Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En Kirubai Unakku Pothum Lyricsஎன் கிருபை உனக்கு போதும்

Artist to be confirmedFaithCross

Also searched as: En Kirupai Unakku Pothum, en kirubai unakku podhum

En Kirubai Unakku Pothum Lyrics in Tamil & English

Chorus

என் கிருபை உனக்கு போதும்

இந்த மண்ணில் வேறு என்ன வேண்டும் – சொல்

ஒருபோதும் உன்னை மறவேன்

உன் நிழலைப் போல உன்னை தொடர்வேன் – நான்

En kirubai unakku pothum

Intha mannil vaeru enna vaendum – sol

Orubothum unnai maravaen

Un nizhalaip pola unnai thodarvaen – naan

Verse 1

அமைதி தோட்டமாக நானும் உலகை உனக்கு கொடுத்தேன்

ஜாதி பூக்கள் வளர்த்தாய் நீயும் யுத்தம் நாளும் தொடுத்தாய்

கண்ணீருக்கும் செந்நீருக்கும் உன்னை நீ அடகு வைத்தாய் (×2)

சிலுவையின் வழி மீட்பு என்றேன் சிந்தையில் நீ ஏற்பதில்லை

விழுதுகள் என்று நான் நினைத்த மனிதர்கள் என்னை சார்ந்ததில்லை

என்ன நடந்தாலும் ஜெபிப்பதில்லை என்னை நீ நினைப்பதில்லை

Amaithi thottamaaga naanum ulagai unakku koduththaen

Jaathi pookkal valarththaay neeyum yuththam naalum thoduththaay

Kanneerukkum senneerukkum unnai nee adagu vaiththaay (×2)

Siluvaiyin vazhi meedpu endraen sinthaiyil nee aerpathillai

Vizhuthugal endru naan ninaiththa manitharkal ennai saarnthathillai

Enna nadanthaalum jebippathillai ennai nee ninaippathillai

Verse 2

ஒளியை ஏற்றி வைத்தேன் நீயும் இருளை தேடிச் சென்றாய்

வழியை திறந்து வைத்தேன் நீயும் விழிகள் மூடிக்கொண்டாய்

என் ராஜ்ஜியம் எங்கே என்று மண்ணில் நீ தேடுகின்றாய் (×2)

தந்தைக்கு நான் கீழ்ப்படிந்தேன் நிந்தைகளை ஏற்றுக்கொண்டேன்

என்றைக்குமே ஆட்சி செய்வேன் நீதியை நிலை நாட்டச் செய்வேன்

போனது போகட்டும் மறந்துவிடு இன்றோடு மாறிவிடு

Oliyai aetri vaiththaen neeyum irulai thaedis sendraay

Vazhiyai thiranthu vaiththaen neeyum vizhigal moodikkondaay

En raajjiyam engae endru mannil nee thaedugindraay (×2)

Thanthaikku naan keezhppadinthaen ninthaigalai aetrukkondaen

Endraikkumae aatchi seyvaen neethiyai nilai naattas seyvaen

Ponathu pogattum maranthuvidu indrodu maarividu

En Kirubai Unakku Pothum PPT – PowerPoint Slides

Download என் கிருபை உனக்கு போதும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E