Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 23 in Tamil

Present
  1. 1

    யோபு பிரதியுத்தரமாக:

    Then Job answered and said,

  2. 2

    இன்றையதினமும் என் அங்கலாய்ப்பு முரண்டுத்தனமாக எண்ணப்படுகிறது; என் தவிப்பைப்பார்க்கிலும் என் வாதை கடினமானது.

    Even to day [is] my complaint bitter: my stroke is heavier than my groaning.

  3. 3

    நான் அவரை எங்கே கண்டு சந்திக்கலாம் என்பதை அறிந்தால் நலமாயிருக்கும்; அப்பொழுது நான் அவர் ஆசனத்துக்கு முன்பாக வந்து சேர்ந்து,

    Oh that I knew where I might find him! [that] I might come [even] to his seat!

  4. 4

    என் நியாயத்தை அவருக்கு முன்பாக வரிசையாய் வைத்து, காரியத்தைரூபிக்கும் வார்த்தைகளால் என் வாயை நிரப்புவேன்.

    I would order [my] cause before him, and fill my mouth with arguments.

  5. 5

    அவருடைய மறுமொழிகளை நான் அறிந்து, அவர் எனக்குச் சொல்வதை உணர்ந்துகொள்ளுவேன்.

    I would know the words [which] he would answer me, and understand what he would say unto me.

  6. 6

    அவர் தம்முடைய மகா வல்லமையின்படியே என்னோடே வழக்காடுவாரோ? அவர் அப்படிச் செய்யாமல் என்மேல் தயை வைப்பார்.

    Will he plead against me with [his] great power? No; but he would put [strength] in me.

  7. 7

    அங்கே சன்மார்க்கன் அவரோடே வழக்காடலாம்; அப்பொழுது என்னை நியாயந்தீர்க்கிறவரின் கைக்கு என்றைக்கும் நீங்கலாய்த் தப்புவித்துக் கொள்வேன்.

    There the righteous might dispute with him; so should I be delivered for ever from my judge.

  8. 8

    இதோ, நான் முன்னாகப்போனாலும் அவர் இல்லை; பின்னாகப்போனாலும் அவரைக் காணேன்.

    Behold, I go forward, but he [is] not [there;] and backward, but I cannot perceive him:

  9. 9

    இடதுபுறத்தில் அவர் கிரியை செய்தும் அவரைக் காணேன்; வலதுபுறத்திலும் நான் அவரைக் காணாதபடிக்கு ஒளித்திருக்கிறார்.

    On the left hand, where he doth work, but I cannot behold [him:] he hideth himself on the right hand, that I cannot see [him:]

  10. 10

    ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்.

    But he knoweth the way that I take: [when] he hath tried me, I shall come forth as gold.

  11. 11

    என் கால்கள் அவர் அடிகளைப் பற்றிப்பிடித்தது; அவருடைய நெறியைவிட்டு நான் சாயாமல் அதைக் கைக்கொண்டேன்.

    My foot hath held his steps, his way have I kept, and not declined.

  12. 12

    அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை; அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப்பார்க்கிலும் அதிகமாய்க் காத்துக்கொண்டேன்.

    Neither have I gone back from the commandment of his lips; I have esteemed the words of his mouth more than my necessary [food].

  13. 13

    அவரோவென்றால் ஒரே மனமாயிருக்கிறார்; அவரைத் திருப்பத்தக்கவர் யார்? அவருடைய சித்தத்தின்படியெல்லாம் செய்வார்.

    But he [is] in one [mind], and who can turn him? and [what] his soul desireth, even [that] he doeth.

  14. 14

    எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்; இப்படிப்பட்டவைகள் இன்னும் அநேகம் அவரிடத்தில் உண்டு.

    For he performeth [the thing that is] appointed for me: and many such [things are] with him.

  15. 15

    ஆகையால் அவருக்கு முன்பாகக் கலங்குகிறேன்; நான் சிந்திக்கிறபோது, அவருக்குப் பயப்படுகிறேன்.

    Therefore am I troubled at his presence: when I consider, I am afraid of him.

  16. 16

    தேவன் என் இருதயத்தை இளக்கரிக்கப்பண்ணினார்; சர்வவல்லவர் என்னைக் கலங்கப்பண்ணினார்.

    For God maketh my heart soft, and the Almighty troubleth me:

  17. 17

    அந்தகாரம் வராததற்கு முன்னே நான் சங்கரிக்கப்டாமலும், இருளை அவர் எனக்கு மறைக்காமலும்போனதினால் இப்படியிருக்கிறேன்.

    Because I was not cut off before the darkness, [neither] hath he covered the darkness from my face.

All chapters of Job · Tamil Bible

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

King James Version: public domain.