீர்.
Thou hast also turned the edge of his sword, and hast not made him to stand in the battle.
- 44
அவன் மகிமையை அற்றுப்போகப்பண்ணி, அவன் சிங்காசனத்தைத் தரையிலே தள்ளினீர்.
Thou hast made his glory to cease, and cast his throne down to the ground.
- 45
அவன் வாலிபநாட்களைக் குறுக்கி, அவனை வெட்கத்தால் மூடினீர். (சேலா.)
The days of his youth hast thou shortened: thou hast covered him with shame. Selah.
- 46
எதுவரைக்கும், கர்த்தாவே! நீர் என்றைக்கும் மறைந்திருப்பீரோ? உமது கோபம் அக்கினியைப்போல எரியுமோ?
How long, LORD? wilt thou hide thyself for ever? shall thy wrath burn like fire?
- 47
என் ஜீவன் எவ்வளவு நிலையற்றது என்பதை நினைத்தருளும்; மனுபுத்திரர் யாவரையும் வீணாகச் சிருஷ்டிக்கவேண்டியதென்ன?
Remember how short my time is: wherefore hast thou made all men in vain?
- 48
மரணத்தைக் காணாமல் உயிரோடிருப்பவன் யார்? தன் ஆத்துமாவைப் பாதாள வல்லடிக்கு விலக்கிவிடுகிறவன் யார்? (சேலா.)
What man [is he that] liveth, and shall not see death? shall he deliver his soul from the hand of the grave? Selah.
- 49
ஆண்டவரே, நீர் தாவீதுக்கு உம்முடைய உண்மையைக்கொண்டு சத்தியம்பண்ணின உமது பூர்வ கிருபைகள் எங்கே?
Lord, where [are] thy former lovingkindnesses, [which] thou swarest unto David in thy truth?
- 50
ஆண்டவரே, உம்முடைய சத்துருக்கள் உம்முடைய ஊழியக்காரரையும், நீர் அபிஷேகம்பண்ணினவனின்காலடிகளையும் நிந்திக்கிறபடியினால்,
Remember, Lord, the reproach of thy servants; [how] I do bear in my bosom [the reproach of] all the mighty people;
- 51
கர்த்தாவே, உமது அடியார் சுமக்கும் நிந்தையையும், வலுமையானஜனங்களெல்லாராலும் நான் என் மடியில் சுமக்கும் என் நிந்தையையும் நினைத்தருளும்.
Wherewith thine enemies have reproached, O LORD; wherewith they have reproached the footsteps of thine anointed.
- 52
கர்த்தருக்கு என்றென்றைக்கும் ஸ்தோத்திரமுண்டாவதாக. ஆமென், ஆமென். (தேவனுடைய மனிதனாகிய மோசேயின் ஜெபம்)
Blessed [be] the LORD for evermore. Amen, and Amen.