Karthar Un Veettai Kattaragil Lyrics in Tamil & English
Verse 1
கர்த்தர் உன் வீட்டைக் கட்டாராகில்
அதைக் கட்டும் உந்தன் பாடு விருதா
கர்த்தர் நகரத்தைக் காவல் செய்யாவிடில்
உன் கண் விழிப்பும் விருதா
Karththar un veettaik kattaaraagil
Athaik kattum unthan paadu viruthaa
Karththar nagaraththaik kaaval seyyaavidil
Un kan vizhippum viruthaa
Chorus
ஆதலால் உன் உள்ளமே சதா அவர் சமூகம்
நிதம் நேசரையே துதித்திடட்டும்
கர்த்தருக்குப் பயந்து அவர் வழி நடந்தால்
நீ பாக்கியம் கண்டடைவாய்
Aathalaal un ullamae sathaa avar samoogam
Nitham naesaraiyae thuthiththidattum
Karththarukkup payanthu avar vazhi nadanthaal
Nee paakkiyam kandadaivaay
Verse 2
உன் வழிகளிலெல்லாம்
உன்னைத் தூதர்கள் காத்திடுவார்
உன் பாதம் கல்லில் இடறாதபடி
தங்கள் கரங்களில் ஏந்திடுவார்
Un vazhigalilellaam
Unnaith thootharkal kaaththiduvaar
Un paatham kallil idaraathabadi
Thangal karangalil aenthiduvaar
Verse 3
இரவின் பயங்கரத்திற்கும்
பகலில் பறக்கும் அம்புக்கும்
இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்
நீ பயப்படவே மாட்டாய்
Iravin payangaraththirkum
Pagalil parakkum ambukkum
Irulil nadamaadum kollai noykkum
Nee payappadavae maattaay
Verse 4
சிங்கத்தின் மேலும் நடந்து
வலு சர்ப்பத்தையும் மிதிப்பாய்
அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால்
உன்னை விடுவித்துக் காத்திடுவார்
Singaththin maelum nadanthu
Valu sarppaththaiyum mithippaay
Avar naamaththai nee mutrum nambinathaal
Unnai viduviththuk kaaththiduvaar
Verse 5
ஆபத்திலும் அவரை நீ
நோக்கிக் கூப்பிடும் வேளையிலும்
உன்னைத் தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே
உன் ஆத்தும நேசரவர்
Aabaththilum avarai nee
Nokkik kooppidum vaelaiyilum
Unnaith thappuviththae mutrum ratchippaarae
Un aaththuma naesaravar
Verse 6
கர்த்தருக்குப் பயப்பட்டவன்
இவ்வித ஆசீர்வாதம் பெறுவான்
கர்த்தர் சீயோனில் இருந்து உன்னை
கடைசி மட்டும் ஆசீர்வதிப்பார்
Karththarukkup payappattavan
Ivvitha aaseervaatham peruvaan
Karththar seeyonil irunthu unnai
Kadaisi mattum aaseervathippaar
Karthar Un Veettai Kattaragil PPT – PowerPoint Slides
Download கர்த்தர் உன் வீட்டைக் கட்டாராகில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.