Job 19 in Tamil
யோபு 19
- 1
யோபு பிரதியுத்தரமாக:
Then Job answered and said,
- 2
நீங்கள் எந்தமட்டும் என் ஆத்துமாவை வருத்தப்படுத்தி, வார்த்தைகளினால் என்னை நொறுக்குவீர்கள்?
How long will ye vex my soul, and break me in pieces with words?
- 3
இப்போது பத்துதரம் என்னை நிந்தித்தீர்கள்; நீங்கள் எனக்குக் கடினமுகம் காண்பிக்கிறதினால் உங்களுக்கு வெட்கமில்லை.
These ten times have ye reproached me: ye are not ashamed [that] ye make yourselves strange to me.
- 4
நான் தப்பிநடந்தது மெய்யானாலும், என் தப்பிதம் என்னோடேதான் இருக்கிறது.
And be it indeed [that] I have erred, mine error remaineth with myself.
- 5
நீங்கள் எனக்கு விரோதமாகப் பெருமைபாராட்டி, எனக்கு நிந்தையாக என்னைக் கடிந்துகொள்ளவேண்டும் என்றிருப்பீர்களாகில்,
If indeed ye will magnify [yourselves] against me, and plead against me my reproach:
- 6
தேவன் என்னைக் கவிழ்த்து, தம்முடைய வலையை என்மேல் வீசினார் என்று அறியுங்கள்.
Know now that God hath overthrown me, and hath compassed me with his net.
- 7
இதோ, கொடுமை என்று கூப்பிடுகிறேன், கேட்பார் ஒருவரும் இல்லை; கூக்கூரலிடுகிறேன், நியாயவிசாரணை இல்லை.
Behold, I cry out of wrong, but I am not heard: I cry aloud, but [there is] no judgment.
- 8
நான் கடந்துபோகக்கூடாதபடிக்கு அவர் என் பாதையை வேலியடைத்து, என் வழிகளை இருளாக்கிவிட்டார்.
He hath fenced up my way that I cannot pass, and he hath set darkness in my paths.
- 9
என்னிலிருந்த என் மகிமையை அவர் உரிந்துகொண்டு, என் சிரசின் கிரீடத்தை எடுத்துப்போட்டார்.
He hath stripped me of my glory, and taken the crown [from] my head.
- 10
அவர் என்னை நான்குபுறத்திலும்நாசமாக்கினார், நான் அற்றுப்போகிறேன்; என் நம்பிக்கையை ஒரு செடியைப்போலப் பிடுங்கிப்போட்டார்.
He hath destroyed me on every side, and I am gone: and mine hope hath he removed like a tree.
- 11
அவர் தமது கோபத்தை என்மேல் எரியப்பண்ணினார்; என்னைத் தம்முடைய சத்துருக்களில் ஒருவனாக எண்ணிக்கொள்ளுகிறார்.
He hath also kindled his wrath against me, and he counteth me unto him as [one of] his enemies.
- 12
அவருடைய தண்டுப்படைகள் ஏகமாய் வந்து, எனக்கு விரோதமாய்த் தங்கள் வழியை உயர்த்தி, என் கூடாரத்தைச் சுற்றிப் பாளயமிறங்கினார்கள்.
His troops come together, and raise up their way against me, and encamp round about my tabernacle.
- 13
என் சகோதரரை என்னைவிட்டுத் தூரப்படுத்தினார்; எனக்கு அறிமுகமானவர்கள் எனக்கு அந்நியராய்ப் போனார்கள்.
He hath put my brethren far from me, and mine acquaintance are verily estranged from me.
- 14
என் பந்துஜனங்கள் விலகிப்போனார்கள்; என் சிநேகிதர் என்னை மறந்துவிட்டார்கள்.
My kinsfolk have failed, and my familiar friends have forgotten me.
- 15
என் வீட்டு ஜனங்களும், என் வேலைக்காரிகளும், என்னை அந்நியனாக எண்ணுகிறார்கள்; அவர்கள் பார்வைக்கு நான் பரதேசியானேன்.
They that dwell in mine house, and my maids, count me for a stranger: I am an alien in their sight.
- 16
நான் என் வேலைக்காரனைக் கூப்பிடுகிறபோது அவன் எனக்கு உத்தரவுகொடான்; என் வாயினால் நான் அவனைக் கெஞ்சவேண்டியதாயிற்று.
I called my servant, and he gave [me] no answer; I intreated him with my mouth.
- 17
என் சுவாசம் என் மனைவிக்கு வேறுபட்டிருக்கிறது; என் கர்ப்பத்தின் பிள்ளைகளுக்காகப் பரிதபிக்கிறேன்.
My breath is strange to my wife, though I intreated for the children’s [sake] of mine own body.
- 18
சிறுபிள்ளைகளும் என்னை அசட்டைபண்ணுகிறார்கள்; நான் எழுந்தால், அவர்கள் எனக்கு விரோதமாய்ப் பேசுகிறார்கள்.
Yea, young children despised me; I arose, and they spake against me.
- 19
என் பிராணசிநேகிதர் எல்லாரும் என்னை வெறுக்கிறார்கள்; நான் சிநேகித்தவர்கள் எனக்கு விரோதிகளானார்கள்.
All my inward friends abhorred me: and they whom I loved are turned against me.
- 20
என் எலும்புகள் என் தோலோடும் என் மாம்சத்தோடும் ஒட்டிக்கொண்டிருக்கிறது; என் பற்களை மூடக் கொஞ்சம் தோல்மாத்திரம் தப்பினது.
My bone cleaveth to my skin and to my flesh, and I am escaped with the skin of my teeth.
- 21
என் சிநேகிதரே, எனக்கு இரங்குங்கள், எனக்கு இரங்குங்கள்; தேவனுடைய கை என்னைத் தொட்டது.
Have pity upon me, have pity upon me, O ye my friends; for the hand of God hath touched me.
- 22
தேவனைப்போல நீங்களும் என்னைத் துன்பப்படுத்துவானேன்? என் மாம்சம் பட்சிக்கப்பட்டாலும் நீங்கள் திருப்தியற்றிருக்கிறதென்ன?
Why do ye persecute me as God, and are not satisfied with my flesh?
- 23
ஆ, நான் இப்பொழுது சொல்லும் வார்த்தைகள் எழுதப்பட்டால் நலமாயிருக்கும்; அவைகள் ஒரு புஸ்தகத்தில் வரையப்பட்டு,
Oh that my words were now written! oh that they were printed in a book!
- 24
அல்லது என்றைக்கும் நிலைக்க அவைகள் கருங்கல்லிலே உளிவெட்டாகவும் ஈய எழுத்தாகவும் பதிந்தால் நலமாயிருக்கும்.
That they were graven with an iron pen and lead in the rock for ever!
- 25
என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசிநாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்.
For I know [that] my redeemer liveth, and [that] he shall stand at the latter [day] upon the earth:
- 26
இந்த என் தோல்முதலானவை அழுகிப்போனபின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன்.
And [though] after my skin [worms] destroy this [body], yet in my flesh shall I see God:
- 27
அவரை நானே பார்ப்பேன்; அந்நிய கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும்; இந்த வாஞ்சையால் என் உள்ளிந்திரியங்கள் எனக்குள் சோர்ந்துபோகிறது.
Whom I shall see for myself, and mine eyes shall behold, and not another; [though] my reins be consumed within me.
- 28
காரியத்தின் மூலம் எனக்குள் கண்டுபிடிக்கப்படுகையில், நாம் ஏன் அவனைத் துன்பப்படுத்துகிறோம் என்று நீங்கள் சொல்லவேண்டிய தாமே.
But ye should say, Why persecute we him, seeing the root of the matter is found in me?
- 29
பட்டயத்துக்குப் பயப்படுங்கள்; நியாயத்தீர்ப்பு உண்டென்கிறதை நீங்கள் அறியும்பொருட்டு, மூர்க்கமானதுபட்டயத்தினால் உண்டாகும் ஆக்கினையை வரப்பண்ணும் என்றான்.
Be ye afraid of the sword: for wrath [bringeth] the punishments of the sword, that ye may know [there is] a judgment.