Job 20 in Tamil
யோபு 20
- 1
அப்பொழுது நாகமாத்தியனான சோப்பார் பிரதியுத்தரமாக:
Then answered Zophar the Naamathite, and said,
- 2
இதற்காக மறு உத்தரவு கொடுக்க என் சிந்தனைகள் என்னை ஏவகிறபடியால் நான் தீவிரித்துச் சொல்லுகிறேன்.
Therefore do my thoughts cause me to answer, and for [this] I make haste.
- 3
நிந்தித்தேன் என்று நான் கடிந்து கொள்ளப்பட்டதைக் கேட்டேன்; ஆனாலும் உணர்வினால் என் ஆவி பிரதியுத்தரம் சொல்ல என்னை ஏவுகிறது.
I have heard the check of my reproach, and the spirit of my understanding causeth me to answer.
- 4
துன்மார்க்கனின் கெம்பீரம் குறுகினது என்பதையும், மாயக்காரனின் சந்தோஷம் ஒரு நிமிஷம்மாத்திரம்நிற்கும் என்பதையும்,
Knowest thou [not] this of old, since man was placed upon earth,
- 5
அவர் மனுஷனைப் பூமியில் வைத்த ஆதிகாலமுதல் இப்படியிருக்கிறது என்பதையும் நீர் அறியீரோ?
That the triumphing of the wicked [is] short, and the joy of the hypocrite [but] for a moment?
- 6
அவனுடைய மேன்மை வானபரியந்தம் உயர்ந்தாலும், அவனுடைய தலை மேகங்கள்மட்டும் எட்டினாலும்,
Though his excellency mount up to the heavens, and his head reach unto the clouds;
- 7
அவன் தன் மலத்தைப்போல என்றைக்கும் அழிந்துபோவான்; அவனைக் கண்டவர்கள், அவன் எங்கே? என்பார்கள்.
[Yet] he shall perish for ever like his own dung: they which have seen him shall say, Where [is] he?
- 8
அவன் ஒரு சொப்பனத்தைப்போல் பறந்துபோய்க் காணப்படாதவனாவான்; இரவில் தோன்றும் தரிசனத்தைப்போல் பறக்கடிக்கப்படுவான்.
He shall fly away as a dream, and shall not be found: yea, he shall be chased away as a vision of the night.
- 9
அவனைப் பார்த்த கண் இனி அவனைப் பார்ப்பதில்லை; அவன் இருந்த ஸ்தலம் இனி அவனைக் காண்பதில்லை.
The eye also [which] saw him shall [see him] no more; neither shall his place any more behold him.
- 10
அவன் பிள்ளைகள் எளிமையானவர்களின் சகாயத்தைத் தேடுவார்கள்; அவன் பறித்ததை அவன் கைகள் திரும்பக் கொடுக்கவேண்டியதாகும்.
His children shall seek to please the poor, and his hands shall restore their goods.
- 11
அவன் எலும்புகள் அவனுடைய வாலவயதின் பாவங்களினால் நிறைந்திருந்து, அவனோடேகூட மண்ணிலே படுத்துக்கொள்ளும்.
His bones are full [of the sin] of his youth, which shall lie down with him in the dust.
- 12
பொல்லாப்பு அவன் வாயிலே இனிமையாயிருப்பதால், அவன் அதைத் தன் நாவின்கீழ் அடக்கி,
Though wickedness be sweet in his mouth, [though] he hide it under his tongue;
- 13
அதை விடாமல் பதனம்பண்ணி, தன் வாய்க்குள்ளே வைத்துக்கொண்டிருந்தாலும்,
[Though] he spare it, and forsake it not; but keep it still within his mouth:
- 14
அவன் போஜனம் அவன் குடல்களில் மாறி, அவனுக்குள் விரியன்பாம்புகளின் பிச்சாய்ப்போகும்.
[Yet] his meat in his bowels is turned, [it is] the gall of asps within him.
- 15
அவன் விழுங்கின ஆஸ்தியைக் கக்குவான்; தேவன் அதை அவன் வயிற்றிலிருந்து வெளியே தள்ளிவிடுவார்.
He hath swallowed down riches, and he shall vomit them up again: God shall cast them out of his belly.
- 16
அவன் விரியன் பாம்புகளின் விஷத்தை உறிஞ்சுவான்; விரியனின் நாக்கு அவனைக் கொல்லும்.
He shall suck the poison of asps: the viper’s tongue shall slay him.
- 17
தேனும் நெய்யும் ஓடும் வாய்க்கால்களையும் ஆறுகளையும் அவன் காண்பதில்லை.
He shall not see the rivers, the floods, the brooks of honey and butter.
- 18
தான் பிரயாசப்பட்டுத் தேடினதை அவன் விழுங்காமல் திரும்பக் கொடுப்பான்; அவன் திரும்பக் கொடுக்கிறது அவன் ஆஸ்திக்குச் சரியாயிருக்கும்; அவன் களிகூராதிருப்பான்.
That which he laboured for shall he restore, and shall not swallow [it] down: according to [his] substance [shall] the restitution [be], and he shall not rejoice [therein].
- 19
அவன் ஒடுக்கி, ஏழைகளைக் கை விட்டு, தான் கட்டாத வீட்டைப் பறித்தபடியினாலும்,
Because he hath oppressed [and] hath forsaken the poor; [because] he hath violently taken away an house which he builded not;
- 20
தன் வயிறு திருப்தியற்றிருந்தபடியினாலும், அவன் இச்சித்த காரியங்களில் அவனுக்கு ஒன்றும் இருப்பதில்லை.
Surely he shall not feel quietness in his belly, he shall not save of that which he desired.
- 21
அவன் போஜனத்தில் ஒன்றும் மீதியாவதில்லை; ஆகையால் அவன் ஆஸ்தி நிலைநிற்பதில்லை.
There shall none of his meat be left; therefore shall no man look for his goods.
- 22
அவன் வேண்டுமென்கிற பரிபூரணம் அவனுக்கு வந்தபின், அவனுக்குவியாகுலம் உண்டாகும்; சிறுமைப்படுகிற ஒவ்வொருவருடைய கையும் அவன்மேல் வரும்.
In the fulness of his sufficiency he shall be in straits: every hand of the wicked shall come upon him.
- 23
தன் வயிற்றை நிரப்பத்தக்கது இன்னும் அவனுக்கு இருந்தாலும், அவர் அவன்மேல் தமது கோபத்தின் உக்கிரத்தை வரவிட்டு, அவன் போஜனம்பண்ணுகையில், அதை அவன்மேல் சொரியப்பண்ணுவார்.
[When] he is about to fill his belly, [God] shall cast the fury of his wrath upon him, and shall rain [it] upon him while he is eating.
- 24
இருப்பு ஆயுதத்துக்கு அவன் தப்பியோடினாலும் உருக்குவில் அவனை உருவ எய்யும்.
He shall flee from the iron weapon, [and] the bow of steel shall strike him through.
- 25
உருவின பட்டயம் அவன் சரீரத்தையும், மின்னுகிற அம்பு அவன் பிச்சையும் உருவிப்போகும்; பயங்கரங்கள் அவன்மேல் வரும்.
It is drawn, and cometh out of the body; yea, the glittering sword cometh out of his gall: terrors [are] upon him.
- 26
அவன் ஒளிக்கும் இடங்களில் காரிருள் அடங்கியிருக்கும்; அவியாத அக்கினி அவனைப் பட்சிக்கும்; அவன் கூடாரத்தில் மீதியாயிருக்கிறவன் தீங்கு அனுபவிப்பான்.
All darkness [shall be] hid in his secret places: a fire not blown shall consume him; it shall go ill with him that is left in his tabernacle.
- 27
வானங்கள் அவன் அக்கிரமத்தை வெளிப்படுத்தி, பூமி அவனுக்கு விரோதமாக எழும்பும்.
The heaven shall reveal his iniquity; and the earth shall rise up against him.
- 28
அவன் வீட்டின் சம்பத்துப் போய்விடும்; அவருடைய கோபத்தின் நாளிலே அவைகள் கரைந்துபோகும்.
The increase of his house shall depart, [and his goods] shall flow away in the day of his wrath.
- 29
இதுவே தேவனால் துன்மார்க்கனுக்குக் கிடைக்கும் பங்கும், அவன் செய்கைக்குத் தேவனால் அவனுக்கு வரும் சுதந்தரமுமாம் என்றான்.
This [is] the portion of a wicked man from God, and the heritage appointed unto him by God.