Job 10 in Tamil
யோபு 10
- 1
என் ஆத்துமா ஜீவனை ஆரோசிக்கிறது, நான் என் துயரத்துக்கு எனக்குள்ளே இடங்கொடுத்து, என் மனச்சஞ்சலத்தினாலே பேசுவேன்.
My soul is weary of my life; I will leave my complaint upon myself; I will speak in the bitterness of my soul.
- 2
நான் தேவனை நோக்கி: என்னைக் குற்றவாளியென்று தீர்க்காதிரும்; நீர் எதினிமித்தம் என்னோடே வழக்காடுகிறீர், அதை எனக்குத் தெரியப்படுத்தும் என்பேன்.
I will say unto God, Do not condemn me; shew me wherefore thou contendest with me.
- 3
நீர் என்னை ஒடுக்கி, உம்முடைய கைகளின் கிரியையை வெறுத்து, துன்மார்க்கரின் யோசனையைக் கிருபையாய்ப் பார்க்கிறது உமக்கு நன்றாயிருக்குமோ?
[Is it] good unto thee that thou shouldest oppress, that thou shouldest despise the work of thine hands, and shine upon the counsel of the wicked?
- 4
மாம்சக் கண்கள் உமக்கு உண்டோ? மனுஷன் பார்க்கிறபிரகாரமாய்ப் பார்க்கிறீரோ?
Hast thou eyes of flesh? or seest thou as man seeth?
- 5
நீர் என் அக்கிரமத்தைக் கிண்டிக்கிளப்பி, என் பாவத்தை ஆராய்ந்து விசாரிக்கிறதற்கு,
[Are] thy days as the days of man? [are] thy years as man’s days,
- 6
உம்முடைய நாட்கள் ஒரு மனுஷனுடைய நாட்களைப்போலவும், உம்முடைய வருஷங்கள் ஒரு புருஷனுடையஜீவகாலத்தைப்போலவும் இருக்கிறதோ?
That thou enquirest after mine iniquity, and searchest after my sin?
- 7
நான் துன்மார்க்கன் அல்ல என்பது உமக்குத் தெரியும்; உம்முடைய கைக்கு என்னைத் தப்புவிக்கிறவன் இல்லை.
Thou knowest that I am not wicked; and [there is] none that can deliver out of thine hand.
- 8
உம்முடைய கரங்கள் என்னையும் எனக்குரிய எல்லாவற்றையும் உருவாக்கிப் படைத்திருந்தும், என்னை நிர்மூலமாக்குகிறீர்.
Thine hands have made me and fashioned me together round about; yet thou dost destroy me.
- 9
களிமண்போல என்னை உருவாக்கினீர் என்பதையும், என்னைத் திரும்பத் தூளாகப்போகப்பண்ணுவீர் என்பதையும் நினைத்தருளும்.
Remember, I beseech thee, that thou hast made me as the clay; and wilt thou bring me into dust again?
- 10
நீர் என்னைப் பால்போல் வார்த்து, தயிர்போல் உறையப்பண்ணினீர் அல்லவோ?
Hast thou not poured me out as milk, and curdled me like cheese?
- 11
தோலையும் சதையையும் எனக்குத் தரித்து, எலும்புகளாலும் நரம்புகளாலும் என்னை இசைத்தீர்.
Thou hast clothed me with skin and flesh, and hast fenced me with bones and sinews.
- 12
எனக்கு ஜீவனைத் தந்ததும் அல்லாமல், தயவையும் எனக்குப் பாராட்டினீர்; உம்முடைய பராமரிப்பு என் ஆவியைக் காப்பாற்றினது.
Thou hast granted me life and favour, and thy visitation hath preserved my spirit.
- 13
இவைகள் உம்முடைய உள்ளத்தில் மறைந்திருந்தாலும், இது உமக்குள் இருக்கிறது என்று அறிவேன்.
And these [things] hast thou hid in thine heart: I know that this [is] with thee.
- 14
நான் பாவஞ்செய்தால், அதை நீர் என்னிடத்தில் விசாரித்து, என் அக்கிரமத்தை என்மேல் சுமத்தாமல் விடீர்.
If I sin, then thou markest me, and thou wilt not acquit me from mine iniquity.
- 15
நான் துன்மார்க்கனாயிருந்தால் எனக்கு ஐயோ! நான் நீதிமானாயிருந்தாலும் என் தலையை நான் எடுக்க மாட்டேன்; அவமானத்தால் நிரப்பப்பட்டேன்; நீர் என் சிறுமையைப் பார்த்தருளும், அது அதிகரிக்கிறது.
If I be wicked, woe unto me; and [if] I be righteous, [yet] will I not lift up my head. [I am] full of confusion; therefore see thou mine affliction;
- 16
சிங்கத்தைப்போல என்னை வேட்டையாடி, எனக்கு விரோதமாய் உமது அதிசய வல்லமையை விளங்கப்பண்ணுகிறீர்.
For it increaseth. Thou huntest me as a fierce lion: and again thou shewest thyself marvellous upon me.
- 17
நீர் உம்முடைய சாட்சிகளை எனக்கு விரோதமாய் இரட்டிக்கப்பண்ணுகிறீர்; என்மேல் உம்முடைய கோபத்தை அதிகரிக்கப்பண்ணுகிறீர்; போராட்டத்தின்மேல் போராட்டம் அதிகரிக்கிறது.
Thou renewest thy witnesses against me, and increasest thine indignation upon me; changes and war [are] against me.
- 18
நீர் என்னைக் கர்ப்பத்திலிருந்துபுறப்படப்பண்ணினது என்ன? ஓரு கண்ணும் என்னைக் காணாதபடி, நான் அப்பொழுதே ஜீவித்துப்போனால் நலமாமே.
Wherefore then hast thou brought me forth out of the womb? Oh that I had given up the ghost, and no eye had seen me!
- 19
நான் ஒருக்காலும் இல்லாததுபோலிருந்து, கர்ப்பத்திலிருந்து பிரேதக்குழிக்குக் கொண்டுபோகப்பட்டிருப்பேன்.
I should have been as though I had not been; I should have been carried from the womb to the grave.
- 20
என் நாட்கள் கொஞ்சமல்லவோ?
[Are] not my days few? cease [then, and] let me alone, that I may take comfort a little,
- 21
காரிருளும் மரணாந்தகாரமுமான இருண்ட தேசமும், இருள்சூழ்ந்த ஒழுங்கில்லாத மரணாந்தகாரமுள்ளதேசமும், ஒளியும் இருளாகும் தேசமுமாகிய, போனால் திரும்பிவராத தேசத்துக்கு, நான் போகுமுன்னே,
Before I go [whence] I shall not return, [even] to the land of darkness and the shadow of death;
- 22
நான் சற்று இளைப்பாறும்படிநீர் என்னைவிட்டு ஓய்ந்திரும் என்றான்.
A land of darkness, as darkness [itself; and] of the shadow of death, without any order, and [where] the light [is] as darkness.